Published:Updated:

டைட்டில் வின்னர் கெளஷல் மண்டா; பாஸ் இது தெலுங்கு பிக் பாஸ்..! #BiggBossTelugu2

டைட்டில் வின்னர் கெளஷல் மண்டா; பாஸ் இது தெலுங்கு பிக் பாஸ்..! #BiggBossTelugu2
டைட்டில் வின்னர் கெளஷல் மண்டா; பாஸ் இது தெலுங்கு பிக் பாஸ்..! #BiggBossTelugu2

ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடிகர் நானி தொகுத்து வழங்க, ஜூன் 10-ம் தேதி ஆரம்பம் ஆனது தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2. வழக்கம் போல நடந்த நாமினேஷன்கள், எவிக்‌ஷன்கள் என பலவற்றை கடந்து தீப்தி நல்லாமோது, கீதா மாதுரி, தனிஷ் அலாதி, சம்ராட் ரெட்டி, கெளஷல் மண்டா ஆகிய ஐந்து பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

அவர்களுள் அதிக ஓட்டுகளைபெற்று கெளஷல் மண்டா வெற்றி பெற்றுள்ளார். சீரியல்கள், டிவி ஷோக்கள் என கலக்கிய இவர் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் வெங்கடேஷ் அவருக்கு டைட்டில் வின்னர் விருது வழங்கி கௌரவித்தார். தவிர, இறுதிச்சுற்றுக்கு வரை முன்னேறிய அனைவருக்கும் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையை வழங்கினார் நடிகர் நானி. 

வாழ்த்துகள் கெளஷல்!