Published:Updated:

`ஹல்லோ..!’ - ஜோதிகாவின் `காற்றின் மொழி’ டீசர்

சனா
`ஹல்லோ..!’ - ஜோதிகாவின் `காற்றின் மொழி’ டீசர்
`ஹல்லோ..!’ - ஜோதிகாவின் `காற்றின் மொழி’ டீசர்

ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

வித்யாபாலன் நடிப்பில் இந்தியில் வெளியான திரைப்படம் 'துமாரி சுலு'. இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின்  ரீமேக்கை தமிழில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். ஜோதிகா, லீட் ரோல் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கிறார். வீட்டில் ஹவுஸ் ஒயிஃப்பாக இருக்கும் பெண், ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜே ஆகும் வகையில் இந்தப் படத்தின் கதையம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இப்படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராகவும், பொன் பார்த்திபன் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளனர்.

அக்டோபர் 18-ல் ரிலீஸாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் டீசர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். தனஞ்செயன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.