இதுவரை எந்தத் திரைப்படத்திலும் காட்டாத, மிக உன்னதமான காதல் கதை இது.

மெரில் ஸ்ட்ரீப் ஹாலிவுட்டில் இன்றளவும் பேசப்படும் ஓர் ஆளுமை.ஆறே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்றுவரை மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் ஜான் கேஸல். இவர் நடித்த அனைத்துப் படங்களுமே விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அவற்றில் மூன்று திரைப்படங்கள் விருதுகளையும் தட்டிச் சென்றுள்ளன. 1976-ம் ஆண்டு ஜானும் மெரிலும் ஒரு திரைப்படத்தில் சேர்ந்து நடித்தனர். ஜானின் எளிமை, நடிப்பு, எளிதில் நட்பு பாராட்டும் குணங்களால் ஈர்க்கப்பட்ட மெரில், விரைவிலேயே அவருக்கு நல்ல தோழியாக மாறினார். நட்பு அடுத்த கட்டத்தை வேகமாக எட்டியது. இருவரும் காதலர்களா னார்கள். `வாழ்நாள் முழுவதும் ஜான் என்ற அற்புதமான மனிதருடன் பயணிக்க வேண்டும்' என்று நினைத்தார் மெரில். `என் வாழ்நாளில் மெரில் போன்ற ஒரு பெண்ணைச் சந்தித்ததில்லை' என்றார் ஜான்.

அன்பும் காதலும் பொங்கி வழிந்த வாழ்க்கையில் ஒருநாள் ஜானுக்கு உடல் நலம் குன்றியது. இருவரும் மருத்துவமனை சென்றனர். பல பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. ஜானுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்ப தாகவும், அது உடல் முழுவதும் பரவிவிட்டதாகவும் மருத்துவர் தெரிவித்தார். இதைக் கேட்டு ஜான் அமைதியாக இருந்தார். அதிர்ந்து போனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சூழலை இயல்பாக்கும் நோக்கில், `இன்று எங்கே இரவு உணவைச் சாப்பிடலாம்' என்று கேட்டார் மெரில்.

புற்றுநோயிலிருந்து ஜானை எப்படியும் மீட்டுவிட முடியும் என்று நம்பிய மெரில், சிறந்த மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார். ஜானின் உடல்நலம் பற்றிய செய்திகள் வெளியில் பரவின. இருவரும் சேர்ந்து நடித்துக்கொண்டிருந்த The deer hunter படத்திலிருந்து ஜானை நீக்குவதாகத் தயாரிப்பாளர் அறிவித்தார். ஜான் இல்லாவிட்டால் தானும் திரைப் படத்தில் நடிக்கப்போவதில்லை என்றார் மெரில். பிறகு ஜான் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைந்து எடுத்துமுடித்தனர்.

ஜானை அதுவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய திரையுலகம், உடல்நிலையைக் காரணம் காட்டி ஒதுக்க ஆரம்பித்தது. இந்த நேரத்தில் சிகிச்சைக்கு ஏராளமான பணம் தேவைப் பட்டது. உடனிருந்து கவனித்துக்கொண்ட மெரிலுக்கு வேறு வழியில்லை. தான் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில்தான் ஜானைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்தார். தொலைக்காட்சித் தொடரில் நடிக்கச் சம்மதம் தெரிவித்தார். இதற்காக இரண்டரை மாதங்கள் ஆஸ்திரியா செல்ல வேண்டியிருந்ததால், ஜானை அவரின் தம்பியிடம் ஒப்படைத்து விட்டுக் கிளம்பினார்.

அருகில் இருந்து ஜானைக் கவனிக்க வேண்டிய காலகட்டத்தில் நடிக்க வேண்டியிருப்பதை எண்ணி மிகவும் வேதனையடைந்தார் மெரில். அப்போது அவர் நடித்த Holocaust என்கிற `வதை முகாம் கொடுமைகள்' பற்றிய தொடரும், அவரது உண்மை வாழ்க்கையும் துன்பம் நிறைந்ததாகவே இருந்தன. படப்பிடிப்பு முடித்து நியூயார்க் திரும்பியவர், ஜானை அழைத்துக்கொண்டு உலகத்தின் பார்வையிலிருந்து மறைந்தார்.

ஜானுக்கு நாளுக்கு நாள் உடல்நிலை மோசமானது. 24 மணி நேரமும் கூடவே இருந்து கவனித்துக்கொண்டார் மெரில். எப்படியும் காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துக் கொண்டே இருந்தார். `மெரில் போன்ற அற்புதமான பெண்ணுடன் நீண்ட காலம் வாழ முடியாமல் போய்விடுமோ' என்கிற ஒரே வருத்தம் மட்டுமே ஜானுக்கு இருந்தது. ஒருநாள் அதிகாலையில்

28 வயது மெரிலை விட்டுவிட்டு, அவரைவிட 14 ஆண்டுகள் மூத்தவரான ஜான் மறைந்துபோனார்.

``ஜான் எனக்கு அன்பான காதலர் மட்டுமல்ல. அவரிடமிருந்துதான் நடிப்பைக் கற்றுக்கொண்டேன். அவரிட மிருந்துதான் மனிதத்தைக் கற்றுக் கொண்டேன். அவரிடமிருந்துதான் இரக்கத்தைக் கற்றுக்கொண்டேன். அவரிடமிருந்துதான் சமூகத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். ஜானின் தாக்கம் என் வாழ்நாள் வரை தொடரும்” என்றார் மெரில்.

வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட அதே 1978-ம் ஆண்டுதான், மெரிலை ஒரு சிறந்த மனிதராகவும் சிறந்த நடிகையா கவும் மாற்றியது. அவர் நடித்த படங்கள் வெற்றி மேல் வெற்றியைத் தேடிக் கொடுத்தன. அதே தொலைக்காட்சித் தொடருக்காக எம்மி விருது பெற்றார். அவரும் ஜானும் நடித்த `தி டீர் ஹன்ட்டர்’ திரைப்படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப் பட்டது. தொடர்ந்து, Kramer vs Kramer என்ற திரைப்படத்துக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றார் மெரில்.

பின்னர், டான் கம்மர் என்ற சிற்பக் கலைஞரைத் திருமணம் செய்து கொண்டார். 38 ஆண்டுகளாக ஆதர்ச தம்பதிகளாக வாழ்ந்துவரும் இவர்களுக்கு நான்கு குழந்தைகளும்,பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

இன்றும் திரைப்படங்களில் நடித்து வரும் மெரில், இதுவரை 20 முறை ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப் பட்டு, மூன்று முறை ஆஸ்கர் வென்றுள்ளார். இந்தச் சாதனை வேறு எந்த நடிகைக்கும் இல்லை. இடதுசாரி அரசியல் பார்வைகொண்ட மெரில் ஸ்ட்ரீப், பல்வேறு அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருவதுடன், நன்கொடையும் அளித்துவருகிறார்.

இன்றும் ஜான் பற்றிக் கேட்பவர் களிடம், “அந்த வலி என் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அவ்வப்போது வெளிப்படும் வலியைக் கடப்பதுதான் சவாலானது” என்கிறார் 68 வயது மெரில் ஸ்ட்ரீப்.

வலிகளைத் தாண்டியது வாழ்க்கை!