Published:Updated:

டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

Published:Updated:
டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

முன்னொரு காலத்தில், எதிரிகளிடம் போரிட்டு தன் மண்ணைக் காக்கும் மன்னன், கடம்பவேல்ராஜா. அதேபோல், இந்தக் காலத்திலும் எதிரிகளிடமிருந்து தன் மண்ணைக் காக்க போராடுகிறார் மாடர்ன் மன்னன் `சீமராஜா.' பராக்... பராக்!

டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

85,000 ஏக்கர் பரப்பளவுகொண்ட சிங்கம்பட்டி சமஸ்தானம். ஜமீன்தார் ஆட்சிமுறை ஒழிப்புக்குப் பின், மலையளவு சொத்துகள் மடுவளவு குறைந்து சமஸ்தான குடும்பத்தின் மினுமினுப்பு மங்கிப்போகிறது. அக்காலத்தில் பட்டாடை உடுத்தி, பொன்னாபரணம் அணிந்து, அறுசுவை விருந்துண்டு, பன்னீரில் கொப்பளித்து, மஞ்சத்தில் படுத்துறங்கிய பரம்பரையில் வந்த ராஜாவோ இன்று டிராக்-டிஷர்ட்டோடு சுசுகி பைக்கில் ஊர் சுற்றுகிறார், ராணியோ கையில் விளக்கமாற்றோடு முறைவாசல் செய்கிறார். ஆனாலும், ஊர் மக்களுக்கு ராஜா ராஜாதான்! மரியாதை மங்காமலே இருக்கிறது. சிங்கம்பட்டியின் பக்கத்து ஊரான புளியம்பட்டியில் பெரும்புள்ளியாக இருக்கிறார் `காத்தாடி' கண்ணன். காற்றாலை அமைக்க `காத்தாடி' கண்ணன் சிங்கம்பட்டியில் காலூன்ற முயல, சிங்கம்பட்டி சமஸ்தானம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் படத்தின் மையக்கதை. இதற்கிடையில், சீமராஜாவின் பார்வை சீமராணியின் பக்கம் திரும்புவது, சிம்ரன் சேலையிலேயே சண்டியர் கட்டு கட்டுவது, யோகிபாபு ஒற்றைப் பாடலுக்கு வருவது, சூரி சிக்ஸ் பேக்ஸ் வைப்பதென திரைக்கதையில் என்னென்னமோ நடக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சீமராஜா, கடம்பவேல்ராஜா எனும் இருவேடங்களில் சிவகார்த்திகேயன். ஜாலி,கேலி சீமராஜாவாக மனதில் சௌகர்யமாக அமர்கிறவர், கடம்பவேல் ராஜாவாக அமரும்போதுதான் போர்வாள் குத்துகிறது. வீரதீர புஜபல பராக்கிரம மாஸ் ஹீரோவாக உருவெடுக்க, அத்தனை வித்தைகளையும் படத்தில் இறக்கியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் பன்ச் வசனம் பேசுவதிலும் நன்றாகவே ட்யூன் ஆகியிருக்கிறார் என்பது தெரிகிறது. சீமராஜாவின் ஜோடி `சிலம்ப செல்வி' சுதந்திர செல்வியாக சமந்தா. கிடைத்த இடங்களில் நன்றாகவே நடிப்பை நிரப்பியிருக்கிறார். சில இயக்குநர்களோடு சேரும்போது மட்டும் சூரியின் ஹியூமர் சென்ஸ் ஆசம்மரக்காயா! பொன்ராமின் முந்தைய படங்களைப்போலவே இதிலும் சூரியின் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருப்பது அவருக்கும் நமக்குமே ஆறுதல். 

டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

காமெடி டிபார்ட்மென்ட்டில் நம்மை கவனிக்க வைக்கும் இன்னொருவர் `பனானா' பவுன்ராஜ். ' பத்து பைசா பீடிக்கு ஆசைப்பட்டு...' என பவுன்ராஜ் சொல்லும் ஃப்ளாஷ்பேக்குக்கு சிரிப்பில் அதிர்கிறது அரங்கம். வில்லி காளீஸ்வரியாக சிம்ரன். சிம்ரன்... என்னம்மா சிம்ரன் இது? வழக்கம்போல் ஹைப்பர் ஆக்டிவ் உடல்மொழியோடு ஹைபிட்சில் வசனம் பேசும் வில்லன் வேடத்தில் லால். அவரும் சிம்ரனும் கத்திக்கத்தி பன்ச் பேசியே காதுக்குள் காற்றாலையை சுற்றவிடுகிறார்கள். நெப்போலியன் மற்றும் கீர்த்தி சுரேஷ் தங்களுக்குத் தரபட்ட கதாபாத்திரத்தை நன்றாக நடித்துக்கொடுத்திருக்கிறார்கள். 

வாழ்ந்துகெட்ட ஜமீன் குடும்பம் என்றவுடன் இறங்கி கலாய்த்து தள்ளாமல், அதைக் கவனமாக, கூடவே கொஞ்சம் யதார்த்தமாகக் கையாண்ட விதம் பாராட்டுதலுக்குரியது பொன்ராம். அவரின் சமஸ்தானத்துக்கு உட்பட்ட காமெடி ஏரியாவில் நன்றாகவே ஆட்சி செய்திருக்கிறார். பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் செல்லும் காட்சி, மல்யுத்தத்துக்குத் தயாராகும் காட்சியென பல இடங்களில் நம்மை மறந்து சிரிக்க முடிகிறது. ஆனால், தன் ஏரியாவான காமெடியையும் விட்டுத்தர முடியாமல், சிவாவுக்கு ஏற்ற ஆக்‌ஷன் பேக்கேஜையும் கட்டித் தர முடியாமல் பொன்ராம் தடுமாறியதை உணர முடிகிறது. கமர்ஷியல் படத்தில் பில்டப் காட்சிகள் அவசியம்தான். ஆனால், அளவுக்கு மீறி திரும்பத் திரும்ப வரும் ஸ்லோமோஷன் காட்சிகளும் மாறவே மாறாத தீம் மியூசிக்குகளும் தரையில் காலை ஓங்கி தட்டினால் கைக்கு பறந்து வரும் ஆயுதங்களும் சலிப்பைத் தருகின்றன. படத்தின் எதிர்பார்ப்புக்கு வார் சீக்வென்ஸும் ஒரு முக்கியக் காரணம். அது சூப்பரா, சுமாரா என்று விமர்சிப்பதற்கு முன், முதலில் அந்தக் காட்சிகள் தேவைதானா என்ற குழப்பமே மிஞ்சுகிறது. 

டபுள் ஆக்ட், டபுள் டிராக்... ராஜா கதைல வேற என்ன விசேஷம்? - `சீமராஜா’ விமர்சனம் #SeemaRaja

இமானின் இசையில் பாடல்கள் எல்லாம் எங்கேயோ கேட்ட ரகம். 'அரைச்ச மாவையே அரைச்சாலும் அதுக்கு வேணும் தனித்திறமை' என்பதெல்லாம் சரிதான். அதைக் கேட்க எங்களுக்கு பொறுமையும் வேண்டுமல்லவா? டிராக்கை மாற்றுங்கள் இமான், ப்ளீஸ்! பாலசுப்ரமணியெம்மின் ஒளிப்பதிவு பலே! வண்ணம் குழைத்து பிரமாண்டம் சேர்த்திருக்கிறது. ஃபிளாஷ்பேக் சண்டைக்காட்சிகள் மற்றும் திருவிழா காட்சிகள் இரண்டிலும் முத்துராஜின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் இன்னும் கத்தரி போட்டிருக்கலாம் படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன். 

ஆக்‌ஷன், காமெடி என சீமராஜாவின் இரட்டைக் குதிரை  சாரட் இருவேறு துருவங்களுக்குப் பாய்கிறது. திரைக்கதை கடிவாளத்தைக் கொண்டு அதை வசப்படுத்தியிருக்கலாம் பொன்ராம்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism