Published:Updated:

'தேவி 2' படத்தில் பிரபுதேவாவுக்கு மூன்று ஹீரோயின்கள் !

'தேவி 2' படத்தில் பிரபுதேவாவுக்கு மூன்று ஹீரோயின்கள் !
'தேவி 2' படத்தில் பிரபுதேவாவுக்கு மூன்று ஹீரோயின்கள் !

இயக்குநர் விஜய் - பிரபுதேவா காம்போவில் 2016-ம் ஆண்டு வெளியான 'தேவி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து இதே கூட்டணியில் 'லக்‌ஷ்மி' எனும் படம் வெளியானது. இந்நிலையில், 'தேவி' படத்தின் அடுத்த பாகமான 'தேவி 2' படத்தை இயக்கி வருகிறார் விஜய். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மொரீஷியஸ் நாட்டில் நடைபெற்றுவருகிறது. '

'தேவி' படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். ஆனால், 'தேவி 2' படத்தில் தமன்னாவோடு சேர்ந்து நித்யா மேனன், எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். மேலும், கோவை சரளா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படம் தவிர, 'பொன் மாணிக்கவேல்', 'தேள்' உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் பிரபுதேவா.