‘துருவங்கள் பதினாறு’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் படம் ‘நரகாசூரன்’. இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பில், அர்விந்த் சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பிறகு மீண்டும் ஒரு த்ரில்லர் அல்லது சயின்ஸ் ஃபிக்ஷன் கதையைப் படமாக்கவிருக்கிறார் கார்த்திக்.

ஜாலி கேள்வி

நயன்தாராவை ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்கிறார்கள். இதேபோல ‘உலக நாயகி’, ‘இளைய இளவரசி’ போன்ற பட்டங்களையும் ஹீரோயின்களுக்குக் கொடுக்கிற ஐடியா இருக்கிறதா?

ஹைலைட்

பவன் கல்யாணின் புதிய படத்துக்கு ‘அக்னாயதவாசி’ என டைட்டில் வைத்திருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கும் படம், இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் தெலுங்குப்படம், பவன் கல்யாணின் 25-வது படம் எனப் பல ஸ்பெஷல் டேக்லைன்களுடன் வெளிவரவிருக்கிறது இப்படம்.

வைரல்

தியேட்டர்களில், திரையிடலுக்கு முன்பாக அரசு விளம்பரங்கள் இடம்பெறும். குறிப்பாக, ‘அணைத்திடுவோம் பீடியையும், சிகரெட்டையும்’ என்ற வசனம் இடம்பெறும் விளம்பரம் பிரபலம். அதில், குழந்தையாக நடித்திருந்த சிம்ரன் நடேகரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல். ‘அப்போ/இப்போ’ கான்செப்ட்டில் சிம்ரன் நடேகரின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கங்களில் இருந்த புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஹாட் டாபிக்

‘‘விஜய், ரஜினி வந்தாலும் நல்லது செய்வார்கள். இவர்களைவிட, அஜித் வந்தால் இன்னும் நல்லா இருக்கும்’’ என ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் சொன்னார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், ‘‘ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் தங்கள் ஓட்டுகள் குறையும் என்ற நிலை அரசியல்வாதிகளுக்கு உள்ளது. அஜித் அரசியலுக்கு வந்து, தனிக்கட்சி தொடங்கினால், மொத்த ஓட்டுகளும் போய்விடும்’’ என மயில்சாமி சொன்னார். ‘‘தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்களும் அஜித்திடம் உள்ளன. வெளிநாடுகளுடன் ஒப்பிட்டு தமிழகத்துக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறார் அஜித்’’ என்று திரைப்பட விழா ஒன்றில் பேசியிருக்கிறார், நடிகர் ஆரி. ‘‘இது எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்’’ என்று வேறு சொன்னார் ஆரி. இனி ரஜினி, கமல், விஜய் வரிசையில் அஜித்தை வைத்தும் அரசியல் கபடி ஆடுவார்கள்.

சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறார் சிம்ரன். அர்விந்த் சாமி நடிக்கும் ‘வணங்காமுடி’ படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடிக்கிறார் அவர். கூடவே, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் இணையும் படத்திலும் முக்கியக் கேரக்டரில் வருகிறார். தவிர, படத் தயாரிப்பு வேலைகளும் தீவிரமாகியிருக்கின்றன.