Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

மிழ் சினிமாவில் பணம் தொடர்பான பிரச்னைகளுக்கு தயாரிப்பாளர் சங்கத்தைத்தான் அணுகுவார்கள். இதற்கெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலே, ‘எனக்கு வரவேண்டிய பணத்தைப் பெற்றுத் தாருங்கள்’ எனச் சங்கத்திடம் முறையிட்டிருக்கிறார். பூபதிபாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ படத்துக்குப் பிறகு, மீண்டும் விஷால் - பூபதிபாண்டியன் கூட்டணியில் ஒரு படம் தொடங்குவதற்கு, முன்பணமாக குறிப்பிட்ட தொகையை பூபதி பாண்டியனிடம் கொடுத்திருக்கிறார் விஷால். ஆனால், ‘பட்டத்து யானை’ வெற்றியைப் பெறாத நிலையில், அடுத்த படம் டிராப் ஆனது. எனவே, இயக்குநருக்குக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தைத் திரும்பப் பெற்றுத்தரக் கேட்டிருக்கிறார் விஷால்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

ஜாலி கேள்வி

ச்ச நடிகர், பிரமாண்ட இயக்குநர், ஹை பட்ஜெட் தயாரிப்பாளர் என அனைவரும், மேடை கிடைக்கும் போதெல்லாம் ‘சிறு பட்ஜெட் படங்களைக் காப்பாற்ற வேண்டும்’ எனக் குரல் கொடுத்தபடி இருக்கிறார்கள். அரசும், ‘சிறு பட்ஜெட் படங்களுக்காக அம்மா திரையரங்குகள் அமைக்கப்படும்’ என அறிக்கை கொடுத்து, இடங்களைத் தேர்வு செய்ததோடு சரி. மற்ற எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. ஸோ, ‘‘எப்போ சார் தொறப்பீங்க’’ன்னுதான் கேட்கணும்.

வைரல்

காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலின் வளைகாப்புப் படங்கள், இன்ஸ்டாகிராமில் சமீபத்திய வைரல். தமிழில் ‘இஷ்டம்’ படத்திலும், சில தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்தவர் நிஷா அகர்வால். இவருக்கும் மும்பை தொழிலதிபர் கரணுக்கும் 2013-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. நான்கு ஆண்டுகள் கழித்துத் தாய்மை அடைந்திருக்கும் நிஷாவின் படங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான நெட்டிசன்கள் லைக்ஸ் குவித்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

ழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில், ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் நிவேதா பெத்துராஜ். கிராமத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை த்ரில்லர் ஸ்டோரியாகச் சொல்ல இருக்கிறார் எழில். ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஜீ
வா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா, சதீஷ் என கலர்ஃபுல் காம்பினேஷனில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘கலகலப்பு-2’ படத்தில் நந்திதாவும் இணைந்திருக்கிறார். படத்தில் நந்திதாவுக்கு சிறப்புத் தோற்றம்.

மிஸ்டர் மியாவ்

‘பவர் பாண்டி’ படத்துக்குப் பிறகு ‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெறும் ஒரு கேரக்டரில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார், தொகுப்பாளர் திவ்யதர்ஷினி.

மிஸ்டர் மியாவ்

‘கீ’, ‘கலகலப்பு-2’ படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஜீவா, அடுத்து ‘அனிமல் காமெடி’ படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே ஆகியோரை அணுகியிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

‘சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனக் காட்டமாக ட்வீட் செய்திருந்தார், நடிகை பூர்ணா. ‘‘என்கிட்ட ‘கொடிவீரன்’ படத்துக்காக முதல்ல பேசினது, அசோக்குமார்தான். ஷூட்டிங் ஸ்பாட்ல சொந்த அண்ணன் மாதிரி பாசம் காட்டினார். அப்படி இருந்த ஒருவர், திடீர்னு இறந்துபோயிட்டார். அது தற்கொலைனு நினைக்கும்போது இன்னும் வருத்தமா இருக்கு. என் பதிவுல கெட்டவார்த்தைகள் பயன்படுத்தினதுக்காக மன்னிப்புக் கேட்டுக்கிறேன்’’ என்று ஃபீல் பண்ணுகிறார் பூர்ணா. ‘‘ஒரு நடிகையா இந்தப் பிரச்னையைப் பத்திப் பேசாதேனு பல பேர் சொல்றாங்க. நான் நியாயத்துக்காகப் பேசுறேன். இதனால வர்ற எதிர்வினைகளுக்கு மீடியா சப்போர்ட் பண்ணுவாங்கனு நம்பிக்கை இருக்கு’’ என்கிறார் பூர்ணா.