Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

கா
ர்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்காக புதுக்கோட்டையில் நடைபெற்ற ரேக்ளா ரேஸை, நடிகர் சூர்யா தன் மகனுடன் பார்த்து ரசித்தார். இந்தப் புகைப்படங்களும், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக, ‘‘ஜல்லிக்கட்டோடு சேர்த்து ரேக்ளா ரேஸையும் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. சில விதிமுறைகளோடு ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி கிடைத்திருந்தாலும், ரேக்ளா ரேஸ் இப்போதும் தடைசெய்யப்பட்ட ஒன்று. இதை எப்படி அனுமதிக்கலாம்?’’ என விவாதம் கிளம்பியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடமும், ரேக்ளா பவுண்டேஷன் ஆஃப் தமிழ்நாடு அமைப்பிடமும் அனுமதி பெற்றே இந்த ரேக்ளா நடைபெற்றதாகப் படக்குழு விளக்கம் கொடுத்தாலும், இது மேலும் சில சிக்கல்களை உருவாக்கும் எனத் தெரிகிறது.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைரல்

சி
ம்பு, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகளை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்குகிறது. இப்படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார் சிம்பு. இதற்காக சிம்பு வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியாக, அதை #MySTARisBack என்ற ஹேஷ்டாக்கில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கியிருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.

நியூஸ்

‘எ
மன்’ படத்துக்குப் பிறகு தமிழில் புதிய படங்களில் கமிட் ஆகாத மியா ஜார்ஜ், மலையாளப் படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கிறார். ‘எண்டே மெழுதிரி அதழங்கள்’ என்ற படத்தில் மெழுகுவத்தி கம்பெனியில் வேலைபார்க்கும் பெண்ணாக நடிக்கும் மியா, அதற்காக மெழுகுவத்தி கம்பெனி ஒன்றில் பயிற்சி எடுத்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

ஹீ
ரோயினை மையப்படுத்திய திரைப்படங்கள் தமிழில் அதிகரிக்கின்றன. ‘அறம்’ படத்துக்குப் பிறகு, பல தனி ஹீரோயின் கதைகளைக் கேட்டு வருகிறார் நயன்தாரா. இவரைத் தொடர்ந்து, த்ரிஷாவின் பாதையும் ‘ஒன்லி ஹீரோயின்’ ட்ராக்கில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. ‘மோகினி’, ‘பரமபத விளையாட்டு’ படங்களுக்குப் பிறகு, தற்போது கமிட் ஆகியிருக்கும் ‘குற்றப்பயிற்சி’ என்ற படத்திலும் த்ரிஷாதான் மெயின் கேரக்டர். இயக்குநர் பாலாவின் உதவியாளர் வர்ணிக் இயக்கும் இப்படம், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. துப்பறிவாளர் கேரக்டரில் நடிக்கும் த்ரிஷா, இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளரான ரஜினி பண்டிட் தொடர்பான தகவல்களைத் தேடிப் படித்துத் தயாராகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

கேள்வி

‘நீ
ங்க ஒழுங்கா படம் எடுத்தா, நாங்க ஏன் திருட்டுத்தனமா பார்க்கப்போறோம்...’ என்பது பைரஸி குறித்த விவாதத்துக்கு ரசிகர்கள் சிலர் சொல்லும் பதில். அவங்களுக்கு என்ன கேள்வின்னா, ‘‘தியேட்டர்ல படம் பார்க்கமாட்டேன்னு அடம்பிடிக்கிறவங்க, சில மாதங்கள் கழித்து டி.வி-யில போடும்போது பார்க்கலாம். அதைவிட்டுட்டு, ‘முதல்நாளே பார்க்கணும்; அதைத் திருட்டுத்தனமாவும் பார்க்கணும்’னு அடம்பிடிக்கிறது என்ன லாஜிக்?”

• இயக்குநர் ஏ.வெங்கடேஷ் - சரத்குமார் கூட்டணி எப்போதும் ஸ்பெஷல். தற்போது இந்தக் கூட்டணி ‘பாம்பன்’ என்ற படத்தில் மீண்டும் இணைகிறது. ‘‘தமிழில் பாம்பை அடிப்படையாக வைத்து, ‘நீயா’வுக்குப் பிறகு சுவாரஸ்யமான படங்கள் எதுவும் இல்லை. அந்தக் குறையை இந்தப் படம் நிவர்த்திசெய்யும்’’ என்கிறார் ஏ.வெங்கடேஷ். இதில் சரத்குமாருக்கு ஜோடி கிடையாதாம். பாவம்!

• சசிகுமார் - நந்திதா நடிக்கும் ‘அசுரவதம்’ படத்தின் படப்பிடிப்பு, தொடங்கிய வேகத்தில் முடிவடைந்தி ருக்கிறது. இதேவேகம், சமுத்திரக் கனி இயக்கத்தில் நடிக்கும் ‘நாடோடி கள்-2’ ஷூட்டிங்கிலும் தொடர்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism