Published:Updated:

“சூப்பர் ஸ்டார் என்னைப் பாராட்டினார்!” - ‘அருவி’ அதிதி பாலன்

“சூப்பர் ஸ்டார் என்னைப் பாராட்டினார்!” -  ‘அருவி’ அதிதி பாலன்
பிரீமியம் ஸ்டோரி
“சூப்பர் ஸ்டார் என்னைப் பாராட்டினார்!” - ‘அருவி’ அதிதி பாலன்

ஸ்டார்வெ.வித்யா காயத்ரி - படம் : சொ.பாலசுப்ரமணியன்

சினிமாவில் பெண்ணை மையப்படுத்தி வரும் கதைகள் அரிது. அப்படி ஒரு குறிஞ்சி மலர்தான் சமீபத்தில் வெளியான ‘அருவி’ திரைப்படம். புதுமுகமானாலும் சடுதியில் மாறும் சிறுசிறு முகபாவனைகளிலிருந்து நுரையீரல் திணறும் அழுகை வரை ‘அருவி’ கதாபாத்திரத்தை வாழ்ந்து தீர்த்திருக்கிறார் அதிதி பாலன். படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்த அதிதியை ஒரு தேநீர் இடைவேளையில் சந்தித்தோம்.

வழக்கறிஞர் அதிதி ஹீரோயின் ஆனது எப்படி?

‘`நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில். பெங்களூரில் சட்டம் படிச்சேன். `தியேட்டர் ப்ளே'யில் சேர்ந்து நிறைய நாடகங்களில் நடிச்சுட்டிருந்தேன். அப்படி என் நடிப்பைப் பார்த்த நண்பர் ஒருவர், ‘அருவி’ பட ஆடிஷன் தகவலைச் சொல்லி என்னைக் கலந்துக்கச் சொன்னார். ஆனா, முதல் படத்திலேயே இவ்வளவு வலிமையான கேரக்டர் கிடைக்கும்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை.’’

“சூப்பர் ஸ்டார் என்னைப் பாராட்டினார்!” -  ‘அருவி’ அதிதி பாலன்

க்ளைமாக்ஸ் சீன்ல எல்லோரையும் அழ வெச்சுட்டீங்களே?

‘`உண்மையைச் சொல்லணும்னா, அந்த சீன்ல நடிக்கும்போது பயத்தில் எனக்கு அழுகையே வந்துடுச்சு. என் அம்மாதான், ‘உன்னால முடியும்’னு தைரியம் சொன்னாங்க. அந்த வசனம் பேசும்போது என்னையும் அறியாமல் ஒருவிதமா மனசு பாரமாயிடுச்சு.”

அதிதிக்கு எதில் ஆர்வம்?

‘`சின்ன வயசுல பரதநாட்டியம் கிளாஸ் போனேன். காலேஜ் படிக்கிறதுக்காக வெளியூருக்குப் போனதால இடையில் பரதத்துக்கு பிரேக் விட்டேன். இப்போ மறுபடியும் டான்ஸ் கிளாஸ் போயிட்டு இருக்கேன். அப்பா கர்னாடக சங்கீதத்துல எக்ஸ்பெர்ட். அவர்கிட்ட கத்துக்கிட்டு இருக்கேன்.’’

உங்க பொழுதுபோக்கு?

‘`நிறைய ட்ராவல் பண்ணுவேன். ட்ரெக்கிங் போறது ரொம்பப் பிடிச்ச விஷயம். ஒருநாள் ஃப்ரீயா இருந்தாலும் நானும் நண்பர்களும் சேர்ந்து டூர் கிளம்பிடுவோம்.’’

உங்களுடைய ப்ளஸ், மைனஸ்?

‘`நான் ரொம்ப நேர்மையா இருப்பேன். அதனாலேயோ என்னவோ கொஞ்சம் கோபப்படுவேன். ஏதாவது தப்புனு தோணுச்சுனா முகத்துக்கு நேரா சொல்லிடுவேன். இதுவே சில நேரம் ப்ளஸ்ஸாகவும் சில நேரம் மைனஸ்ஸாகவும் மாறிருக்கு.’’

மறக்க முடியாத பாராட்டு?

‘`குறிப்பா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் எனக்கு போன் பண்ணிணாங்க. ‘சூப்பரா நடிச்சிருக்கீங்கம்மா... ஹேட்ஸ் ஆஃப்’னு சொன்னாங்க. நான் அப்படியே வானத்துல பறந்துட்டேன். அவங்ககூட போட்டோ எடுக்க அனுமதி கேட்டிருக்கேன். ஸோ, சீக்கிரமே தலைவரைப் பார்க்கப் போறேன்.’’

எதிர்காலத் திட்டம்?

‘`மேற்படிப்புதான். சினிமாவைப் பொறுத்த வரை, வித்தியாசமான கேரக்டர்கள் பண்ணணும்!”