Published:Updated:

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2

த்தாரில் இருக்கும் தனது அம்மாவிடம் அஞ்சலி போனில் பேசினார். அதனால், அவர் பத்திரமாக இருப்பதாக சொல்லி புகாரை வாபஸ் வாங்க முயற்சித்தார் அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர். அஞ்சலியை ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார் அவரது சித்தி பாரதி தேவி. ''குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் துணிச்சலுடன் வெளியில் வருவேன்" என்று போனில் பேசி இருக்கிறார் அஞ்சலி. மணிக்கு ஒரு தரம் அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது அஞ்சலியை பற்றிய செய்திகள்.

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2

இனி அஞ்சலியின் மறுபக்கம் ...

'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் நாயகியாக அஞ்சலியை தேர்வு செய்தவுடன், படத்திற்கான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கொடுத்து நடித்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். அஞ்சலியின் முதல் நடிப்பு குறித்து கேட்டதற்கு "தொடக்கத்தில் அந்தப் பொண்ணுக்கு நடிக்கவே தெரியலைன்னு தான் சொல்வேன். ஒரு நடிகைக்கான  நளினத்தோடு நடக்கக் கூட தெரியவில்லை. அதைக் கூட நாங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. அவரது நடை, பாவணைகள் எல்லாமே வித்தியாசமாக‌ இருந்தது. சுருக்கமா சொல்லணும்னா, குக்கிராமத்துலருந்து வந்ததால கனவு தொழிற்சா லையின் அங்க அசைவுகள் எதுவுமே தெரியாமல் தான் இருந்தார் அஞ்சலி" என்கிறார்  இயக்குனர் களஞ்சியம்.

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2

இத்தனை குறைகள் இருந்தாலும் அஞ்சலியை ஒதுக்கிவிட மனமில்லாத களஞ்சியம், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் இணை இயக்குனர் பரத்திடம் கதாநாயகன் மயூருக்கும், அஞ்சலிக்கும் நடிப்பை கற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஒப்ப டைத்தார். நடிப்பு வராத போதும் அஞ்சலி மீது அவர் காட்டிய கனிவிற்கு காரணமே அஞ்சலி முகத்தில்  நிரந்தரமாக குடியேறி இருந்த ஒரு சோகம்.

 இருவரும் தினமும் அஞ்சலிக்கு நடிப்பு பயிற்சி தந்தார்கள். காலை 10 முதல் மதியம் 1 மணிவரை டிரெயினிங் கொடுத் துக் கொடுத்து அஞ்சலியை செதுக்கினார்கள். வாரம் ஒரு காட்சியை நடிக்க வைத்து, அதை களஞ்சியத்திற்கு போட்டுக் காட்டினார் இணை இயக்குனர் பரத்.களஞ்சியத்தை மறந்தாலும் ஒளிப்பதிவாளர் கே.வி.மணியையும் இணை இயக் குனர் பரத்தையும் அஞ்சலியால் மறக்கவே முடியாது. இவர்கள் தானே அஞ்சலியை அரிதார மேடை ஏற்றுவதற்காக அரும்பாடுபட்டவர்கள்.

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2
அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2

ஆறு மாத காலம் நடிப்பு பயிற்சி கொடுத்த  பிறகும் கூட அஞ்சலியை கேமரா முன்பாக நிற்க வைக்க தயங்கிய‌ படக் குழு, அவரது நடிப்பில் ஒரு டெலிஃபிலிம் ஒன்றை உருவாக்கியது. அந்த ஒருமணி நேர படம் தான் அஞ்சலிக்கு முதல் படம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தோற்ற சரித்திரத்தை  டெலி ஃபிலிமாக 'ஆதி அருணாச்சலம்' என்ற பெயரில் களஞ்சியத்தின் நண்பர் எல்.சீனிவாசன் உருவாக்கினார். அதில் திலோத்தமை பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை அஞ்சலிக்கு தந்தார்கள். யாரும் எதிர்பாராத விதத்தில், திலோத்தமை பாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இதற்கு பிறகு தான், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஓப்பனிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஃபினிஷிங் சரியில்லாமல் போனது. அமர்க்களமாய் முத்தமிட கிளம்பி யவர்கள் நிதிப்பற்றாக்குறையால் பாதி வழியில் படுத்துக் கொண்டார்கள். வேறு சில நெருக்கடிகளும் தன்னைச் சுழற்றி அடித்ததால் களஞ்சியத்தால் சத்தமினிறி முத்தமிட முடியவில்லை. பாதி முடிந்த நிலையில் படம் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது.

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர்: பகுதி 2

ஆனாலும், அஞ்சலிக்கு சினிமாவில் நடித்து தனது குடும்பத்தின் பொருளாதார சூழலை சமாளிக்க வேண்டிய கட் டாயம். அதனால், களஞ்சியத்திற்காக காத்திருக்காமல், சித்தியும் மகளும் நேரடியாகவே களத்தில் இறங்கி சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்கள். சினிமா வாய்ப்புகள் மட்டுமில்லாமல், மாடலிங் துறை புகைப்படக்காரர்களை வைத்து, கையில் மடியில் இருந்ததை எல்லாம் செலவு செய்து போட்டோ ஷூட் எல்லாம் எடுத்தார்கள். திரைத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண் சந்திக்க வேண்டிய இன்னல்களும் இடைஞ்சல்களும் அஞ்சலிக் காகவும் சேர் போட்டு காத்திருந்தது.  அத்தனையும் தாண்டி கலர்ஃபுல் கதாநாயகியாகி ஜொலித்தார் அஞ்சலி.

அது  எப்படி சாத்தியமானது?

நாளை சந்திப்போம்...