Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் வெற்றிபெற்ற படம் ‘மெளனகுரு’. இப்படத்தின் இயக்குநர் சாந்தகுமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்த படத்தை இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க ஆர்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• குழந்தைகள் உரிமைக்கான ‘யுனிசெஃப்’ அமைப்பின் தமிழகம் மற்றும் கேரளத் தூதராக நடிகை த்ரிஷா நியமிக்கப்பட்டிருக்கிறார். தென்னிந்திய நடிகை ஒருவர் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை. தமிழகம் மற்றும் கேரளாவில் குழந்தைகளின் உரிமைக்காக இனி த்ரிஷாவின் குரலும் ஒலிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• ‘விக்ரம் வேதா’வுக்குப் பிறகு நிவின்பாலியுடன் ‘ரிச்சி’ படத்தில் நடித்திருக்கிறார், ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் வாய்ப்புகள் இல்லையென்றாலும், இரண்டு கன்னடப் படங்களில் ஷ்ரத்தா பிஸி. தொடர்ந்து தமிழ்மொழிப் படங்களில் நடிக்கவேண்டும் என்பது ஷ்ரத்தாவின் விருப்பம். ‘‘சீரியஸ் படங்கள்தான் முதல் சாய்ஸ்’’ என்கிறார் ஷ்ரத்தா.

மிஸ்டர் மியாவ்

• திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த நஸ்ரியா, ப்ரிதிவிராஜ் நடிக்கும் மலையாளப் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார். அஞ்சலி மேனன் இயக்கும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில படங்களை வைரல் ஆக்கி, ‘கம்பேக் நஸ்ரியா’ என வரவேற்கிறார்கள் ரசிகர்கள்.

• காமெடி நடிகை வித்யுலேகாவின் கிளாமர் லுக் போட்டோ, ட்விட்டரில் வைரல். ‘காமெடி நடிகைக்கு கிளாமர் வராது என எல்லோரும் முடிவு செய்துவிடுவார்கள். ஆனால், என்னால் கவர்ச்சியாகவும் காட்சி தர முடியும்’ என பன்ச் அடிக்கிறார் வித்யுலேகா. இவரது இந்தத் திடீர் மாற்றத்தை முதல் ஆளாகப் பாராட்டியிருக்கிறார் ஆர்யா.

மிஸ்டர் மியாவ்

• நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அறிமுகமாகும் ‘தடாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதில் மகிழ்ச்சியில் மிதக்கிறார் ஸ்ரீதேவி. கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்தப்படம், மராத்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சாய்ரட்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் மியாவ்

ஹாட் பிட்

ரிலீஸ் செய்ய முடியாத அளவுக்குச் சர்ச்சைகளைச் சந்தித்துவருகிறது ‘பத்மாவதி’ படம். இந்த நிலையில், கோவா சர்வதேசத் திரைப்பட விழா திரையிடல் லிஸ்ட்டிலிருந்து தன் படம் நீக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போயிருக்கிறார், சர்வதேச பாராட்டுகளைப் பெற்ற மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன். ‘செக்ஸி துர்கா’ எனப் படத்துக்குப் பெயர் வைத்திருந்தார் சசிதரன். ‘‘இது கடவுள் துர்கா பற்றிய படம் இல்லை’’ என சசிதரன் மன்றாடியும், சென்ஸார் போர்டு கேட்கவில்லை. படத்தின் பெயரை ‘எஸ் துர்கா’ என மாற்றி, 21 இடங்களில் வசனங்களை வெட்டிவிட்டு சென்ஸார் சான்றிதழ் கொடுத்தார்கள். ‘‘கோயிலில் பெண் தெய்வத்தை வழிபடுகிறோம். வீதிக்கு வந்தால் பாதுகாப்பு இல்லை என்ற பெண்கள்மீதான வன்முறை பற்றிய ஆண்களின் மனநிலையைச் சொல்லும் படம் இது. திரைப்பட விழாவுக்கு முதலில் தேர்வு செய்துவிட்டு, அரசு கொடுத்த பிரஷரால் நீக்கிவிட்டார்கள். அதனால்தான் நீதிமன்றம் போனேன்’’ என்கிறார் சசிதரன். 

• ‘மீசைய முறுக்கு’ படத்துக்குப் பிறகு ‘ஹிப்ஹாப்’ ஆதி நடிக்கும் அடுத்த படத்தைப் புதுமுக இயக்குநர் பார்த்திபன் இயக்குகிறார். படத்தில் ஹாக்கி வீரர் கேரக்டர் என்பதால், அந்த விளையாட்டின் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுவருகிறார் ஆதி.