Published:Updated:

`ஜெயலலிதா குறித்த முழுமையான பதிவாக இருக்கும்!’ - `அயர்ன் லேடி’ படம் குறித்து இயக்குநர் பிரியதர்ஷினி

`ஜெயலலிதா குறித்த முழுமையான பதிவாக இருக்கும்!’ - `அயர்ன் லேடி’ படம் குறித்து இயக்குநர் பிரியதர்ஷினி
`ஜெயலலிதா குறித்த முழுமையான பதிவாக இருக்கும்!’ - `அயர்ன் லேடி’ படம் குறித்து இயக்குநர் பிரியதர்ஷினி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்போவதாக இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் விஜய், இயக்குநர் பிரியதர்ஷினி ஆகிய மூவரும் அறிவிப்பு வெளியிட்டனர். ஆனால், அதன் பிறகு மூவரிடமிருந்து எந்த ஓர் அப்டேட்டும் இல்லாத நிலையில், தற்போது இயக்குநர் பிரியதர்ஷினியிடமிருந்து ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படத்தின் பெயர் 'தி அயர்ன் லேடி' என்றும் ஃபர்ஸ்ட் லுக்கின் பேக் ட்ராப்பில் தலைமை செயலகமும் 'அம்மா' என்ற கேப்ஷனும் இடம் பெற்றியிருக்கிறது. இப்படத்தில் ஜெயலலிதாவாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் நடக்கும் படத்தின் தொடக்கவிழா அன்று வெளியாகும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இவர் இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்து தற்போது வரலட்சுமி சரத்குமரை வைத்து 'சக்தி' எனும் ஹீரோயின் சென்ட்ரிக் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'தி அயர்ன் லேடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து படத்தின் இயக்குநர் பிரியதர்ஷினியிடம் பேசினோம்.``சின்ன வயசில இருந்து ஜெயலலிதாவைப் பார்த்து நான் வளர்ந்திருக்கேன். ஒரு பெண் இயக்குநராக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எடுப்பது பெருமையாக இருக்கிறது. ஜெயலலிதாவின் பயோபிக்கை சிறப்பாக எடுப்பேன் என நான் நம்புகிறேன். சினிமா தொடங்கி அரசியல் வாழ்வு வரை ஜெயலலிதா வாழ்க்கையின் முழுமையான பதிவாக இந்தப் படம் இருக்கும். நித்யா மேனன் மற்றும் வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் நடிக்கின்றனர்’’ என்றார். அநேகமாக நித்யா மேனன், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.