Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

பாலிவுட் படமான ‘பத்மாவதி’க்கு ஆரம்பம் முதல் எழுந்த எதிர்ப்பு அலை இன்னும் ஓயவில்லை. சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையப்படுத்திய இப்படத்தில் பத்மினியாக தீபிகாவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடித்திருக்கிறார்கள். ராணியின் வாழ்வைத் தவறாகச் சித்திரித்து படத்தை உருவாக்கியிருப்பதாக, ராஜபுத்திர இனத்தினர் எதிர்க்கின்றனர். படத்தைத் தடைசெய்ய நீதிமன்றம் சென்றது பி.ஜே.பி. ஆனால், தடை கிடைக்கவில்லை. ‘‘நான் வரலாற்றைத் தவறாகச் சித்திரிக்கவோ, குறிப்பிட்ட சமூகத்தினரைக் காயப்படுத்தவோ இல்லை. ராணி பத்மாவதியின் துணிச்சலையும் தியாகத்தையும் உணர்த்தும் படம் இது’’ என்கிறார், படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. படம் டிசம்பர் 1-ம் தேதி ரிலீஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

டெலிகேட் மொமன்ட்

மல் மற்றும் அமிதாப்பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றி, ‘செல்ஃபி டைம் வித் டூ லெஜண்ட்ஸ்’ எனக் குறிப்பிட்டிருந்தார், நடிகை காஜோல். ஆனால், அது செல்ஃபி இல்லை. ‘இது செல்ஃபியா?’ எனத் தொடங்கி, ‘இதெப்படி செல்ஃபி ஆகும்?’ என்பதுவரை கலாய் கமென்ட்களாக நீண்டுகொண்டிருக்க, ‘காஜோலை விட்டுடுங்க ப்ளீஸ்’ என கமல் தனி ட்வீட் தட்டியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘அறம்’ படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா. பொதுவாக நடிகர்கள் மட்டுமே தங்களது படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு விசிட் அடிப்பது வழக்கம். ‘அறம்’ படத்துக்காக நயன்தாராவும் இதைப் பின்பற்றி தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து ரசித்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

கமிட் ஆகியிருக்கும் ‘யங்  மங் சங்’ படத்தின்  வேலைகள் சுணக்கத்தில்  இருக்க, கிடைத்த கேப்பில்   உடலைக் குறைக்கும்  முயற்சிகளிலும், படிப்பைத்  தொடரும் முயற்சிகளிலும்  பிஸியாக இருக்கிறார்  லட்சுமி மேனன்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

நமீதாவுக்கும், அவரின் நீண்டநாள் நண்பர் வீராவுக்கும் வருகிற 24-ம் தேதி திருமணம். ‘‘இருவருமே பயணங்களையும் விலங்குகளையும் நேசிப்பவர்கள். இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்’’ என நெகிழ்கிறார் நமீதா. நடிகரும், தயாரிப்பாளருமான வீரா இப்போது ‘மியா’ என்ற படத்தில் நமீதாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மிஸ்டர் மியாவ்

விளக்கம் ப்ளீஸ்!

‘‘கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன்’’ - காது தேயக் கேட்ட நடிகைகளின் டெம்ப்ளேட் பதில் இது. ‘கதைக்குத் தேவையான கவர்ச்சி அல்லது கதைக்குத் தேவைப்படும் கவர்ச்சி என்றால் என்ன?’

மிஸ்டர் மியாவ்

வைரல்

சிம்புவின் புதிய கெட்டப் செம வைரல். பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டிக்கும் ‘டீமானிடைசேஷன்’ பாடல், முதல்முறையாக இசையமைத்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல்கள் என இரண்டுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ். புது கெட்டப்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்ட சிம்பு, ‘‘இந்த கெட்டப் படத்துக்காக அல்ல. வேற ஒரு விஷயம் இருக்கு” என ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.