அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!

“வழக்கமா சினிமாவில் காட்டுற மாதிரிதான்... மோதல்ல ஆரம்பிச்சு நட்பாகி, காதலாகிக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆகப்போகுது. ஆனா, இன்னும் எங்க ரெண்டு பேர் மனசுக்குள்ளேயும் புதுமணத் தம்பதி மாதிரியான உணர்வுதான்” என நடிகை ஷிவதா நாயர் சொல்ல, கணவர் முரளி கிருஷ்ணா முகத்தில் வெட்கச் சிரிப்பு.

“நான் திருச்சியில பிறந்து, சென்னையில ஸ்கூல் படிச்சு, இப்ப கேரளாவில் வசிக்கிறேன். இவருக்குப் பூர்வீகம் கேரளாதான். இருவரும் ஒரே காலேஜ்ல படிச்சப்போ, எங்கிட்ட புரபோஸ் பண்ணி நல்லா திட்டு வாங்கியிருக்கார். அப்படித் தொடங்கினதுதான் எங்களுடைய நட்பு. காலேஜுக்குப் பிறகு ‘கேரளா கஃபே’, ‘லிவிங் டுகெதர்’ ஆகிய மலையாளப் படங்கள்ல நடிச்சிருந்தாலும், தமிழ்ல ‘நெடுஞ்சாலை’ படத்துக்குப் பிறகுதான் நடிப்பு மேல பெரிய ஆர்வம் ஏற்பட்டுச்சு. அப்போ எங்களுடைய நட்பு, இவரின் குணம், பழகும் விதம் எல்லாம் பிடிச்சிருந்தது. காதலிக்க ஆரம்பிச்சோம், இப்போ ரொம்ப லவ்லியான வாழ்க்கை போயிட்டிருக்கு. இவரும் ரெண்டு படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கார். சினிமா ஆர்வமுள்ளவர், எக்ஸ்போர்ட் பிசினஸும் செய்கிறார். என் சினிமா பயணத்துக்கு ஆலோசனைகள் கொடுத்தும் உதவுவார். அதனாலயே கல்யாணத்துக்குப் பிறகு கூடுதல் உற்சாகத் தோடு என்னால நடிக்க முடியுது” என ஷிவதா சொல்ல...

“ஷிவதா, திடீர்னு நைட்டு ஒரு மணிக்கு ஐஸ்க்ரீம் வேணும்னு கேட்பா. அந்தக் குழந்தைத்தனத்தில் ஐஸ்க்ரீமை விட இவ முகம் ஸ்வீட்டா இருக்கும். உடனே போய் ஆசை தீர ஐஸ்க்ரீம் சாப்பிடுவோம். அடிக்கடி கார்லயே இந்தியா முழுக்க டிராவல் செய்கிறப்போ, மாறி மாறி ட்ரைவ் பண்ணுவோம். அப்போ ஒருத்தர் இன்னொருத்தருக்கு ஸ்நாக்ஸ் ஊட்டிவிடுவது எங்களுக்குள் ஸ்பெஷல். நடிகையா இருந்தாலும், நான் ஃப்ரெண்டா பார்த்த காலத்துலேருந்து இப்போவரை எல்லோர்கிட்டயும் பழகுறதுல, ஷிவதா சிம்பிள் அண்டு ஹம்பிள்தான். ஷிவதாவைப் பார்த்து நானும் என்னை ரொம்பவே மாத்திக் கிட்டேன்” என்கிற முரளியின் கண்களைப் பார்த்து ஷிவதா சிரிக்க, இருவருக்குள்ளும் ஆனந்தப் பூரிப்பு!