Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

வைரல்

‘ஸ்ருதிஹாசனுக்கும் லண்டனைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலேவுக்கும் காதல்’ என்பதுதான் கோலிவுட்டில் இப்போதைய ஹாட் டாபிக். இருவரும் ஜோடியாக கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் திருமணத்தில் கலந்துகொண்டார்கள். திருமணத்துக்கு வந்திருந்த கமலிடம், மைக்கேலை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். மூவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் செம வைரல்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹைலைட்

தெலுங்கு சினிமாவில் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. அடுத்த ஆண்டுக்கான எதிர்பார்ப்பில் இருக்கும் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்று. இந்தப் படத்தில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, ‘கிச்சா’ சுதீப், விஜய்சேதுபதி என இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் இணைந்துள்ளனர். சிரஞ்சீவியின் 151-வது படம் இது. சுதந்திரப் போராட்ட வீரர் சைரா நரசிம்ம ரெட்டி என்பவரின் வரலாற்றைச் சொல்லவிருக்கிறது இப்படம்.

ஹாட் டாபிக்

மிழ்நாட்டில் இருக்கும் தன் ரசிகர்களுக்காகவே, தொடர்ந்து நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் நிவின் பாலி. சில நேரடித் தமிழ்ப்படங்களுக்கான கதைகளைக் கேட்டவர், புதுமுக இயக்குநர் ஒருவரின் கதையை டிக் அடித்து வைத்திருக்கிறார்.  ‘ரிச்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நிவின்பாலி ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, இயக்குநர் அட்லி தயாரிக்கிறார். ‘ரிச்சி’க்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

ஜாலி கேள்வி!

ப்போது வெளிவரும் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்களை, ‘இந்தப் படத்திலிருந்து காப்பி அடித்தார்கள்... அந்தப் படத்திலிருந்து சுட்டார்கள்’ எனக் கிழித்துத் தொங்கவிடுகிறார்கள் நெட்டிசன்கள். ‘இது காப்பி அடிக்கப்பட்ட காட்சியா?’ என்ற கேள்வியைச் சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் கேட்டால், ‘‘இல்லை, இன்ஸ்பிரேஷன்’’ எனச் சமாளிக்கிறார்கள். நம் கேள்வி, ‘இயக்குநர்களின் இலக்கணத்தில் இன்ஸ்பிரேஷன் ஆவது என்றால் என்ன?’ என்பதுதான்.

• ‘சைத்தான் கா பச்சா’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ராஷி கண்ணா. இவ்விரு படங்களும் இன்னும் ரிலீஸாகாத நிலையில், அடுத்த தமிழ்ப் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார், ராஷி. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்குகிறார்.

மிஸ்டர் மியாவ்

• போகன்’ ரிலீஸுக்குப் பிறகு, இந்த ஆண்டில் ‘குலேபகாவலி’ தவிர எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் உடலைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார், நடிகை ஹன்சிகா. இப்போது, அதர்வா நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். த்ரில்லர் கதையான இதில், அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ‘டார்லிங்’ படத்தின் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்குகிறார்.