Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

நியூஸ்

வி
ஜயகாந்த்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் ‘மதுரவீரன்’, பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவிருக்கிறது. ‘இப்படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வரும்’ என நம்பும் சண்முகப்பாண்டியன், ‘மதுரவீரன்’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், ஐரோப்பா சென்று உடல் எடையைக் குறைத்து ‘ஃபிட்’ ஆகியிருக்கிறார்.

கேள்வி

மூகவலைதளங்களில் ஏடாகூடமாக எந்தக் கருத்தையாவது சொல்லி, அது சர்ச்சையில் சிக்கும்போது, ‘என் அக்கவுன்ட்டை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க’ என்ற டெம்ப்ளேட் பதிலைச் சொல்ற பிரபலங்கள், ‘அக்கவுன்ட்டை ஹேக் பண்ணிட்டாங்கனு அன்னைக்கு சொன்னேன்ல... அவர் இவர்தான்’னு யாரையாவது அடையாளம் காட்டியிருக்காங்களா?

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹாட் டாபிக்

2ஜி
வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன், ‘ராஜா, கனி நடித்துள்ள ‘திருட்டுப்பயலே-1’ படத்துக்கான தீர்ப்பு இன்று வெளியாகிறது. ஜெயலலிதா, சசிகலா நடித்த ‘திருட்டுப்பயலே-2’வுக்குக் கிடைத்த வரவேற்பு இதற்கும் கிடைக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்’ என ட்வீட் செய்திருந்தார், நடிகர் சித்தார்த். வழக்கிலிருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த ட்வீட்டை உடனடியாக நீக்கிய சித்தார்த், ‘சூப்பர் ஹிட் எனத் தகவல் வந்திருக்கிறது. அப்பாவி இந்திய அரசியலுக்கு வாழ்த்துகள்’ எனப் புது ட்வீட் போட்டிருக்கிறார். சித்தார்த்தின் இந்த அரசியல் கருத்து, நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாக சுற்றிக்கொண்டிருக்கிறது.

வைரல்

மீபத்தில் டாப்லெஸ் போட்டோக்களை இணையத்தில் உலவவிட்ட நடிகை எமி ஜாக்சன், இப்போது மீண்டும் ஒரு போட்டோ ஷூட் நடத்தி, சமூக வலைதளங் களில் பதிவேற்றியிருக்கிறார். எமியின் இந்தக் கவர்ச்சி ஸ்டன்ட்டுக்கு லைக்ஸ் குவித்து வைரல் ஆக்கியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

மிஸ்டர் மியாவ்

சூர்யா, செல்வராகவன் இணையும் படத்தில் ஹீரோயின் ஆகியிருக்கிறார், சாய் பல்லவி. ‘‘சிறுவயதிலிருந்தே சூர்யாவின் தீவிர ரசிகை நான். அவரோடு ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்ற நீண்டநாள் ஆசை நிறைவேறியிருக்கிறது’’ என்கிறார் பல்லவி. விஜய் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘கரு’ ரிலீஸுக்கு ரெடியாக இருக்க, தனுஷுடன் ‘மாரி-2’ படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார், சாய் பல்லவி.

‘நெ
ஞ்சம் மறப்பதில்லை’, ‘வணங்காமுடி’, ‘உள்குத்து’, ‘காத்திருப்போர் பட்டியல்’ எனத் தாம் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவிருப்பதில் சந்தோஷமாக இருக்கிறார், நந்திதா. இப்போது ஹீரோயினை மையப்படுத்திய கதை ஒன்றில், பாக்ஸிங் வீராங்கனையாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் நந்திதா.

மிஸ்டர் மியாவ்

சீனுராமசாமி - உதயநிதி ஸ்டாலின் இணையும் படத்தில், ஹீரோயினாகிறார் தமன்னா. ‘கண்ணே கலைமானே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம், முழுக்க காதலை மையப் படுத்தியதாம். மதுரை அருகே சோழவந்தானில்  ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism