Published:Updated:

உதயநிதிக்கு ஜோடியாகும் டோலிவுட் நடிகை!

உதயநிதிக்கு ஜோடியாகும் டோலிவுட் நடிகை!
உதயநிதிக்கு ஜோடியாகும் டோலிவுட் நடிகை!

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'நிமிர்' படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, இயக்குநர் சீனு ராமசாமியின் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இதைத் தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் 'சைக்கோ' எனும் படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க, முக்கியமான கேரக்டரில் நித்யா மேனன் நடிக்கிறார். தற்போது, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஹாரர் ஜானரில் உருவாகவிருக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அப்படத்துக்கு 'ஏஞ்சல்' எனப் பெயரிட்டுள்ளனர். அதில், பேய் வேடத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்க, உதயநிதிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'ஆர்.எக்ஸ்.100' திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.