Published:Updated:

வெளியானது #DarkPhoenix டிரெய்லர்... Fox's Marvel X-Men யுனிவர்ஸின் கடைசிப் படம் இதுதானா?

வெளியானது #DarkPhoenix டிரெய்லர்... Fox's Marvel X-Men யுனிவர்ஸின் கடைசிப் படம் இதுதானா?
வெளியானது #DarkPhoenix டிரெய்லர்... Fox's Marvel X-Men யுனிவர்ஸின் கடைசிப் படம் இதுதானா?

மார்வல் காமிக்ஸ், தன் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான மார்வல் ஸ்டூடியோஸைத்  தொடங்கிப் படங்கள் எடுக்கும் முன்பே, ஃபாக்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ்-மென் கதைகளைப் படமாக்கி வெற்றிகண்டது. புகழ்பெற்ற வுல்வரின் கதாபாத்திரம் நமக்கு அறிமுகமானது அப்படித்தான். எக்ஸ்-மென் ஒரிஜினல் ட்ரைலாஜிக்குப் பிறகு வெளியான நான்காம் பாகம் மொத்த டைம்லைனையும் மாற்றிவிட, எல்லா கதாபாத்திரங்களின் இளவயது கதைகள் தற்போது படமாக வெளிவருகின்றன. 2016-ம் ஆண்டு வெளியான X-Men Apocalypse எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது அதன் அடுத்த பாகமான DarkPhoenix படத்தின் முதல் டிரைலர் வெளியாகியுள்ளது. 

X-Men Apocalypse படத்தின் கதாபாத்திரங்களுடன், முன்னணி நடிகை ஜெஸ்ஸிக்கா சாஸ்டைன் தற்போது கைகோத்துள்ளார். 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' புகழ் சோபி டேர்னர் கதாநாயகியாக நடிக்க, இதுவரை எக்ஸ்-மென் படங்களுக்கு திரைக்கதை மட்டுமே எழுதிவந்த சைமன் கின்பர்க், முதன்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். படம் அடுத்த வருடம் பிப்ரவரி 14 அன்று திரைக்கு வரவிருக்கிறது. படத்தின் டிரெய்லர் இதோ...

இதற்கிடையே ஃபாக்ஸ் நிறுவனத்தை மார்வல் ஸ்டூடியோஸின் தாய் நிறுவனமான டிஸ்னி வாங்கிவிட்ட நிலையில், அவெஞ்சர்ஸ் தோன்றும் மார்வல் சினிமேட்டிக் யுனிவர்ஸுடன் எக்ஸ்-மென் யுனிவர்ஸையும் இணைக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று தகவல்கள் வெளியாகின. அது உண்மையாக இருப்பின், ஃபாக்ஸ் மார்வல் யுனிவர்ஸின் கடைசிப் படமாக இந்த Dark Phoenix இருக்கலாம். காரணம், மற்றோரு ஃபாக்ஸ் மார்வல் படமான 'The New Mutants' முழுக்க முழுக்க வேறொரு டைம்லைனில் நடக்கவிருக்கிறது.