அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!

சென்ற ஆண்டு திருமணமாகி, இப்போது குழந்தை நிலனுடன் வாழ்க்கையைக் கொண்டாடுகிறார்கள் நடிகை விஜயலட்சுமி - இயக்குநர் ஃபெரோஸ் தம்பதி.

“ஒரு பர்த்டே பார்ட்டிலதான் நாங்க முதன்முதலா மீட் பண்ணினோம். அது ஸ்கூல் டேஸ்ல நடந்த சம்பவம். எனக்கு விஜியைப் பார்த்ததும் பிடிச்சுப் போச்சு...’’ என ஃபெரோஸ் புன்னகைக்க, ``அதை ஏன் கேக்குறீங்க? எங்கே போனாலும், `கேக் சாப்பிடுறீங்களா? ஐஸ்க்ரீம் சாப்பிடுறீங்களா'னு துரத்தித் துரத்தி டார்ச்சர் பண்ணினார். `ஏன் இந்தப் பையன் இப்படி பண்றான்?'னு நினைச்சுட்டிருந்தேன். அதுக்கப்புறம் என் ஃப்ரெண்ட் மூலமா அவரைப் பற்றி தெரிஞ்சு, எனக்கும் அவர்மேல காதல் மலர்ந்து, இப்ப நல்லபடியா கல்யாணத்துலயும் முடிஞ்சிருச்சு” என்கிற விஜியைத் தொடர்கிறார் ஃபெரோஸ்.

“என் மனைவியோட சென்ஸ் ஆஃப் ஹியூமர் ரொம்பப் பிடிக்கும். எல்லாரையும் செமையா கலாய்ப்பாங்க. சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்கும். ரொம்பப் பாசமா இருப்பாங்க. நான் என்ன நினைக்குறேன்னு சரியா கணிச்சுடுவாங்க. அப்புறம் அவங்ககிட்ட பிடிக்காத விஷயமும் இருக்கு. அவங்க மேலயே தப்பிருந்தாலும் சண்டை போடுவாங்களே தவிர, சாரி சொல்ல மாட்டாங்க...’’ என ஃபெரோஸ் சொல்ல, “இப்போ நானும் கொஞ்சம் சொல்லணும்'' என்று தொடர்கிறார் விஜயலட்சுமி... “அவர்கிட்ட ரொம்பப் பிடிச்சது என்ன தெரியுமா? ஓர் இடத்துக்குப் போனா, சின்னச் சின்ன விஷயத்தைக்கூட நுணுக்கமா கவனிப்பார். ஆனா, யாரா இருந்தாலும் மனசுலபட்டதை ‘பட்’னு அவங்க முன்னாடியே சொல்லிடுவார்... அதுதான் பிடிக்காது” என்கிறவரைத் தொடர்ந்து...

“சினிமாவில் என்னைவிட என் மனைவிதான் சீனியர். `சென்னை-28', `அஞ்சாதே' படங்கள்ல இவங்க நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. நான் `பண்டிகை' படம் இயக்கும்போதும் ரொம்ப சப்போர்ட்டா இருந்தாங்க. படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுறப்பவும் என்கூடவே இருந்து உதவுவாங்க. எனக்கு எப்போதும் எல்லாமும் அவங்க தான்”- ஃபெரோஸ் அழுத்தமாகச் சொல்ல வெட்கப் புன்னகை விஜிக்கு!