Published:Updated:

ராஜா ராணியின் செல்லச் சண்டைகள், நஸ்ரியாவின் ப்ரதர் காதல்..! #5yearsOfRajaRani

`ராஜா ராணி' திரைப்படம் வெளியாகி, இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இப்படம் குறித்த ஒரு குட்டி ரீவைண்டு!

ராஜா ராணியின் செல்லச் சண்டைகள், நஸ்ரியாவின் ப்ரதர் காதல்..! #5yearsOfRajaRani
ராஜா ராணியின் செல்லச் சண்டைகள், நஸ்ரியாவின் ப்ரதர் காதல்..! #5yearsOfRajaRani

கலர்ஃபுல் காதல் கதையை அசத்தலான வெற்றியாகக் கொடுத்த அட்லியின் முதல் மார்டன் லவ் காவியமான `ராஜா ராணி'க்கு இன்றோடு 5 வயது. ஆம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில்தான், `ராஜா ராணி' வெளியானது.  

பொதுவாக காதல் திரைப்படங்கள் வெளியானால் டீனேஜர்களின் வருகை மட்டுமே அதிகளவில் இருக்கும். ஆனால், அந்த டிராக்கிலிருந்து விலகி, குடும்பங்களையும் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு அழைத்து வந்தது, அட்லியின்  மேஜிக்கல் மிஸ்ட்ரி.

ராஜா ராணியின் செல்லச் சண்டைகள், நஸ்ரியாவின் ப்ரதர் காதல்..! #5yearsOfRajaRani

There is love (life) after a love failure : ``ஒவ்வொரு காதல் தோல்விக்குப் பிறகும் அழகான வாழ்க்கை உள்ளது" என்ற பொன்மொழியை அடிப்படையாகக் கொண்டு, அதையே கதையாக்கி அசத்தியிருந்தார், இயக்குநர் அட்லி.

ஒவ்வொரு வீட்டிலும் டாம் அண்ட் ஜெர்ரியாக வாழ்ந்து வரும் கணவன் மனைவிகள் லவ் பேர்ட்ஸாக மாறும் தருணம்.

சர்ச்சில் பெற்றோரது விருப்பத்துக்காக விருப்பமில்லாத ஆர்யாவும் நயன்தாராவும் திருமணம் செய்துகொள்கிறாா்கள். பிறகு தினமும் கண்ணாடி முன்பு மனசுக்குள் போட்டுக்கொள்ளும் டிஸ்யூம் டிஸ்யூம்கள், நயனின் டார்லிங் டாடி சத்யராஜ், நஸ்ரியாவின் `ப்ரதர்' ஸ்டைல் காதல்... என ஒவ்வொன்றையும் புதுமையாகக் காட்சிபடுத்தியிருந்தாா், அட்லி. காதல் படங்களுக்கே உரிய வழக்கமான புரபோஷல் காட்சிகளை, சென்டிமென்ட் காட்சிகளை வைக்காமல் திரைக்கதையை டிரெண்டாக வடிவமைத்திருந்தாா்.

காதல் திரைப்படங்களில் முக்கியமாகக் கையாள வேண்டிய எமோஷனல் காட்சிகளை, அத்தனை தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியிருந்தார், அட்லி. கதையில் வரும் இரு காதல் ஜோடியின் கதைகளுக்கான காட்சிகளில் அத்தனை அழகு. அத்தனை உணர்வுகளையும் வழக்கத்துக்கு மாறாகக் கையாண்டு, அதை ரசிக்க வைத்தார் அட்லி. 

ராஜா ராணியின் செல்லச் சண்டைகள், நஸ்ரியாவின் ப்ரதர் காதல்..! #5yearsOfRajaRani

காட்சிகளில் மட்டுமல்லாது, வசனங்களிலும் புதுமையைப் புகுத்தி அப்லாஸ் அள்ளிய படம் இது. கேரக்டர்களுக்கு இருந்த முக்கியத்துவம் கலை முத்துராஜின் இயக்கத்திலும் இருந்தது. ஜான் - ரெஜினா குடியிருக்கும் D-3 வீட்டின் மார்டன் உள் கட்டமைப்பு, `ஓடே ஓடே' பாடலில் வின்டேஜ் போஸ்டர்களால் பென்னி மில்லை அலங்கரித்தது... என அனைத்தும் பிக் ஸ்கிரீனில் பிரமாண்டத்தைக் கூட்டியது. புதுமையான காட்சிகளை தனது கிளாசிக்கல் ஆங்கில்களால் அலங்காரப்படுத்தியிருந்தார், அறிமுக ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ். 

காதல் உணர்வைக் கடத்துவதிலும், அதன் வலியை உணர்த்துவதிலும் இசையின் பங்கானது மிகவும் அதிகம். ஜி.வி.பிரகாஷின் இசை அதைக் கச்சிதமாகச் செய்ததால்தான், இன்றும் பலரது பிளே லிஸ்டை ஆக்கிரமித்திருக்கிறது, 

ராஜா ராணியின் செல்லச் சண்டைகள், நஸ்ரியாவின் ப்ரதர் காதல்..! #5yearsOfRajaRani

ஹிஸ்டரி ஆஃப் ப்ரதர் லவ் :

படத்தின் இயக்குநர் அட்லி, தன் நிஜ வாழ்க்கையில் நடந்த சிலவற்றையும் கதையில் செருகி வைத்திருந்தார். அதில் ஒன்றுதான், ஆர்யா - நஸ்ரியா இடையேயான `ப்ரதர்' லவ் ஸ்டோரி. அட்லி 9- ம் வகுப்புப் படிக்கும்போது, அவருக்கு மிகவும் பிடித்த பெண் அவரை `ப்ரதர்' என அழைத்தது, 2000 கெட்ட வாா்த்தைகளை சேர்த்து வைத்துப் பேசியதுபோல இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அட்லிக்கு மட்டுமல்ல, இந்த மாதிரி தருணங்கள் பலரது காதல் வாழ்க்கையிலும் நடந்திருக்கும். 

டார்லிங் லவ் :

டீனேஜ்களின் காதலை மட்டும் சித்திரிக்காமல், சத்யராஜ் - நயன்தாரா இடையேயான அப்பா - மகளுக்குரிய காதலையும் அவர்களுக்கு இடையே நடக்கும் ஜாலி சாட்ஸ்  மூலம் அழகாகக் கையாண்டிருந்தாா், அட்லி. இந்த டார்லிங் லவ்வானது பேபி லவ்வாக `தெறி' படத்திலும் தொடர்ந்தது. 

ஆர்யா - சந்தானத்தின் காம்போ, இதிலும் வெற்றியைச் சுவைத்தது. குறிப்பாக, காமெடியில் மட்டுமல்லாமல் சீரியஸான சென்டிமென்டல் காட்சிகளிலும்  ஸ்கோர் செய்திருந்தாா், சந்தானம்.

ராஜா ராணியின் செல்லச் சண்டைகள், நஸ்ரியாவின் ப்ரதர் காதல்..! #5yearsOfRajaRani

``இந்த உலகத்துல  யாரும் மேட் ஃபாா் ஈச் அதரா பொறக்கிறதில்ல சூர்யா... வாழ்ந்து காட்டுறதுலதான் இருக்கு!" என்று நயன் ஜெய்யிடம் கூறும்  காட்சியில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை அத்தனை அழகாகக் கடத்தியிருந்தார்கள். ``நான் எங்க அம்மா மடியில படுத்ததே  இல்ல. இப்போ படுத்துக்கட்டுமா" என்று சொல்லி ஆர்யா மடியில் நஸ்ரியா கலங்கிய கண்களுடன் படுக்கும் காட்சியில் கலங்காதவர்கள் யார்?!

ஒட்டு மொத்தத்தில், ரீல் காதலை சேர்க்காமல் ரியல் காதலை சேர்த்து அனைவரும் விரும்பும் கியூட்  சாா்மிங் மூவியாக 5 வருடங்கள் கழித்தது, இன்றும் அனைவரும் காதலிக்கும் வகையில் இருக்கிறார்கள், இந்த `ராஜா ராணி'. அட்லி....வீ ஆர் வெயிட்டிங் ஃபார் `ராஜா ராணி 2'.

வாழ்த்துகள் டீம்!