அவள் 20 சிறப்புப் பகுதி - என் குடும்பம் என் இதயம்

சினிமா, டி.வி, அரசியல், எழுத்து ஆகிய துறைகளில் ஜொலிக்கும் திறமையாளர்களின் குடும்பங்களைச் சந்தியுங்கள்!

‘`மெலனின் கன்ட்ரோல் ட்ரீட் மென்ட் பண்ணிக்கலாம்னு, பியூட்டி ஷியன் கோர்ஸ் காலேஜ் ஹெச்.ஓ.டி-யைப் பார்க்கப் போயிருந்தேன். அந்த ஹெச்.ஓ.டிதான் சிந்துஜா. இவங்க என் தூரத்து ஃப்ரெண்டு. அதாவது என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு. ட்ரீட்மென்ட்டுக்காகத்தான் போனேன். ஆனா, காதல், கல்யாணம் எல்லாம் முடிஞ்சது; கடைசிவரை ட்ரீட்மென்ட் மட்டும் எடுத்துக்கவே இல்ல” என முதல் சந்திப்பிலிருந்து சொல்ல ஆரம்பித்தார் அருண்ராஜா காமராஜ்.

“2008-லிருந்து நாலு வருஷம் காதலிச்சோம். `மான் கராத்தே’ படத்தில் நடிச்சிட்டிருந்தப்போ கல்யாணமாச்சு. கல்யாணமான நாள்ல இருந்து இப்போ வரை என் கரியருக்கு ஃபுல் சப்போர்ட் கொடுக்கறாங்க சிந்துஜா. அதனால தான், என்னால இவ்வளவு தூரம் பயணிக்க முடிஞ்சிருக்கு. கல்யாணமாகி நாலு வருஷமாகியும் இன்னும் நாங்க ஹனிமூனுக்கே போகலை. அதைக்கூட அவங்க பெரிசா எடுத்துக்கலை” என அருண் சிலிர்க்க, “ஐயோ, இவரு புகழ்ற அளவுக்கெல்லாம் இல்லைங்க, இவருடைய வேலை இப்படித்தான்னு தெரியும். அதுக்கேத்த மாதிரி இருக்கறது தான் இரண்டு பேருக்குமே மகிழ்ச்சியைக் கொடுக்கும்’’ என பிராக்டிக்கலாகப் பேச ஆரம்பித்தார் சிந்துஜா.

``இவர் என்மேல ரொம்ப அக்கறை எடுத்துக்குவார். நான் வொர்க் பண்ற இடத்துல ஏதாவது பிரச்னை இருந்தா லும் அதை இவர்கிட்ட சொல்லுவேன். அவர் என்ன பண்ணணும்னு ஐடியா கொடுப்பார். அதே மாதிரி பண்ணுவேன். பிரச்னை சரியாகிடும். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களில் ஆரம்பித்து செய்யற வேலையில் தெளிவா இருக்குறது வரை அவரை எல்லாவிதங்களிலும் எனக்குப் பிடிச்சிருந்தது. நடிகர், பாடலாசிரியர், பாடகர், இப்போ இயக்குநர்னு அவர் படிப்படியா மேல வந்ததுக்கு அவரின் உழைப்புதான் முக்கியக் காரணம். `இதுதான் உங்க வேலை. உங்ககூடச் சேர்ந்து நானும் ஓடி வரேன்’னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப `வர்லாம் வர்லாம் வா’னு ஜாலியா வாழ்க்கையில ஓடிட்டு இருக்கோம்.’’ - சிந்துஜாவின் கண்களின் ஆனந்தம் பொங்க... அன்பாக அணைக்கிறார் அருண்ராஜா.