`நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ!’ -பரியேறும் பெருமாள் `கருப்பி’ பாடல் வீடியோ

`நீ இல்லாத காட்டில் நான் எப்படித்தான் திரிவேனோ!’ -பரியேறும் பெருமாள் `கருப்பி’ பாடல் வீடியோ
இயக்குநர் பா.இரஞ்சித்தின் `நீலம்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக `பரியேறும் பெருமாள்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தை ராமின் உதவி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் கதிர் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக `கயல்’ ஆனந்தி நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் நாயைப் பற்றிய வலியுடன் கூடிய வரிகளை உடைய பாடலான 'கருப்பி' பாடலுக்கு கூடுதல் லைக்ஸ் கிடைத்தது. படக்குழுவினரின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் #PariyerumPerumalPET என்ற ஹேஷ்டேக்குடன் தங்கள் செல்லப் பிராணியான நாயுடன் எடுத்த புகைப்படத்தையும், அதனோடு தங்களின் அனுபவத்தை பத்து வரிகளுக்குள் எழுதிப் பதிவிடுமாறு கூறியிருந்தனர். அதற்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்கள் செல்ல நாயுடன் எடுத்த புகைப்படங்களையும் அனுபவங்களையும் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், 'கருப்பி' பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.