Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பவன்குமாரின் ‘லூசியா’, பல மொழிகளிலும் ரீமேக் ஆனது. ‘லூசியா’வுக்குப்பின், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் ‘யூ டர்ன்’ படத்தை இயக்கினார் பவன்குமார். இப்படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றிருக்கும் நிலையில், ‘யூ டர்ன்’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். தமிழிலும் பவன்குமாரே இயக்க, ஹீரோயினாக நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

கோப கேள்வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தியேட்டர்களுக்குக் குறைந்தபட்ச பார்க்கிங் கட்டணத்தை அரசு நிர்ணயித்த பிறகு, சில திரையரங்குகள் ‘ஒரு மணி நேரத்துக்கு 10 ரூபாய்’ என்ற மோசடியைத் தொடங்கியிருக்கின்றன. அந்த அதிமேதாவி களுக்குத்தான் இந்தக் கேள்வி. ‘3 மணி நேரப் படம் பார்க்குறதுக்கு, யாரும் ஒரு மணி நேரம் மட்டும் பார்க்கிங் பண்ணமாட்டாங்கனு தெரியுமா, தெரியாதா?’ தெரியும்னா, ‘பார்க்கிங் கட்டணம் அதிகம் ஆகுமேனு பாதிப் படத்தை மட்டும் பார்த்துட்டுப் போறோம்னு ரசிகர்கள் சொன்னா, டிக்கெட்டின் விலையில் பாதியைக் குறைத்துக்கொள்வீர்களா?’

ஹாட் டாபிக்

மிழ் சினிமாக்களை ஒட்டுமொத்தமாக ட்ரோல் செய்து, சி.எஸ்.அமுதன் இயக்கிய படம் ‘தமிழ்ப்படம்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘தமிழ்ப்படம் 2.0’ என்ற பெயரில் உருவாகவிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனதும், ஹாட் பரபரப்பைக் கிளப்பிவிட்டது. ஜெயலலிதா சமாதியில் ஓ.பி.எஸ் தியானம் செய்ததை இமிடேட் செய்து, ‘மிர்ச்சி’ சிவா தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். சினிமாவுடன் சமகால அரசியலையும் கலாய்த்திருக்கிறார்கள் இதில். ரஜினியின் படத்துக்கு ‘2point0’ என்ற ஹேஷ்டாக் என்றால், இந்த அகில உலக சூப்பர் ஸ்டாரின் படத்துக்கு ‘TP2point0’ என ஹேஷ்டாக் வைத்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

வைரல்

ட்விட்டர் கணக்கில் ஒரு மில்லியன் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார், நடிகை காஜல் அகர்வால். இந்தச் சாதனையை #1MFollwersForQueenKajal என்ற ஹேஷ்டாக்கில் கொண்டாடித் தீர்த்து, வைரல் ஆக்கியிருக்கிறார்கள் காஜல் ரசிகர்கள்.

மிஸ்டர் மியாவ்

• விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் தனியார் தமிழ்த் தொலைக்காட்சியில், சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தி தனக்கான மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்கப்போகிறார், நடிகர் ஆர்யா. இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலத்தில் செட் அமைத்திருக்கிறார்கள். ‘இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வேன்’ என ஒப்பந்தம் போட்டிருக்கிறார், ஆர்யா.