Published:Updated:

தலைமறைவு ஏன்? நடிகை அஞ்சலி பரபரப்பு தகவல் (படங்கள்)

தலைமறைவு ஏன்? நடிகை அஞ்சலி பரபரப்பு தகவல் (படங்கள்)
தலைமறைவு ஏன்? நடிகை அஞ்சலி பரபரப்பு தகவல் (படங்கள்)

சென்னை: என்னை யாரும் கடத்தவில்லை, தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
 

தலைமறைவு ஏன்? நடிகை அஞ்சலி பரபரப்பு தகவல் (படங்கள்)

கடந்த 7ஆம் தேதி தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்ற நடிகை அஞ்சலி, சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனிடையே, சித்தப்பா சூரிபாபுடன் ஹைதராபாத்தில் உள்ள  ஓட்டலில் தங்கி இருந்தபோது நடிகை அஞ்சலி திடீரென மாயமானார்.  இது குறித்து அஞ்சலியின் சகோதரர் ரவி சங்கர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் செய்தார்.

இதனிடையே, சகோதரர் ரவி சங்கருடன் நடிகை அஞ்சலி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். அப்போது, சித்தி பாரதி தேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், சூரிபாபு செருப்பால் அடித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் அவரது சித்தி பாரதிதேவி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 

தலைமறைவு ஏன்? நடிகை அஞ்சலி பரபரப்பு தகவல் (படங்கள்)

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உயர் உத்தரவிட்டது.

இந்த நிலையில், 4 நாட்களாக தலைமறைவாக இருந்த அஞ்சலி நேற்றிரவு ஹைதராபாத் துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு முன்பு ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அஞ்சலி, என்னை யாரும் கடத்தவில்லை என்றும் தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்றும் கூறினார்.

தமக்கு போலீஸ் பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர் என்று கூறிய அஞ்சலி, படப்பிடிப்பு நெருக்கடியால் வெளியே வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமக்கு எதிராக புகார் இருப்பதால் காவல் நிலையத்தில் ஆஜரானதாகவும், வீட்டை விட்டு வெளியேறி மும்பையில் தலைமறைவாக இருந்தேன் என்றும் அஞ்சலி கூறினார்.

தலைமறைவானது பற்றிய முழு விவரங்களையும் பின்னர் தெரிவிப்பதாகவும் அஞ்சலி கூறினார்.

அஞ்சலி ஆஜரானது குறித்து ஹைதராபாத் துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு கூறுகையில், இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது காணாமல் போன வழக்கு. அஞ்சலி எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மும்பை சென்றுள்ளார். மும்பையில் இருந்ததாக அவர் கூறுகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

##~~##
இதனிடையே, நடிகை அஞ்சலி ஆஜராக தெலுங்குபடத் தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.
தெலுங்கில் "பலுப்பு" என்ற படத்தில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இந்த நிலையில் திடீர் தலைமறைவானதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனாலேயே, நடிகை அஞ்சலி காவல்துறையில் ஆஜராகியுள்ளதாக கூறப்படுகிறது. "பலுப்பு" படத்தின் இறுதிக்கட்ட காட்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது அஞ்சலி இருக்கிறார். இதேபோல் நடிகர் வெங்கடேசுடன் "போல் பச்சன்" படத்திலும் அஞ்சலி நடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.