பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

வைரல்

ரு படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதால், ‘அருவி’ படத்தையும், எகிப்து படமான ‘அஸ்மா’வையும் ஒப்பிட்டு ட்வீட் செய்து, ‘அருவி’யை மீண்டும் டிரெண்ட் ஆக்கியிருக்கிறார்கள், நெட்டிசன்கள். இதில், விஜய் ரசிகர்களும் அடக்கம். ‘அருவி’ படத்தில் விஜய் படங்களைக் கிண்டலடிக்கும் சில வசனங்களுக்காக அவரின் ரசிகர்கள் காட்டிய எதிர்வினை அது.  “அன்பைப் பறைசாற்ற மட்டுமே எடுக்கப்பட்ட படம், ‘அருவி’. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. யாராவது காயப்பட்டிருந்தால், அதற்காக வருந்துகிறோம்” என அறிவித்துள்ளது, ‘அருவி’ குழு.

மிஸ்டர் மியாவ்

• ‘‘அடிக்கடி ஸ்கிரீன்ல முகத்தைப் பார்த்தா போரடிச்சுடும்’’ என விஜய்சேதுபதி சொன்னாலும், பொங்கல் ரிலீஸுக்கு அவரின் அடுத்த படம் ரெடி. கௌதம் கார்த்தியும் விஜய்சேதுபதியும் இணைந்து ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் நடிக்கிறார்கள். சர்ச்சைக்குரிய வசனங்களால் இது, நல்ல விளம்பரம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

• பேய்ப்படம் என்பதாலோ என்னவோ, ‘காஞ்சனா -3’ ஷூட்டிங்கை தினமும் இரவிலேயே நடத்துகிறார் லாரன்ஸ். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் பிரமாண்டமான ஒரு பங்களாவை பயங்கர பேய் மாளிகையாக்கி இருக்கிறார். ‘பிக்பாஸ்’ சென்சேஷன் ஓவியாவுக்கு, இதில் அதிகமான காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளனர். 

மிஸ்டர் மியாவ்

ஸ்‌ரேயா கடந்த 10 வருடங்களாகவே ஆங்கிலப் புத்தாண்டை லண்டனில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவருக்கு அங்கே, பெரிய நட்புக்கூட்டம் இருக்கிறது. இப்போதும், டிசம்பர் 20-ம் தேதி லண்டன் பறக்கிறார். கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு, 2018 ஜனவரி 7-ம் தேதி இந்தியா வருகிறார்.

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

மிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி-2’ படத்துக்காக வடிவேலு மீது ஷங்கர் புகார் கொடுத்திருக்கிறார். ‘சாமி-2’ படத்துக்காக த்ரிஷாமீது தயாரிப்பாளர் சிபு குற்றச்சாட்டு தந்துள்ளார். ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்காக சிம்புமீது மைக்கேல் ராயப்பன் புகார் செய்துள்ளார். வடிவேலு, த்ரிஷா, சிம்பு என மூன்று பேரையும் வந்து விளக்கம் கொடுக்கும்படி நோட்டீஸ் அனுப்பியாகி விட்டது. இருந்தும் இதுவரை ‘நோ’ ரெஸ்பான்ஸ். அடுத்தகட்டமாக, அவர்கள்மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு  ஆலோசனை நடந்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு