Published:Updated:

ராணாவுடன் '1945' கிருஷ்ணாவுடன் 'கழுகு 2' - கதை சொல்லும் இயக்குநர் சத்யசிவா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ராணாவுடன்  '1945' கிருஷ்ணாவுடன் 'கழுகு 2' - கதை சொல்லும் இயக்குநர் சத்யசிவா!
ராணாவுடன் '1945' கிருஷ்ணாவுடன் 'கழுகு 2' - கதை சொல்லும் இயக்குநர் சத்யசிவா!

ராணாவுடன் '1945' கிருஷ்ணாவுடன் 'கழுகு 2' - கதை சொல்லும் இயக்குநர் சத்யசிவா!

நடிகர் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கழுகு'. யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஹிட் அடித்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குநர் சத்யசிவா எடுத்து முடித்திருக்கிறார். இந்த நிலையில், இவர் நடிகர் ராணாவை வைத்து '1945' என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் எடுத்திருக்கிறார். இதுகுறித்து சத்யசிவாவிடம் பேசினேன்,. 

'பாகுபாலி 2' படத்துக்குப் பிறகு ராணா முதலில் கமிட் ஆன படம் இதுதான். இதுவொரு ப்ரீயட் படம். 1940 முதல் 1945 வரை நம்ம ஐ.என்.ஏவில் நடக்ககூடிய கதை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 'இந்தியன் நேஷனல் ஆர்மி'னு ஒன்றை உருவாக்கினார். அதில் இருக்கக்கூடிய முக்கியமான சிப்பாய் பற்றிய கதை. பர்மா, லண்டன் இந்தியாவில் நடக்கிற மாதிரியான கதை. படத்தோட ஷூட்டிங் கேரளா, ஶ்ரீலங்கா, சென்னையில் நடந்தது. 

நேதாஜி பற்றிய பிம்பம் எனக்குள்ளே அதிகம். காந்தியைப் பற்றி சொல்றதைவிட நேதாஜி பற்றி ஏதாவது சொல்லிட்டா கோபப்படுவாங்க. அவருடன் இருந்த நிறைய பேர் அவங்க வாழ்க்கையை தியாகம் பண்ணியிருக்காங்க. முக்கியமா ராமசாமி கேரக்டர். இதில் சத்யராஜ் சார் பண்ணியிருக்கார். படத்தோட ஹீரோயின் ரெஜினா. இவங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த செட்டியார் பொண்ணா நடிச்சிருக்காங்க. ரெஜினா முழுக்க முழுக்க ஹோம்லியா நடிச்ச படமாக இது இருக்கும். ஆனந்தி, ஆதிங்கிற கேரக்டரில் ரெஜினா, ராணா நடிச்சிருக்காங்க. 

ரெஜினா அப்பா கேரக்டரில் நாசர் நடிச்சிருக்கார். ராணா நண்பர் ரோலில் காளிவெங்கட் வருவார். இந்தப் படத்தை ஒரே நேரத்தில் ரெண்டு மொழிகளுக்கும் ஏத்த மாதிரி ஷூட்டிங் பண்ணியிருக்கேன். நேரடி தமிழ் மற்றும் தெலுங்கு படமாகதான் இருக்கும். 

இதுதவிர, கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்திருக்கும் 'கழுகு 2' படம் அதன் முந்தைய படமான 'கழுகு' படத்தின் தொடர்ச்சியாக இருக்காது. இது முற்றிலும் வேறொரு கதை. 'கழுகு 2' பிணம் மற்றும் செந்நாய் தொடர்புடையதா இருக்கும்.  இந்த செந்நாயோட ரோல் படத்துல செம ஃபவர்புல்லா இருக்கும். பத்து யானை ஒன்னா சேர்ந்து வந்தாலும் ஒரு ஆளா இந்த செந்நாய் எல்லாரையும் தூக்கிப் போட்டு அடிக்கும். அந்தளவுக்கு பலம் வாய்ந்தது. ஒரிஜினல் நாயை செந்நாய் கெட்டப்பில் கொண்டு வந்து நடிக்க வைத்தோம். இதுதவிர இதற்கான CCG வொர்க் நடந்திட்டு இருக்கு. படத்தோட கதை ஒவ்வொரு ஊருக்கும் ட்ராவல் ஆகும். இதுவொரு த்ரிலர் ஜானர்தான். ஜானி, மெர்லில்ங்கிற கேரக்டரில் ரெண்டு பேரும் நடிச்சிருக்காங்க''னு சொல்லி முடித்தார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு