Published:Updated:

பிக் பாஸில் ஆக்ரோஷ கிரிக்கெட் ப்ளேயர்..! இந்தி அதிரடி

பிக் பாஸில் ஆக்ரோஷ கிரிக்கெட் ப்ளேயர்..! இந்தி அதிரடி

பிக் பாஸில் ஆக்ரோஷ கிரிக்கெட் ப்ளேயர்..! இந்தி அதிரடி

பிக் பாஸில் ஆக்ரோஷ கிரிக்கெட் ப்ளேயர்..! இந்தி அதிரடி

பிக் பாஸில் ஆக்ரோஷ கிரிக்கெட் ப்ளேயர்..! இந்தி அதிரடி

Published:Updated:
பிக் பாஸில் ஆக்ரோஷ கிரிக்கெட் ப்ளேயர்..! இந்தி அதிரடி

பிக் பாஸ் இந்தியின் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.

photo credit:@ColorsTV

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதற்காக சில நாள்கள் சிறைவாசமும் அனுபவித்ததுடன், பி.சி.சி.ஐ-யிடம் இருந்து வாழ்நாள் தடையும் பெற்றார். ஆனால், இதற்காக நீதிமன்ற படிக்கட்டு ஏறிய ஸ்ரீசாந்த் அதில் வெற்றியும் பெற்றார். ஆனால், அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்க பி.சி.சி.ஐ மறுத்துவிட்டது. பி.சி.சி.ஐ-யின் முடிவை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கிரிக்கெட் விளையாட முடியாமல் போனாலும், தனது எதிர்காலத்தை இப்போது சினிமா மூலம் வடிவமைத்து வருகிறார். ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த டீம் 5 படம் தமிழ், மலையாளத்தில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. இதேபோல் அக்சர் 2 உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். அதேநேரம் கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வி பெற்றார். விளையாட்டு, அரசியல், சினிமாவை அடுத்து தற்போது தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியில் சல்மான் நடத்தி வரும் பிக் பாஸ் சீசன் 12ஐ எட்டியுள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில் தான் கடைசிப் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார் ஸ்ரீசாந்த். இதற்கான அறிவிப்பை கலர்ஸ் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  கிரிக்கெட் விளையாடும்போது களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவராக இருந்தார் ஸ்ரீசாந்த். இதனால் பல்வேறு சர்ச்சைகள் உருவானது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்வது குறித்து தெரிவித்துள்ள அவர், ``பிக் பாஸ் உண்மையானது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. 2011-ம் ஆண்டே நான் கலந்துகொள்ளவேண்டியது. ஆனால் முடியவில்லை. இருப்பினும் நிகழ்ச்சி நடத்தும் சேனல் உடன் தொடர்பில் இருந்தேன். அதனால் இப்போது மீண்டும் கலந்துகொண்டேன். கிரிக்கெட் அல்லாத வாழ்க்கையில் நான் இப்போது செய்துகொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது" எனக் கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism