அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!

“என்னதான் நகைச்சுவை நடிகரா இருந்தாலும், பசங்களுக்கு நான் ஸ்ட்ரிக்ட் அப்பாதான்’’ எனத் தன்னைப் பற்றி ஓப்பனாகவே பேச ஆரம்பிக்கிற நடிகர் சிங்கம்புலிக்கு சவித், திருநாவுக்கரசு என இரு மகன்கள்.

“பெத்தவங்களால நிச்சயிக்கப்பட்ட திருமணம்னாலும் கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய லவ் பண்ணினோம்” எனப் புன்முறுவலுடன் நினைவுகளை அசைப்போட்டபடியே பேச ஆரம்பிக் கிறார் மனைவி புஷ்பவல்லி.

“நான் ஹைதராபாத்ல ஆர்மில வொர்க் பண்றேன். அவருக்கு என் வேலையைப் பற்றி நல்லா தெரியும். வேலையை ரிசைன் பண்ணிட்டு உங்ககூடவே தமிழ்நாடு வந்திடறேன்னு சொல்லுவேன். ஆனா, அவர்தான் இந்த வேலை கிடைக்காம எவ்ளோ பேர் இருக்காங்க. கிடைச்ச வேலையை விடக் கூடாதுனு சொல்லி என்னை என்கரேஜ் பண்ணுவார். பார்க்கணும்னு எப்போ சொன்னாலும் உடனே கிளம்பி வந்துடுவார்” என்கிற புஷ்பாவை சிங்கம்புலி தொடர்கிறார்.

“ஆமா... `என்னைப் பத்தியோ பசங்களைப் பத்தியோ கவலைப்படாதீங்க. நான் பாத்துக்குறேன். நீங்க உங்க வேலையில கவனம் செலுத்துங்க'னு அவங்க என்னை பூஸ்ட் பண்ணிட்டே இருப்பாங்க. நானும் அவங்க வேலை பத்தி நல்லா தெரிஞ்சதால அவங்களைப் புரிஞ்சுப்பேன்” என்கிற சிங்கம்புலியின் முகத்தில் காதல் ரேகை பரவுகிறது.

``இவர் நடிச்சதில ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘காவியத்தலைவன்’, ‘முத்துக்கு முத்தாக’ன்னு மூணு படங்கள்தான் பார்த்திருக்கேன். நான் ஊர்ல இருந்தா ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போவார். அப்போ இவர் நடிக்கிறதை நேர்ல பார்த்திருக்கேன். மத்தபடி ரெண்டு பேருமே நேரமே இல்லாம ஓடிட்டு இருக்கோம். ஒருநாள் இவர் நடிச்ச எல்லா படங்களையும் இவர்கூடவே உட்கார்ந்து பார்த்திடணும்” என மனைவி சொன்னதும்...

“அப்படியா சீக்கிரமே பாயசத்தைப் போட்ற வேண்டியதுதான்” என்று நகைச்சுவையாகத் தன் சினிமா வசனத்தை சிங்கம்புலி சொல்ல வாய்விட்டுச் சிரிக்கிறார் புஷ்பவல்லி!