Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

‘துப்பாக்கி’ படத்தில் விஜய் பேசும் ‘ஐ ஆம் வெயிட்டிங்...’ டயலாக் பிரபலமானது. இப்போது, அதே வசனத்தை உச்சரித்துக் கொண்டு, த்ரிஷாவின் வருகைக்காக காத்திருக்கிறது, கவுன்சில். ‘சாமி -2’ படத்துக்கு அட்வான்ஸ் வாங்கினார் த்ரிஷா. அவர் கேட்டுக்கொண்டதால்தான் அந்தப் படத்தில் அவர் இருப்பதுபோன்ற கேரக்டரே உருவாக்கப்பட்டது. கமிட் பண்ணும்போதே, ‘அதிகபட்சம் 15 நிமிடங்கள் மட்டுமே’ என்று சொல்லியுள்ளனர். பிறகு த்ரிஷா என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ‘படத்திலிருந்து விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்தார். வாங்கிய அட்வான்ஸையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன், அந்த அட்வான்ஸை உடனடியாக த்ரிஷாவின் அக்கவுன்ட்டில் திருப்பிப்போட்டு விட்டார். ‘அக்ரிமென்டில் உள்ளபடி, த்ரிஷா வந்து நடிக்கவேண்டும்’ என்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஷிபு புகார் கொடுக்க, தற்போது பஞ்சாயத்து ஆரம்பம்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம், அடுத்து ‘சங்கமித்ரா’ என்கிற வரலாற்றுப் படத்தைப் பிரமாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. இப்போது அந்தப் படத்துக்கு முன்பு தனுஷ் நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறது. ‘பவர் பாண்டி’ படத்துக்குப் பிறகு, தனுஷே இந்தப் படத்தை நடித்து இயக்குகிறார். ஹீரோயின், இசையமைப்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும்.

• நட்சத்திரங்கள் பலர் தங்களின் உதவியாளர்கள், மேனேஜர்களைத் தயாரிப்பாளர்களாக்கி சந்தோஷப்படுத்தி இருக்கிறார்கள். தனது 18 படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்த பி.எல்.தேனப்பனுக்கு ‘காதலா காதலா’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் புரமோஷன் கொடுத்தார் கமல். விஜயகாந்த், தன் உதவியாளராக இருந்த சுப்பையாவை ‘பெரியண்ணா’ படத்தின்  தயாரிப்பாளராக்கினார். விஜய் தனக்கு பி.ஆர்.ஓ-வாக இருந்த பி.டி.செல்வகுமாரை ‘புலி’ படத்தின் தயாரிப்பாளராக்கினார். நடிகைகளில் முதன்முதலாக நயன்தாரா, தன் மேனேஜர் ராஜேஷை ‘அறம்’ படத்தின் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்து இருக்கிறார். 

ஜாலி கேள்வி

சையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக வலம் வருகிறார். ஹீரோவாக வலம்வந்த சிம்பு இசையமைப்பாளர் ஆகியிருக்கிறார். இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் ஒரு டஜன் படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஒருபடி மேலே போய் ஹீரோ மற்றும் இயக்குநர் ஆகியிருக்கிறார். இவர்கள் அனைவரிடமும் போய், ‘இசையமைப்பை மட்டும் எப்போ சார் பண்ணுவீங்க?’ என்று கேட்க வேண்டும்.

மிஸ்டர் மியாவ்

வைரல்

சிம்புமீது கவுன்சிலிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் டன்டன்னாகப் புகார் பட்டியல் வாசித்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ‘ரெட் கார்டு’ போட்டு அந்தத் தகவலை நடிகர் சங்கத்துக்கு அனுப்ப, நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு சிம்புவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சிம்புவும் பதில் அனுப்பிவிட்டார். அடுத்து, சிம்புவை வைத்துப் படமெடுத்து நஷ்டமடைந்த ‘மன்மதன்’ தயாரிப்பாளர் கிருஷ்ணகாந்த், ‘சிலம்பாட்டம்’ தயாரிப்பாளர் முரளிதரன், ‘வல்லவன்’ தயாரிப்பாளர் தேனப்பன் போன்ற 10-க்கும் மேற்பட்டவர்களை ஒரே மேடையில் அமரவைத்து அதகளப்படுத்தத் திட்டமிட்டு வருகிறார் மைக்கேல் ராயப்பன்.

ஹைலைட்

விஷாலின் திடீர் அரசியல் பிரவேசத்தால், சினிமா உலகில் சிலருக்கு மகிழ்ச்சி, பலருக்கு அதிர்ச்சி. பிரகாஷ்ராஜ், ஆர்யா போன்ற நட்சத்திரங்கள் விஷாலுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய களமிறங்கப் போகிறார்கள். 145 சிறு பட்ஜெட் படங்களுக்கு மானியத் தொகையைத் தமிழக அரசு தராமல் இழுத்தடிக்கிறது. இப்போது, விஷால்மீதான கோபத்தில் அதை அரசு தராமலே போய்விடுமோ என்று பதறுகிறார்கள், சிறு தயாரிப்பாளர்கள்.