Published:Updated:

கன்னட சூப்பர் ஸ்டார் படத்தில் அனுபமா பரமேஷ்வரன்!

கன்னட சூப்பர் ஸ்டார் படத்தில் அனுபமா பரமேஷ்வரன்!
கன்னட சூப்பர் ஸ்டார் படத்தில் அனுபமா பரமேஷ்வரன்!

கன்னட சூப்பர் ஸ்டார் படத்தில் அனுபமா பரமேஷ்வரன்!

'பிரேமம்' படத்தின்மூலம் திரைத் துறையில் அடியெடுத்துவைத்த அனுபமா பரமேஷ்வரனுக்கு தெலுங்கு சினிமா பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. இதற்கிடையில், 'கொடி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். மீண்டும் தெலுங்கில் பிஸியாக இருக்கும் அனுபமா பரமேஷ்வரனுக்குத் தற்போது கன்னட சினிமாவில் ஜாக்பாட் அடித்துள்ளது.

புனித் ராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதை உறுதிப்படுத்தும் விதமாக அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார் நடிகை அனுபமா பரமேஷ்வரன். 'நடசார்வபவுமா' எனப் பெயரிட்டுள்ள இப்படத்தை பவன் வடேயர் என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தில், பழம்பெரும் நடிகை சரோஜா தேவி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.   

அடுத்த கட்டுரைக்கு