Published:Updated:

பெண்கள் சூழ் உலகு அழகு! - ராமச்சந்திரன் துரைராஜ்

பெண்கள் சூழ் உலகு அழகு! - ராமச்சந்திரன் துரைராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் சூழ் உலகு அழகு! - ராமச்சந்திரன் துரைராஜ்

அன்பும் அறமும்ஆர்.வைதேகி

ன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. இரண்டும் மாறி மாறி நிகழ்வதுதான் வாழ்வின் நியதி. ஆனால், நடிகர் ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் துரைராஜுக்கோ இரண்டும் ஏக காலத் தில் நிகழ்ந்திருப்பதுதான் ஆச்சர்யம்.

`அறம்' படம் வெளியாகி, மக்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிற ராம்ஸுக்கு, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லை.

``அப்பா துரைராஜ். அம்மா பாப்பாத்தி. எனக்கு மூணு அக்காக்கள். கம்பம் பக்கத்துல கோம்பைதான் எனக்குப் பூர்வீகம். `அறம்' படத்துல என் கேரக்டர்ல நீங்க பார்த்த அத்தனையும் என் அம்மா அப்பாகிட்டருந்து எடுத்துக் கிட்டதுதான். அப்பா நல்லா பாட்டுப் பாடுவார். நடிப்புக்குத் தேவையான சின்னச் சின்ன நுணுக்கங்கள் எல்லாம் நான் அப்பாகிட்டருந்து எடுத்துக் கிட்டதுதான்.  என் சித்தப்பா பையன் லெனின் பாரதி `மேற்குத் தொடர்ச்சி மலை'னு ஒரு படம் டைரக்ட் பண்ணி யிருக்கார். அதுல எங்கப்பா ஒரு சின்ன கேரக்டர்ல நடிச்சிருக்கார்.

போன அக்டோபர் 17-ம் தேதி அப்பா என்கிட்ட போன்ல பேசினாரு. 18-ம் தேதி தீபாவளி. 19-ம் தேதி நானும் என் தம்பியும் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு  என் ஃப்ரெண்டு வீட்டுல சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். என் போன் ஆஃப்ல இருந்ததால என் நண்பனுக்கு பண்ணியிருக்காங்க. அவன் போனை எடுத்துக்கிட்டு வெளியில போனான். அவன் சொன்ன செய்தியில், அப்பா இறந்ததை அறிந்து அதிர்ந்தேன்.

பெண்கள் சூழ் உலகு அழகு! - ராமச்சந்திரன் துரைராஜ்

படம் ரிலீசாகி எல்லாரும் வாழ்த்த றாங்க. ஆனா, எதையும் பார்க்க அப்பா இல்லை. அப்பா இல்லைங்கிறதுதான் இப்போ நிஜம். ஊர்ல எங்க வீட்டுல ஒவ்வொரு மூலையிலயும் அப்பாவுடைய நினைவுகள் இருக்கு. அந்த நினைவுகளைச் சுமந்துகிட்டு அங்கே இருக்கிறது ரொம்பக் கஷ்டம்னுதான் சென்னைக்கு வந்துட் டேன். அப்பா இறந்து ஒன்றரை மாசம்தான் ஆகுதுனு அம்மா இன்னும் வீட்டைவிட்டு வெளியில வரலை. அம்மா இன்னும் என் படத்தைப் பார்க்கலை. பாருனு எப்படிச் சொல்ல முடியும்?''- ராம்ஸின் குரலில் துக்கம் தோய்ந்திருக்கிறது.

அப்பாவின் இழப்பு தாளமுடியாத தவிப்பைத் தந்திருப்பதைப் போலவே, அம்மா மற்றும் அக்காக்களின் அன்பும் அக்கறையும் எல்லா சோகங்களிலிருந்தும் அவரை மீட்டுக்கொண்டிருக்கின்றன.

``அம்மா ரொம்ப தைரியமான கேரக்டர். வயக்காட்டுல வேலை பார்த்திட்டிருப்பாங்க. பாம்பு குறுக்கே போகும். எடுத்துப் போட்டுட்டு வேலை பார்ப்பாங்க. `என்னம்மா பயமா இல்லியா'னு கேட்டா, `டேய் அது வாழற இடத்துலதான் நாம விவசாயம் பண்ணிட்டிருக்கோம்... அது நம்ம வீட்டுக்குள்ளயா வந்துச்சு... அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகுது...'னு சொல்வாங்க.

அம்மாவுக்குக் காட்டராக்ட் ஆபரேஷன் பண்றதுக்காக அவங்களை சென்னைக்குக் கூட்டிட்டு வந்தாங்க.ஆபரேஷன் பண்ணும்போது `வலிக்குமா'னு அக்கா, டாக்டர்கிட்ட கேட்க, `சென்னைக்காரங்க முள்ளு குத்தி னாலே வலிக்கும்பாங்க. அவங்ககிட்ட போய் ஆபரேஷன் பண்ணினா வலிக்குமானு கேட்டா வலிக்கும்னுதான் சொல்வாங்க...'ன்னாங்க. ஆபரேஷன் முடிஞ்சு டாக்டரை மீட் பண்ணும்போது எங்கம்மா சட்டுன்னு அந்த டாக்டர் கால்ல விழுந்துட்டாங்க. அந்த டாக்டருக்குத் தர்மசங்கடம்... `நீ என் புள்ளை மாதிரி... பெத்த புள்ளை கால்ல விழறதுக்கு நான் ஏன் சங்கடப் படணும்'னு கேட்டாங்க அம்மா. பாம்பைப் பிடிச்சுத் தூக்கிப் போட்ட அதே அம்மா, இங்கே பாசத்துக்குக் கட்டுப்பட்டு நின்னதை இப்ப நினைச் சாலும் சிலிர்க்கும்...'' - ராம்ஸின் வார்த்தைகளில் நமக்கும்கூடச் சிலிர்க்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெண்கள் சூழ் உலகு அழகு! - ராமச்சந்திரன் துரைராஜ்

``மூத்த அக்கா ஆனந்தி, எனக்கு இன்னோர் அம்மா மாதிரி. நான் நானா வளர அனுமதிச்சதுல அந்த அக்காவுக்கு மிகப் பெரிய பங்குண்டு. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஏதேதோ வேலைகள் பார்த்திருக்கேன். விட்டுட்டு வரும்போது `ஏண்டா நல்ல வேலை தானே'னு அம்மா கேட்பாங்க. ஆனா, ஆனந்தியக்காதான் `விடும்மா... அவன் விருப்பப்பட்டதைச் செய்யட்டும்'னு சொல்வாங்க. கம்பத்துல ஒரு ஸ்கூல்ல ஹெச்.எம்மா இருக்காங்க. ஓர்அக்கா சென்னையிலயும் இன்னோர் அக்கா கோம்பையிலயும் இருக்காங்க. என் வளர்ச்சியில இவங்க எல்லாருக்குமே முக்கியப் பங்குண்டு...'' பெண்கள் சூழ் உலகு அழகென்கிறார் ராம்ஸ். 

``அம்மாவை நல்லாப் பார்த்துக் கணும்னு சென்னைக்குக் கூட்டிட்டு வந்தேன்னா அது மிகப் பெரிய சுயநலம். எங்கம்மாவுக்குத் தினமும் பத்து பேரைப் பார்க்கணும்... பேசணும்... தோட்டத் துக்குப் போய் வெள்ளாமையைப் பார்க்கணும். அவங்களைக் கூட்டிட்டு வந்து அப்பார்ட்மென்ட்டுக்குள்ள அடைக்கிறதைப் போல வன்முறை வேற இருக்குமா?'' முகத்தில் அறைகிற உண்மை உரைப்பவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

``இன்னிக்கு எல்லாருக்குமே எதிர்பார்ப்புகள் கூடியிருக்கு. வரப்போற பெண்ணோட எதிர்பார்ப்புகளை நூறு சதவிகிதம் நிறைவேத்த முடியலைன் னாலும் பாஸ் மார்க்காவது வாங்கணு மில்லையா... அதனாலதான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.''

 Boss, நீங்க ஆல்ரெடி Pass.