Published:Updated:

`சிம்டாங்காரன்' யார் தெரியுமா..? வெளியானது சர்கார் சிங்கிள் டிராக் #Sarkar #Simtaangaran

சனா
`சிம்டாங்காரன்' யார் தெரியுமா..? வெளியானது சர்கார் சிங்கிள் டிராக் #Sarkar #Simtaangaran
`சிம்டாங்காரன்' யார் தெரியுமா..? வெளியானது சர்கார் சிங்கிள் டிராக் #Sarkar #Simtaangaran

'மெர்சல்' படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் 'சர்கார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். இதுதவிர, படத்தில் வரலட்சுமி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நான்காவது முறையாக விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்தப் படத்திலும் அமைந்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில், 'சிம்டாங்காரன்'  என்ற சிங்கிள் ட்ராக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. 

இதற்கிடையில் 'சிம்டாங்காரன்'  என்ற வார்த்தைகான அர்த்தம் என்னவென்று பாடலாசிரியர் விவேக் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 'கவர்ந்து இழுப்பவன்', 'பயமற்றவன்', 'துடுக்கானவன்' இவைகள்தாம் 'சிம்டாங்காரன்' என்ற பெயருக்கு அர்த்தம் என்று தெரிவித்திருந்தார்.

தற்போது சன் நெக்ஸ்ட் ஆப்பில் 'சிம்டாங்காரன்' பாடல் வெளியாகி, விஜய் ரசிகர்களை சந்தோஷம் அடையச் செய்துள்ளது. இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ‪மேலும் #Simtaangaran ஹேஸ்டேக்கும் தற்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வேகமாக இடம்பிடித்து வருகிறது.

சிம்டாங்காரன்‬ பாடலின் வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்...