Published:Updated:

``மணி சார் அமைதியோ அமைதி... சுஹாசினி அவருக்கு ஆப்போஸிட்!" ஜெயசுதா ஷேரிங்

``மணி சார் அமைதியோ அமைதி... சுஹாசினி அவருக்கு ஆப்போஸிட்!" ஜெயசுதா ஷேரிங்

``ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்தேன். அப்போ, ஹாசினி தன் வீட்டிலிருந்து எனக்கு மதிய உணவை சில நாள்கள் அனுப்பியிருந்தார்."

``மணி சார் அமைதியோ அமைதி... சுஹாசினி அவருக்கு ஆப்போஸிட்!" ஜெயசுதா ஷேரிங்

``ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்தேன். அப்போ, ஹாசினி தன் வீட்டிலிருந்து எனக்கு மதிய உணவை சில நாள்கள் அனுப்பியிருந்தார்."

Published:Updated:
``மணி சார் அமைதியோ அமைதி... சுஹாசினி அவருக்கு ஆப்போஸிட்!" ஜெயசுதா ஷேரிங்

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, 'செக்கச் சிவந்த வானம்'. மல்ட்டி ஸ்டார்ஸ் பேக்கேஜாக வெளியாகியிருக்கும் இதில், 'அலைபாயுதே' படத்துக்குப் பிறகு, இயக்குநர் மணிரத்னம் உடன் பயணமாகியிருக்கிறார் நடிகை ஜெயசுதா. இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி இருவருடனான நட்பு பற்றிப் பகிர்கிறார்.

"தெலுங்கில் பிஸியா இருந்ததால், 1990-களுக்குப் பிறகு தமிழில் செலக்டிவாகவே நடிக்கிறேன். 'அலைபாயுதே' படத்தில் ஷாலினிக்கு அம்மாவா நடிச்சேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடிச்சிருக்கேன். அவர், என் தோழி ஹாசினியின் (சுஹாசினி) கணவர். இயக்குநரா அவர் மேலே எனக்கு நிறைய மதிப்பு உண்டு. அவர் எப்போதும் வேலை விஷயத்துலதான் கவனம் செலுத்துவார். அதிகமா பேசமாட்டார். 'அலைபாயுதே' படத்தில் வொர்க் பண்ணினதுடன் ஒப்பிடும்போது, இப்போ இன்னும் குறைவாகப் பேசறார். அவர் கதை சொல்ற விதம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அந்தந்த கேரக்டர்கள் கண் முன்னாடி பேசுற மாதிரி இருக்கும். ஒரு கேரக்டர் படத்தில் எவ்வளவு நேரம் வருது என்பதைவிட, மக்கள் மனசுல எந்த அளவுக்கு இடம்பிடிக்குது என்பதுதான் முக்கியம். மணி சார் படத்தில் நிறைய நடிகர்கள் இருப்பாங்க. ஆனா, எல்லோருமே தனித்து தெரியற மாதிரி வடிவமைப்பார். அது எப்படிச் சாத்தியமாகுதுன்னு பலமுறை யோசிச்சிருக்கேன். அவர்கிட்ட கேட்டால், 'அதெல்லாம் இயல்பா வருதுங்க'னு சிரிச்சுட்டு நகர்ந்துடுவார். ஒவ்வொரு காட்சியிலும் நடிச்சு முடிச்சதும், 'உங்களுக்குத் திருப்தியா? இன்னொரு டேக் போகணுமா?'னு கேட்பேன். உடனே சிரிச்சுக்கிட்டே 'டேக் ஓகே'னு சொல்வார். அவர் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரானு யூனிட்ல பலரும் எதிர்பார்ப்பாங்க. அந்த அளவுக்கு அமைதியான பர்சன். சிலர் அமைதியா இருந்தாலும், அவங்க வொர்க் பெரிசா பேசப்படும். அதுக்கு மணிரத்னம் சார் சிறந்த உதாரணம்" என்கிறார் ஜெயசுதா.

சுஹாசினி உடனான நட்பு பற்றிக் கூறுகையில் குரலில் பரவசம் கூடுகிறது. "சுஹாசினியும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். நான் 1970-களிலும் சுஹாசினி 1980-களிலும் சினிமாவுக்கு வந்தோம். இருவருமே கே.பாலசந்தர் சார்கிட்டதான் சினிமா பாடம் படிச்சோம். தெலுங்கு சினிமாவில் அதிகம் இணைந்து வொர்க் பண்ணியிருக்கோம். எங்களுக்குள் நெருக்கமான நட்பு உண்டாச்சு. நிறைய விஷயங்களைப் பேசிப்போம். ஆனால், அது குடும்பம் மற்றும் பர்சனல் விஷயங்களா இருக்காது. சினிமா மற்ற கலைகள், மற்ற சினிமா ஃப்ரெண்ட்ஸ் பற்றிதான் நிறைய பேசுவோம். நடிப்பு தவிர, சுஹாசினிக்கு சினிமாவின் பல டெனிக்கல் விஷயங்களைத் தெரிஞ்சுக்கிறதில் ஆர்வம் அதிகம். அதுக்காக நிறைய மெனக்கெடுவாங்க. இந்த விஷயங்களையும் நாங்க மீட் பண்ணும்போது சொல்வாங்க. மணிரத்னம் சார் பட ஷூட்டிங்னா, திட்டமிட்ட நேரத்தில் சரியா வேலைகள் நடக்கும். சக நடிகர்களே பேசிக்கிறது குறைவாகத்தான் இருக்கும். ஹாசினி, ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு வருவது அபூர்வம்தான். 'செக்கச் சிவந்த வானம்' ஷூட்டிங் டைமிலும் ரெண்டே முறைதான் வந்தாங்க. 'உங்களுக்கு எல்லாத் தேவைகளும் சரியா இருக்கா? ஏதாச்சும் செய்யணும்னா சொல்லுங்க'னு கேட்டாங்க. படத்தின் கேரக்டர் பற்றியெல்லாம் கேட்கவே இல்லை. வொர்க் வேற, நட்பு வேற என இருப்போம்.

இந்தப் படத்தில் நடிக்க ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்தேன். அப்போ, ஹாசினி தன் வீட்டிலிருந்து எனக்கு மதிய உணவை சில நாள்கள் அனுப்பியிருந்தார். தொழில்ரீதியான விஷயங்களைத் தாண்டி, இந்த மாதிரியான அன்புதான் நம்மை உற்சாகப்படுத்தும். அது, ஹாசினிகிட்டயிருந்து நிறைய கிடைச்சது. மணிரத்னம் சார் அமைதியோ அமைதி டைப். ஆனா, ஹாசினி செமையா பேசுவாங்க; கணவருக்கு அப்படியே ஆப்போஸிட். 'செக்கச் சிவந்த வானம்' படத்துக்குப் பிறகு, தமிழில் தொடர்ந்து நடிக்க பலரும் கேட்கறாங்க. அதற்கான சூழல் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்" எனப் புன்னகைக்கிறார் ஜெயசுதா.