அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மருமகளாக, நடிகர் உதயாவின் மனைவியாக கீர்த்திகாவைப் பலரும் அறிவர். பின்னணிப் பாடகி, டப்பிங் கலைஞர், குட்டி விளம்பர மாடலின் அம்மா என அவருக்கு வேறு சில அடையாளங்களும் உண்டு.

``ஆலயம்மன் கோயில்லதான் உதயா வோட அம்மா என்னைப் பார்த்தாங்க. நான் கோயில் பிராகாரத்தைச் சுத்தி வரும்போது என் கையைப் பிடிச்சுக்கிட்டு, ‘நீதான் என் மருமகள்’னு சொன்னாங்க. அவங்க யாரு, ஏன் அப்படிச் சொல்றாங் கனு எனக்கு ஒண்ணும் புரியலை. நானோ அப்போ கல்யாணமே வேண்டாம்கிற முடிவுல இருந்தேன். எல்லாருமா சேர்ந்து என்னை கன்வின்ஸ் பண்ணினாங்க. அப்புறம் நானும் அவரும் மீட் பண்ணினோம். ‘நான் எந்த வேலையில இருக்கேன்னு உனக்குத் தெரியும்ல... தெரிஞ்சுதானே ஓகே சொன்னே’னு உறுதிப்படுத்திக்கிட்டார்.’’ - வருடங்கள் கடந்திருந்தாலும் அந்த நொடி நினைவைப் பகிர்கிற கீர்த்திகாவின் கன்னங்களில் வெட்கச் சிவப்பு.

``ஐஸ்க்ரீம் பார்லர்லதான் கீர்த்திகாவை மீட் பண்ணினேன். முதல் பார்வை யிலேயே பிடிச்சிருச்சு. ட்ரெடிஷனலா தெரிஞ்சாங்க... அம்மாகிட்ட டபுள் ஓகே சொல்லிட்டேன்...’’ - உதயாவின் வார்த்தைகளிலும் அதே வெட்கம்.

``2013-லதான் நான் டப்பிங், பாட்டுனு எனக்குப் பிடிச்ச விஷயங்களைப் பண்ண ஆரம்பிச்சேன். என் உணர்வுகளுக்கும் என் விருப்பங்களுக்கும் மதிப்பு கொடுத்து அந்த விஷயங்களைச் செய்ய புகுந்த வீட்டுல எல்லாருமே அனுமதி கொடுத் தாங்க’’ என்கிற கீர்த்திகா, ‘விக்ரம் வேதா’வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘சத்ரிய'னில் மஞ்சிமா மோகன், சில விளம்பரங்களில் கீர்த்தி சுரேஷ், ஜோதிகாவுக்கு டப்பிங் பேசியவர்.

இவர்களின் மூத்த மகன் ஜேசன். ‘மினிஸ்டர் வொயிட்’ விளம்பரத்தில் சத்யராஜின் குட்டிக் குழந்தையாக நடித்திருக்கிறான். ‘தலைவா’ படத்தில் குட்டி விஜய்யாக நடித்த அதே குழந்தை. இளையவர் சச்சினுக்கும் இப்போதே ஏகப்பட்ட ஆஃபர்ஸ்.

``என்னதான் வேலைகள் இருந்தாலும், எங்களுக்குப் பிடிச்ச இடங்களுக்குக் கூட் டிட்டுப் போறது, டின்னர்னு சாட்டர்டே எப்போதும் எங்களுக்கு ஸ்பெஷல் டே...’’ - காலண்டரை நோக்குகின்றன கீர்த்திகா வின் கண்கள். அது அடுத்த சனிக்கிழமைக் கான தேடல்!