Published:Updated:

`சண்டக்கோழி 2' இசை வெளியீட்டு விழா - ஆன்லைன் மீடியாக்களுக்கு விஷால் விடுத்த கோரிக்கை

'சண்டக்கோழி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதுகுறித்த கட்டுரை இங்கே.

`சண்டக்கோழி 2' இசை வெளியீட்டு விழா - ஆன்லைன் மீடியாக்களுக்கு விஷால் விடுத்த கோரிக்கை
`சண்டக்கோழி 2' இசை வெளியீட்டு விழா - ஆன்லைன் மீடியாக்களுக்கு விஷால் விடுத்த கோரிக்கை

லிங்குசாமி இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம், `சண்டக்கோழி'. விஷாலின் ஆரம்பகால சினிமா வாழ்க்கைக்கு முக்கியமான படமாக இது அமைந்தது. இந்த நிலையில், 'சண்டக்கோழி 2' படம், அதே லிங்குசாமி - விஷால் கூட்டணியில் உருவாகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம், அக்டோபர் 18-ம் தேதியன்று திரைக்கு வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.  


இந்த நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது, ``சினிமா விமர்சனங்கள் ஒரு திரைப்படத்துக்கு மிகவும் முக்கியம். ஆனால், ஆன்லைன் மீடியாவில் படம் குறித்து விமர்சனம் செய்பவர்கள், அந்தப் படம் வெளியாகி மூன்று நாள்களுக்குப் பிறகு, அவரவர் விமர்சனங்களைப் பதிவு செய்தால், நன்றாக இருக்கும். ஒரு சில ஆன்லைன் மீடியாக்களுக்கு இதை என்னுடைய கோரிக்கையாகவே முன்வைக்கிறேன். இதை ஏற்றுக்கொண்டால், நன்றாகயிருக்கும். 

படம் குறித்த விமர்சனம் செய்வது உங்களுடைய பொறுப்பு, கடமை. ஆனால், படத்தின் முதல் மூன்று நாள்கள் படத்தில் நடித்தவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் முக்கியம். ஒரு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உங்களிடம் இதை கோரிக்கையாகக் கேட்கிறேன்!'' எனத் தெரிவித்திருக்கிறார், விஷால்.