அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!

“நாங்க முதன்முதலா சந்திச்சது `என் தங்கை கல்யாணி’ படத்துலதான். நான் சின்ன வயசு கல்யாணி. அவர் டி.ராஜேந்தர் சாரின் சின்ன வயசு கேரக்டர். சொல்லப்போனா, பார்த்த ஞாபகம்கூட கிடையாது. அவ்வளவு சின்ன வயசு. அப்புறம் சன் டி.வி-யில் `சூப்பர் 10’ நிகழ்ச்சி பண்ணோம். அதுக்கப்புறம் கணேஷை நிறைய நிகழ்ச்சியில பார்த்திருக்கேன். எல்லாரும் எங்களுக்கு லவ் மேரேஜ்னுதான் நினைப்பாங்க. ஆனா, அப்பவும் சரி இப்பவும் சரி... எங்களுக்குள்ள லவ் இருந்ததே கிடையாது. எப்பவுமே நாங்க நல்ல நண்பர்கள்தான். `மானாட மயிலாட’ சேர்ந்து பண்ணும்போது யதேச்சையா வீட்டில பேசினாங்க. அப்புறம் அந்த நிகழ்ச்சியைப் பார்த்த நிறைய பேர், `ஆர்த்தி-கணேஷ்'னு சொல்லிச் சொல்லியே எங்களைச் சேர்த்து வெச்சிட்டாங்க” என ஆர்த்தி கூற, “நான் ஆர்த்தியைப் பார்த்து நிறைய விஷயத்தில் பெருமைப்படுவேன். எந்த விஷயத்திலயும் செம போல்டா இருப்பாங்க... உண்மையா இருப்பாங்க” என கணேஷ் கூற, “பொதுவா இவரைப் பார்த்துப் பெருமைப்படுற விஷயம்னா எவ்வளவு திட்டினாலும் சிரிச்ச மாதிரியே முகத்தை வெச்சிக்குவாரு. கோபத்தை முகத்துல காட்ட மாட்டாரு. அப்புறம் நானே கோபத்தை மறந்து இயல்பாகிடுவேன்’’ என்கிற ஆர்த்தியின் பாராட்டை வியப்புடன் கவனிக்கிறார் கணேஷ். ரெண்டு பேரும் யாருடைய ரசிகர்கள் என்ற கேள்வியை வைத்தால், போட்டி போட்டுக்கொண்டு பேசுகிறார்கள்.

“ `தல’ங்கற ஒரு நடிகரைவிட `அஜித்’ங்கிற ஒரு நல்ல மனிதனுக்கு நான் ரசிகைங்க” என ஆர்த்தி ஆரம்பிக்க, “எனக்குச் சின்ன வயசுல இருந்தே விஜய் அண்ணாவைத் தெரியும். அப்ப இருந்தே அவரை ரொம்பப் பிடிக்கும். அதே போல அஜீத்தையும் பிடிக்கும். என்ன இருந்தாலும் எங்க ரெண்டு பேருக்குள்ள தல-தளபதி சண்டையே வந்ததில்லை” என கணேஷ் சொன்னதும், ``சரி, நீங்க ரெண்டு பேரும் எப்ப சேர்ந்து நடிப்பீங்க?” எனக் கேட்டோம். “அப்படியான வாய்ப்பு எதுவும் இதுவரைக்கும் வரலை. வந்தா... உடனே நடிக்க வேண்டியதுதான். எங்களுக்குள்ள இருக்கிற நல்ல நட்பு சினிமாவிலும் எங்களைத் தூக்கி நிறுத்தும்னு நம்புறேன்” என ஆர்த்தி சொல்ல, ``அப்புறம் என்ன... எங்க வீட்டின் பிக் பாஸே சொல்லிட்டாங்கள்ல, கண்டிப்பா நடிச்சிடுவோம்” என ஆர்த்தியைப் பார்த்து தம்ஸ் அப் காட்டுகிறார் கணேஷ்.