Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• விஜய்சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கிறது, ‘சீதக்காதி’ திரைப்படம். இது, விஜய்சேதுபதிக்கு 25-வது படம். ஸ்பெஷல் டெடிகேஷனுடன் படக்குழு உழைத்துக்கொண்டிருக்கிறது. காயத்ரி, பார்வதி, ரம்யா நம்பீசன் ஆகியோருடன், முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.

மிஸ்டர் மியாவ்

• தான் நடித்த படம் வெற்றிபெற்றால், திரைத் துறைக்கு அல்லது பொதுநலனுக்கு எனக் குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்குவது விஜய்யின் வழக்கம். ‘மெர்சல்’ வெற்றியை அடுத்து, நடன இயக்குநர்கள் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.15 லட்சம் நன்கொடை வழங்கியிருக்கிறார், விஜய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

• திக்கித்திணறித் தமிழில் பேசுவார்என்றாலும், இப்போது தீவிரமாகத் தமிழ் கற்றுவருகிறார் ரகுல் ப்ரீத் சிங். “தமிழில் வாய்ப்புகள் நிறைய வருவது மட்டுமே காரணமல்ல. தமிழ் மொழிப் படங்களில் நடிக்கும்போது, கதையின் உணர்வைப் புரிந்துகொண்டு நடிக்கவேண்டும்” என்கிறார் ரகுல்.

• இயக்குநராக, நடிகராக சமுத்திரக்கனி பிஸி. சசிக்குமாரை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார் கனி. வரவேற்பைப் பெற்ற ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் அடுத்த படத்திலும், ‘பொறியாளன்’, ‘புகழ்’ படங்களின் இயக்குநர் மணிமாறன் இயக்கும் ‘சங்கத் தலைவன்’ படத்திலும் சமுத்திரக்கனிதான் ஹீரோ. தவிர, நான்கு கெட்அப்களில் நடித்திருக்கும் ‘ஏமாலி’ திரைப்படம் விரைவில் ரிலீஸ்.

மிஸ்டர் மியாவ்

• நயன்தாராவுக்கு ‘அறம்’ படத்துக்குப் பிறகு, ‘வேலைக்காரன்’ ரிலீஸுக்கு ரெடி! தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்துக்கு அதிகம் மெனக்கெடுகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு. நயன்தாராவின் காட்சிகளை மையப்படுத்தி, டீஸரும் வெளியாகிறது.

மிஸ்டர் மியாவ்

• நடிகை ராய் லட்சுமியின் முதல் பாலிவுட் படம்  ‘ஜூலி-2’. ராய் லட்சுமியின் கிளாமர் போஸ்டரில் தொடங்கி, படத்தின் டீஸர், டிரெய்லர் வரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாகாமல் இருந்த படம், நவம்பர் 24-ம் தேதி நிச்சயம் ரிலீஸ். ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துப் படத்தைத் தமிழிலும், தெலுங்கிலும் டப் செய்து வெளியிட உள்ளனர்.

மியாவ் பதில்

‘‘மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்து, ஒரு பாடலையே  பாடியிருக்கிறாரே நடிகர் சிம்பு?”

“பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாகி,ஓராண்டு நிறைவடைந்ததைக் கறுப்பு நாளாக எதிர்க்கட்சிகள் அனுசரித்தன. சிம்புவோ, ‘தட்றோம்... தூக்குறோம்’ என்ற பாடலைப் பாடியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பட்ட துயரங்கள், விஜய் மல்லையா விவகாரம், ஜி.எஸ்.டி பாதிப்பு என மத்திய அரசின்மீது காட்டமான விமர்சனங்களை முன்வைக்கும் பாடலை, கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். பாடல், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. சிம்புவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. ஆனால், தமிழிசையும், ஹெச்.ராஜாவும் என்ன சொல்லப்போகிறார்களோ?”