Published:Updated:

`அர்ஜுன் ரெட்டி' இந்தி ரீமேக்கில் `தோனி' பட ஹீரோயின் !

`அர்ஜுன் ரெட்டி' இந்தி ரீமேக்கில் `தோனி' பட ஹீரோயின் !
`அர்ஜுன் ரெட்டி' இந்தி ரீமேக்கில் `தோனி' பட ஹீரோயின் !

`அர்ஜுன் ரெட்டி' இந்தி ரீமேக்கில் `தோனி' பட ஹீரோயின் !

தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா, ஷாலினி பாண்டே நடித்து வெளியான `அர்ஜுன் ரெட்டி' படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் ஹிட்டான இப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா'வை இயக்குநர் பாலா இயக்க, அதில் துருவ் விக்ரம், மேகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் அப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாஹித் கபூர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என நீண்ட நாள் தேர்வுக்குப் பிறகு கியாரா அத்வானியைக் கமிட் செய்துள்ளது படக்குழு. கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் அவரின் மனைவி சாக்‌ஷி கேரக்டரிலும் மகேஷ் பாபுவுடன் 'பரத் எனே நேனு' படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. `அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் வங்காதான் இந்தப் படத்தையும் இயக்கவிருக்கிறார். மேலும், இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. சில வாரங்களுக்கு முன், இதன் ஒரிஜினல் வெர்ஷனை பார்த்து பிரமித்த ஷாஹித் கபூர், விஜய் தேவரக்கொண்டாவுக்கு ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். தவிர, இந்தக் கேரக்டருக்காக அவர் தாடி வளர்த்து வருகிறாராம். 

அடுத்த கட்டுரைக்கு