Published:Updated:

’’என்னோட கேரக்டரில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க..!’’ - அருண்ராஜா காமராஜ்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள `கனா' படத்தின் சுவாரஸ்யங்களைச் சொல்கிறார், படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

’’என்னோட கேரக்டரில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க..!’’ - அருண்ராஜா காமராஜ்
’’என்னோட கேரக்டரில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க..!’’ - அருண்ராஜா காமராஜ்

`ஜிகர்தண்டா', `தெறி', `கொடி', `பைரவா', `கபாலி', `காலா' எனப் பல மாஸ் படங்களுக்கு தனது குரலால் எக்ஸ்ட்ரா எனர்ஜி சேர்த்தவர், அருண்ராஜா காமராஜ். மிமிக்ரி கலைஞர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் எனத் தன் சினிமா பயணத்தில் பல படிகளைக் கடந்தாலும், நிறைவேறாமலே இருந்த அவரது இயக்குநர் கனவு, `கனா' மூலம் கைகூடியிருக்கிறது. `கனா' படத்தின் எடிட்டிங் வேலைகளில் பிஸியாக இருந்த அருண்ராஜாவைச் சந்தித்துப் பேசினேன்.  

’’என்னோட கேரக்டரில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க..!’’ - அருண்ராஜா காமராஜ்

`` `வேட்டைமன்னன்’ படத்தோட இயக்குநர் நெல்சனுக்கும், அந்தப் படத்தின் உதவி இயக்குநரான உங்களுக்கும் ஒரே வருடத்துல படம் அமைஞ்சிருக்கு. எப்படி இருக்கு இந்த ஃபீல்?"

``ஒருத்தரை மனசார குருநாதரா ஏத்துக்கிட்டு, அவர்கூட சேர்ந்து வேலை பார்த்து, அவரோட வெற்றியைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டப்போ, அவருக்கு ஒரு பிரச்னை. அந்தப் பிரச்னையைப் பெரிய விஷயமா எடுத்துக்காம, `நீ போய் உன்னோட கரியரைப் பாரு. உன்னையும் பாரு’னு என்னை அனுப்பி வெச்சவர், நெல்சன். இன்னைக்கு `கோலமாவு கோகிலா’ மூலம் அவர் ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கார். அவரோட கஷ்டத்தை அவர்கூட இருந்து பார்த்தவன் நான். இன்னைக்கு அவரோட வெற்றி எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. அவர் படம் ரிலீஸான அதே வருடம் என் படமும் ரிலீஸாகப் போகுது. இது நெகிழ்ச்சியான விஷயம். என் குருநாதர் நெல்சனுக்கு நான் கொடுக்கவேண்டிய மரியாதையைக் `கனா’வில் செஞ்சிருக்கேன். படம் பார்க்கும்போது எல்லோருக்கும் புரியும்." 

’’என்னோட கேரக்டரில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க..!’’ - அருண்ராஜா காமராஜ்

``கிரிக்கெட்டர் கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் எந்தளவுக்குப் பொருந்தியிருக்காங்க?"

``இந்தப் படத்துக்காக அவங்க மெனக்கெட்ட எல்லா விஷயங்களையும் பார்க்கும்போது பிரமிப்பா இருந்தது. கிரிக்கெட் விளையாடத் தெரியாம நடிக்க வந்தவங்க, இப்போ நல்லா கிரிக்கெட் விளையாடுறாங்க. `கனா' படத்தோட ஹீரோயின் கேரக்டரை என்னை மனசுல வெச்சுதான் உருவாக்கினேன். எனக்குள்ள இருந்த கிரிக்கெட் ஆசை, அதை எங்க வீட்டுல சொல்லும்போது நடந்த விஷயம், அதுக்காக நான் மெனக்கெட்ட விஷயம், எனக்கு என்னென்ன பிரச்னைகள் இருந்து... இப்படி என் வாழ்க்கையில் நடந்ததைப் படத்தில் சொல்லியிருக்கேன். என் கேரக்டருக்குப் பதில் ஒரு பெண் கேரக்டரை வெச்சேன். அந்தப் பெண் கேரக்டருக்காக சில விஷயங்களைச் சேர்த்தேன். என்னால் கிரிக்கெட்டர் ஆக முடியலை. இன்ஜீனியரிங் படிச்சேன். நான் கிரிக்கெட்டர் ஆகியிருந்தா எப்படி இருக்கும்னு எனக்குள்ள ஒரு கனவு இருக்கும்ல.. அந்தக் கனவுதான், இந்த `கனா'."

``ஹீரோ தர்ஷன் பற்றிச் சொல்லுங்க?"

``தர்ஷன், என்கூடவே ரொம்ப வருடமா சுத்துற பையன். இந்தப் படத்தில் அவனை நடிக்க வைக்கணும்னு முன்னாடியே முடிவு பண்ணலை. ஹீரோவா யாரை நடிக்க வைக்கலாம்னு யோசிக்கும்போது, இமேஜ் பெருசா இல்லாத அல்லது புதுமுக நடிகரா இருக்கணும்னு நினைச்சோம். ஏன்னா, அப்போதான் என்னால கதையைச் சரியா சொல்லமுடியும்னு நினைச்சேன். ஃபேமஸான நடிகரை கமிட் பண்ணிக்கிட்டா, அவருக்காக சில விஷயங்களைப் படத்துல சேர்க்கவேண்டி இருக்கும். அதனாலேயே பெரிய ஹீரோக்களை நான் யோசிக்கலை. திடீர்னு ஒருநாள், `ஏன் தர்ஷனை நடிக்க வைக்கக்கூடாது?'னு தோணுச்சு. இதை சிவாகிட்ட சொன்னதும், எமோஷன் ஆகிட்டார். ஏன்னா, சிவாவுக்கும் தர்ஷனை நடிக்க வைக்கலாம்னு ஒரு ஐடியா இருந்திருக்கும்போல. இயக்குநர்தான் அதை முடிவெடுக்கணும்னு என்கிட்ட சொல்லாம இருந்திருக்கார். நானே அதைச் சொன்னதும் ரொம்ப சந்தோஷமா, `சரி’னு சொன்னார்.

’’என்னோட கேரக்டரில்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்சிருக்காங்க..!’’ - அருண்ராஜா காமராஜ்

நீங்க படத்தோட ஸ்டில்ஸ்ல பார்க்கிற மாதிரி தர்ஷன் இருக்கமாட்டான். அவன் பக்கா சிட்டி பையன். அவனோட லுக்கை மாற்றி, ஊர் ஸ்லாங்கைப் பேசச் சொல்லிக்கொடுத்து, கிராமத்து இளைஞனா மாத்தியிருக்கோம்!." 

``ஸ்போர்ட்ஸ் படம் எடுக்கிறதுல என்னென்ன சவால்கள் இருந்தது?" 

``படம் எடுக்கிறதுல நிறைய சவால்கள் இருந்தாலும், படம் எடுத்தபிறகு இருக்கிற சவால்கள்தான் அதிகம். இந்திய சினிமாவுலேயே மகளிர் கிரிக்கெட்டை மையமா வெச்சு வர்ற முதல் படம் இதுதான். ஆனா, அதைப் பற்றி யாரும் பேச மாட்டேங்கிறாங்க. `அப்பா, பொண்ணு, ஸ்போர்ட்ஸ் ஜானர்... அப்போ `டங்கல்' படத்தோட காப்பியா?'னு கேட்கிறாங்க. சிலர், `பெண்களை மையமா வெச்சு ஸ்போர்ட்ஸ் படமா.. அப்போ, `சக் தே இந்தியா' படத்தோட காப்பியா?'னு கேட்கிறாங்க. இந்த ஒப்பீடுதான் பெரிய சவாலா இருக்கு. யார் என்ன படம் எடுத்தாலும், அது அந்தப் படத்தோட காப்பியா, இந்தப் படத்தோட காப்பியாங்கிற கேள்விகளை எதிர்கொள்வதுதான் கடுப்பா இருக்கு!."

அருண்ராஜா காமராஜின் முழு பேட்டியை வியாழக்கிழமை வரும் ஆனந்தவிகடன் இதழில் படிக்கலாம்...