Published:Updated:

பிக் பாஸ் தமிழ் வின்னர் இருக்கட்டும், மலையாளம் வின்னர் யார் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் வின்னர் இருக்கட்டும், மலையாளம் வின்னர் யார் தெரியுமா?
பிக் பாஸ் தமிழ் வின்னர் இருக்கட்டும், மலையாளம் வின்னர் யார் தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் வின்னர் இருக்கட்டும், மலையாளம் வின்னர் யார் தெரியுமா?

தமிழைப் போல் பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள `பிக்பாஸ்' நிகழ்ச்சியிலும் இன்றுதான் ஃபைனல் நடக்கிறது. 

இந்தி, தமிழ், தெலுங்கைப் போல் மலையாளத்திலும் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. பிரபல நடிகரும், மலையாள சூப்பர் ஸ்டாருமான மோகன்லால் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். கேரளாவின் முன்னணி நடிகையாகவும், தமிழில் 'அரவான்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்வேதா மேனன், நடிகைகள் நேகா சக்சேனா, ஹிமா ஷங்கர், பீலி மானே, அர்ச்சனா கவி, இவர்களுடன்  2000-ம் ஆண்டில் 'மிஸ் கேரளா' பட்டம் பெற்ற ரஞ்சினி ஹரிதாஸ், 'கிஸ் ஆப் லவ்' போராட்டத்தின் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கிய தியா சனா, 'ஆக்ஷன் ஹீரோ பைஜூ' புகழ் அரிஸ்டோ சுரேஷ், காமெடி நடிகர் அனூப் சந்திரன், 'பதியே' ஆல்பம் புகழ் பசீர், சீரியல் நடிகர்கள் தீபன் முரளி, ஸ்ரீ லட்சுமி ஆகிய 16 பேருடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது. நீச்சல் குளம், ஜிம் வசதி என தமிழைவிட அதிகப்படியான வசதிகளுடன் அங்கு பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டது.

காமெடி, அடிதடி, புறணி எனத் தமிழ் பிக்பாஸில் இருக்கும் எல்லாக் காட்சிகளும் மலையாள வெர்சனிலும் இருந்தன. தமிழைவிட அதிகமாகவே சண்டைகள் காரசாரமாக இருந்தன. அதேபோல் தமிழில் ஓவியா - ஆரவ் காதலைப் போல மலையாள பிக் பாஸிலும் இருவர் காதல் வயப்பட்டனர். பீலி மானே - ஸ்ரீனிவாஸ் அரவிந்த் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். தமிழ் பிக் பாஸ் கமல் கூட அங்கு விசிட் அடித்திருந்தார்.

மிகுந்த பரபரப்புகளுடன் கேரளாவில் பேசப்பட்டுவந்த மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இன்றுதான் ஃபைனல் நடக்கிறது. ஃபைனலுக்கு பீலி மானே, அரிஸ்டோ சுரேஷ், சாபுமோன், ஸ்ரீனிவாஸ் அரவிந்த், ஷியாஸ் கரீம் உள்ளிட்டோர் ஃபைனலுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் முதலில் அரிஸ்டோ சுரேஷ் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து ஸ்ரீனிவாஸ் அரவிந்த் மற்றும் ஷியாஸ் கரீம் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து டைட்டில் வின்னர் யார் என்பதை மோகன்லால் அறிவித்தார். சாபுமோன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கான கோப்பை மற்றும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. 

அடுத்த கட்டுரைக்கு