“ஆமா, மின்னல் மாதிரியே ஃப்ளையிங் விசிட்தான். ஏன்னா, சென்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இங்க வர்றதுக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டேன். இப்போதான் என் ஃப்ரெண்டைச் சந்திக்க வந்தேன். சாயங்காலம் மும்பை திரும்பிடுவேன்” என்று சென்னையைப் பற்றி மதுபாலா பேசும்போது அத்தனை உற்சாகம். அந்த மகிழ்ச்சி கொஞ்சமும் குறையாமல் சினிமா, சீரியல், குடும்பம் என ஒவ்வொன்றைப் பற்றியும் பேசத் தொடங்குகிறார்.

சினிமா, மீடியா பரபரப்பையெல்லாம் தாண்டி, வாழ்க்கை எப்படி இருக்கு?

``இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னதும், ஆன்மிகச் சொற்பொழிவு பண்ற மாதிரி நினைப்பீங்க. நான் இந்த நொடியில் கிடைக்கிற சந்தோஷத்தின்மீது தீவிர நம்பிக்கையுள்ள ஆள். இப்போதான் ‘ஆரம்ப்’ டி.வி சீரியல் பண்ணி முடிச்சேன். அதுக்கு முன்னால ‘சப் டிக் ஹெய்ன்'னு ஒரு குறும்படம் பண்ணேன். அந்தக் குறும்படம் நிறைய போட்டிகள்ல கலந்து கிட்டு, நிறைய பாராட்டுகளையும் வாங்கிக் கொடுத்திருக்கு. இதையெல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணிப் பண்ணேன். வேலை செய்யும்போது, எல்லா எண்ணமும் அதுபற்றி மட்டுமே இருக்கும்.வேலை எதுவும் இல்லேன்னா... சென்னை, பார்ட்டிக்குப் போறது, என் பொண்ணுங்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கறது, யோகா பண்றது... இப்படிப் பல வேலைகள் இருக்கும். போர் அடிக்காத அளவுக்கு நிறைய பொழுதுபோக்கும் உண்டு. திடீர்னு பியானோ கத்துப்பேன், டான்ஸ் கத்துப்பேன். ‘Either you earn or learn’ - இதுதான் என் எண்ணம். மீடியா வேலைகள் இல்லைன்னா, எனக்குனு தனியா ஒரு வாழ்க்கை உண்டு.''

‘பாகுபலி’ சிவகாமியின் சீரியல் வெர்ஷனில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

``அந்த வாய்ப்பு கிடைச்சதே செம காமெடியான சம்பவம். நான் நியூயார்க்ல இருந்தப்போ, அந்த சீரியல் இயக்குநர் கோல்டி பெல் எனக்கு போன் பண்ணார். என் நண்பர்தான். வழக்கமா ஒரு சீரியல் பண்றோம்னா, சம்பந்தப்பட்ட சேனல்ல லுக் டெஸ்ட், ஆடிஷன்னு நிறைய விஷயங்கள் நடக்கும்ல. அவர் என்கிட்ட பேச ஆரம்பிச்சதுமே ‘நீ இந்த ரோல்ல நடிக்குற, உனக்கு காஸ்ட்டியூம் ரெடி பண்ணணும்’னு சொன்னார். ‘பாகுபலி’யில வர்ற சிவகாமி ரோல்தான் உனக்கு’னு சொன்னதும் சிரிக்க ஆரம்பிச்சிட்டேன். ஏன்னா, ரம்யா கிருஷ்ணன் என்னுடைய பெஸ்ட் ஃப்ரெண்ட். உடனே ரம்யாவுக்கு போன் பண்ணி, ‘உன்னை மாதிரி நடிக்கச் சொல்றாங்க. நான் என்ன பண்ணட்டும்’னு கேட்டேன். அதைக் கேட்டு ரம்யாவும் சிரிச்சுட்டு, ‘ஒண்ணும் பண்ணாத, கண்ணை மட்டும் பெருசாக்கிட்டு, நல்லா முறைச்சுப் பாரு’னு சொன்னாங்க. முதல்நாள் ஆரம்பிச்சு, சீரியல் முடியற வரை ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்சேன். ஏன்னா, சினிமாவுலகூட அந்தக் கதாபாத்திரம் சிங்கிள் ரோல்தான். சீரியல்ல எனக்கு டபுள் ரோல். கெட்டப், மேக்கப்னு எதுலேயும் ரெண்டு ரோலுக்கும் மாற்றம் கிடையாது. நடிப்புல மட்டுமே வித்தியாசத்தைக் காட்டணும். அந்தச் சவால் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.''

‘இருவர்’ படத்துல ஒரு பாட்டு, பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘வாயை மூடி பேசவும்’ படத்துல சின்ன கேரக்டர்ல நடிச்சிருந்தீங்க. மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகையா இருந்தும் தொடர்ந்து தமிழ்ல நடிக்கவே இல்லையே ஏன்?

``அப்பவும் இப்பவும் நிறைய வாய்ப்பு வந்துட்டுதான் இருக்கு. ஆனா, நான் நினைச்சு வெச்சிருக்கிற கேரக்டர்கள் அமையலை. வேலை செய்றதுக்கு நான் எப்பவும் தயாராதான் இருப்பேன். ‘இந்தப் படத்துக்கு நான் செட் ஆவேனா, மாட்டேனா’னு முடிவு பண்றதுக்குள்ள நிறைய இடைவெளி விழுந்துடும். ரஜினி சார் படத்துல, விஜய் சார் படத்துல மதுபாலா நடிக்கிறாங்கங்கிற மாதிரி ஒரு என்ட்ரி இருக்கணும்னு ஆசை.''

தமிழ்ல ஜோதிகா, மலையாளத்தில் மஞ்சு வாரியர், இந்தியில் வித்யா பாலன் மாதிரி நிறைய நடிகைகள் பெண்களை மையமாக வைத்து உருவாகும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறாங்க. உங்களுக்கு அந்த மாதிரி ஐடியா இருக்கா?

``நிச்சயம் இருக்கு. இன்னும் சொல்லப் போனா, பெண்களை மையப்படுத்துற கதைக்கு இயக்குநர் ஒரு பெண்ணாகவும் இருந்தா, ரொம்பவே சந்தோஷம். நான் நிறைய படங்கள் நடிச்சிருந்தாலும், ஆண்களோட பாயின்ட் ஆஃப் வியூல தான் என் கேரக்டர்ஸ் அமைஞ்சிருக்கு. ரேவதி மேடம் இந்தியில ‘பிர் மிலேங்கே’னு ஒரு படம் இயக்கினாங்க. அந்தப் படம் பார்த்ததுல இருந்து அவங்க இயக்கத்துல நடிக்க எனக்கு ஆசையா இருக்கு. மூணு, நாலு வருஷங்கள் முன்னால நாமளே ஒரு படம் இயக்கலாம்னுகூட தோணுச்சு. ‘நான் சப்போர்ட் பண்றேன், நீ டைரக்ஷன் பண்ணு’ன்னு சென்னையில கேமராமேனா இருக்கிற நண்பர் ஒருவர் சொன்னார். ஆனா, நமக்கு டைரக்ஷனுக்கான நுணுக்கம் தெரியாதேன்னு பின் வாங்கிட்டேன்!''

பாலசந்தர், மணிரத்னம், ஷங்கர், ஐ.வி.சசி, ராகவேந்தர் ராவ்... இப்படிப் பல பெரிய இயக்குநர்களுடைய படங்கள் மூலமா உங்க சினிமா பயணம் அமைஞ்சது, அது பற்றி..?

``அது எனக்கு எவ்ளோ பெரிய ஆசீர்வாதம்னு இப்போதான் தெரியுது. நான் அப்போ ரொம்பச் சின்னப் பொண்ணு. என் முதல் படம் ‘அழகன்’. கே.பி சார் எனக்கு நடிப்பு சொல்லித் தரலை. ஆனா, அவருக்குத் தேவையான மாதிரி என்னை நடிக்க வெச்சார். ‘தலையைக் கீழ வெச்சுட்டு கண்ணை மட்டும் மேல பாரு’னு சொல்வார். ‘எதுக்கு அப்படி சொல்றாரு’னு அப்போ எனக்குத் தெரியாது. ஸ்க்ரீன்ல பார்க்கும்போதுதான், அதுக்கான காரணம் என்ன, ஏன்னு எனக்குப் புரியும். மணி சார் அதுக்கு அப்படியே நேரெதிர். கதை, சூழல் எல்லாம் சொல்லிட்டு, ‘நீ இந்த இடத்தில் இருந்தா என்ன பண்ணுவியோ அப்படி பண்ணு’னு போயிடுவார். அதில் என்ன மாற்றம் வேணுமோ, அதை மட்டும் சொல்லி, தேவையான ரியாக்ஷன்ஸ் வாங்கிப்பார். ஷங்கர் சார் சிறந்த இயக்குநர் என்பதோடு, ‘நல்ல நடிகர்’னும் சொல்வேன். இப்படி நடக்கணும், இந்த மாதிரி பேசணும்னு அதை செஞ்சே காமிச்சிடுவார். தெலுங்குல ராகவேந்திர ராவ் சார் ஹீரோயின்களை அழகா காட்டணும்னு விரும்புவார். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ஒருநாள் நான் காலையில எழுந்து ஷூட் போனேன். என்னோட முகத்தைப் பார்த்திட்டு, ‘நீ கொஞ்சம் டயர்டா இருக்கியே... இப்படியே பாட்டுல வந்தா நல்லாயிருக்குமா? போய் ரெஸ்ட் எடு. மதியம் ஷூட் பண்ணிக்கலாம்’னு ஷூட்டிங்கையே தள்ளி வெச்சுட்டார். இப்படி நான் வேலை செஞ்ச எல்லா இயக்குநர்களும் எனக்கான பயணத்தை மிக எளிமையா ஆக்கினாங்க.''

சினிமாவுல 26 வருடமா டிராவல் பண்றீங்க. ‘இனி நடிப்புதான்’னு முடிவெடுத்த நாளை என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

``ஆரம்பத்துல சொன்னேனே... எனக்கு இந்த நொடியில் கிடைக்கிற சந்தோஷத்துல வாழ்றது ரொம்பப் பிடிக்கும். எனக்கு நடிகை ஆகணும்னு தோணுச்சு, வாய்ப்பும் வரவேற்பும் கிடைச்சது. பிறகு ஒருநாள் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கலாமேனு தோணுச்சு. பண்ணேன். இப்படித்தான்!''

பார்ட்-டூ சினிமாக்களுக்கான சீஸன் இது. நீங்க நடிச்ச படங்கள்ல எந்தப் படத்தோட பார்ட்-டூ எடுத்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க?

`` ‘ரோஜா-2’ எடுத்தா, அதுல நடிக்கணும். இதை நான் மணி சார்கிட்ட பல தடவை சொல்லிச் சொல்லி டயர்ட் ஆகியிருக்கேன். அவரும் என்னோட மெசேஜ் எல்லாம் பார்த்துட்டு, ‘இந்தப் பொண்ணு இப்படிப் படுத்துதே’னு டயர்ட் ஆகியிருப்பார். ‘ரோஜா’ படத்துல நடிச்சதை என்னுடைய மிகப்பெரிய ஆசீர்வாதமா நினைக்கறேன். இப்பவும் என்னை மக்களுக்குத் தெரியுதுனா அதுக்கு `ரோஜா'தான் காரணம்.''

சினிமாவுல இன்னும் என்ன பண்ணணும்னு ஆசைப்படுறீங்க?

``வில்லனுக்கான இலக்கணத்தை அர்விந்த் சுவாமி ‘தனி ஒருவன்’ படத்துல பிரேக் பண்ணார்ல... அப்படி ஒரு நெகட்டிவ் கேரக்டர் பண்ணணும். ஆக்சுவலா, எனக்கு இப்படி ஓர் ஆசை வந்ததே ‘தனி ஒருவன்’ மூலமாதான். நிறைய பேர் கேட்டாங்க, ‘உன்னோடு நடிச்ச ஹீரோ வில்லனா நடிச்சுட்டாருன்னா, உடனே நீயும் வில்லியா பண்ணணும்னு சொல்றியே’னு. அதுக்காக இல்லை. என் முகத்தைப் பார்த்தாலே ‘ஸ்வீட் கேர்ள்’ இமேஜ் வருதுல்ல, ஆடியன்ஸ்கிட்ட இருக்கிற அந்த எண்ணத்தை மாத்தணும். அதை என்னால பண்ண முடியும்னு நம்புறேன்.''

இப்போ இருக்கிற ஹீரோயின்ஸ் எல்லோரையும் கவனிக்கிறீங்களா?

``நிச்சயமா. ‘நீ எப்படி இன்னும் உடம்பை ஃபிட்டா வெச்சிருக்க’னு என்னை எல்லாரும் கேட்பாங்க. ‘எனக்கான ரோலுக்காக நான் காத்திருக்கேன்’னு சொல்வேன். 2011-ல் ‘லவ் யூ மிஸ்டர் கலாகார்'னு ஒரு படம் பண்ணேன். என் பொண்ணுங்க அந்தப் படத்தைப் பார்த்துட்டு, ‘என்னமா இன்னும் ஓல்டு ஃபேஷனா இருக்கியே’னு சொல்றாங்க. அவங்களுக்கு அலியா பட், அனுஷ்கா ஷர்மாதான் பிடிக்குது. ஏன் அவங்களுக்கு அலியா பிடிக்குது, நானும் நல்ல நடிகைதானேனு தோணும். அவங்களோட நடிப்பைக் கவனிக்கிறது என்னை நான் அப்டேட்டா வெச்சிக்க உதவுது.''

மறுபடியும் எப்போ தமிழ்ல நடிப்பீங்க?

``சீக்கிரமே!''

புது வெள்ளை மழை... இங்கு பொழியட்டுமே!