Published:Updated:

"ஒரு பொண்ணா அரசியலில் என்னால சர்வைவ் பண்ண முடியல... அதான் விலகிட்டேன்!" நடிகை பானு

"ஒரு பொண்ணா அரசியலில் என்னால சர்வைவ் பண்ண முடியல... அதான் விலகிட்டேன்!" நடிகை பானு
"ஒரு பொண்ணா அரசியலில் என்னால சர்வைவ் பண்ண முடியல... அதான் விலகிட்டேன்!" நடிகை பானு

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவங்க இவ்வளவு நாள் தண்டனையை அனுபவிச்சுட்டாங்க. இனியும் அவங்களைத் தண்டிக்க வேணாமே!"

டிகை, பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் எனப் பல துறைகளில் வலம்வருபவர், பானுமதி பாலசுப்பிரமணியன். முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்திருப்பவர். விளம்பரப் படங்களிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். இவர் நேர்காணல் செய்யும்போது பலரும் இவரது திறமையைப் பார்த்து வியந்து பாராட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை பேட்டி எடுப்பதற்காக முயன்றோம். 30 வருடங்களுக்கும் மேலாக மீடியாவில் பயணிக்கும் அவருடன் சற்று நேரம்...

''நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். மூன்றாவது படிக்கும்போதே மேடைப் பேச்சாளர். பல மேடைகளில் என் குரல்கள் ஒலிச்சிருக்கு. எனக்கு தோணுற விஷயத்தை தப்புன்னாலும் தைரியமா எடுத்துச் சொல்லுவேன். என் அப்பா, அம்மா என் திறமைக்கு மதிப்பளிச்சாங்க. அதே மாதிரி என் கணவரும் எனக்கு 'உன்னால முடியும்' என்கிற உந்துதல் கொடுத்தார். குடும்பத்திற்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை நான் கொஞ்சம் கூட விட்டுக் கொடுத்ததில்ல. எனக்கு என் குடும்பம் தான் முதல்லங்குறது நான் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தேன். நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கேன். ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷனில் காம்பியரிங் பண்ணியிருக்கேன். ஆல் இந்தியா லெவலில் பெஸ்ட் ஸ்பீக்கர் அவார்டு வாங்கியிருக்கேன்'' என மென்புன்னகையுடன் தொடர்கிறார்.

''எனக்குச் சின்ன வயசிலிருந்தே நடிக்கிறது பிடிக்கும். தூர்தர்ஷனில் நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது மூலமா சின்னத்திரை வாய்ப்புகள் வந்துச்சு. தொடர்ந்து, சினிமா வாய்ப்புகளும் கிடைச்சது. 90 சீரியல்கள் நடிச்சுட்டேன். சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடிச்சிருக்கேன். இப்போ விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன். 'முனி 4', 'காற்றின் மொழி' போன்ற படங்களில் நடிச்சுட்டிருக்கேன். 22 வருஷமாக காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். ஒருகட்டத்துக்கு மேலே அரசியலுக்குள் நடக்கும் பாலிடிக்ஸில் ஒரு பெண்ணாக சர்வே பண்ண முடியாதுன்னு தோணுச்சு. அதனால், அந்தக் கட்சியிலிருந்து விலகிட்டேன். சோனியா காந்தி பிறந்தநாளின்போது அவங்களுக்கு வாழ்த்து சொல்லிட்டு கட்சியிலிருந்து வெளியேறினேன்'' என்றவர் சற்றே அமைதியாகிறார்.

''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 'நீ நல்லா உழைக்கிறே சுறுசுறுப்பா இருக்கே'னு பாராட்டியிருகார். அவர் ரொம்பவே நல்லவர். மனிதர்களை நேசிக்கத் தெரிஞ்ச அவரை மாதிரியான அரசியல்வாதியை நான் பார்த்தில்லை. அவர் இறந்ததுக்கு அப்புறம் அரசியலில் இருக்கவே எனக்கு மனசில்லை. என் சின்னச் சின்ன முயற்சிகளையும் மனம்விட்டு பாராட்டியவர். எனக்கு தோணுற விஷயங்களைத் தைரியமா அவர்கிட்ட பேசியிருக்கேன். அவரும் பொறுமையா பதில் சொல்வார். அவர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவங்க இவ்வளவு நாள் தண்டனையை அனுபவிச்சுட்டாங்க. இனியும் அவங்களைத் தண்டிக்க வேணாமே. உயிரை இழந்தவங்க வலி அதிகம்தான். அதுக்காக, தன் மகள் திருமணத்தை நடத்திவைக்கணும்னு நளினி நினைக்கிறதில் என்ன தப்பு? நளினியின் பொண்ணு என்ன தப்பு பண்ணுச்சு?'' என்ற பானுவிடம் அவருடைய குடும்பம் பற்றிக் கேட்டதும் புன்னகைக்கிறார்.

''எனக்கு ஒரு பொண்ணு. ஒரு பையன். பொண்ணு டான்ஸ் டீச்சர். அவளுடைய நிகழ்ச்சிகள் எல்லாத்தையும் நான்தான் தொகுத்து வழங்குவேன். பையன் வெளிநாட்டில் இருக்கிறான். என் குடும்பம்தான் ஃபுல் சப்போர்ட்டா எல்லா சூழ்நிலையிலும் என்னுடன் இருக்கிறவங்க. இப்போ சில புராஜெக்ட்களில் நடிச்சுட்டிருக்கேன். கிட்டதட்ட எல்லா நடிகர்களுடனும் நடிச்சுட்ட எனக்கு, அமிதாப் பச்சன் சாருடன் நடிக்கணும்னு ஆசை'' என்கிறார் பானு.

அடுத்த கட்டுரைக்கு