Published:Updated:

வெப் சீரிஸில் கமிட்டான நடிகர் சித்தார்த்!

தமிழில் `அவள்' படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் `கம்மார சம்பவம்' படத்தில் திலீப்புடன் நடித்திருந்தார் நடிகர் சித்தார்த். இப்போது சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாருடன் ஒரு படம், அறிமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் ஒரு படம் என நடித்துக்கொண்டிருக்கிறார். 'சைத்தான் கா பச்சா' படமும் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

இந்த நிலையில், நெட் ஃபிளிக்ஸ் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், நடிகர் சித்தார்த். இத்தொடரில் `காலா' நடிகை ஹூமா குரேஷி முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். இதை தீபா மேத்தா என்பவர் இயக்க இருக்கிறார். ஏற்கெனவே, இவர் இயக்கத்தில்  'மைட் நைட் சில்ரன்' எனும் படத்தில் சித்தார்த், ஸ்ரேயா ஆகியோர்  நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் வெளியாகும் தொடர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைப்பதால், திரை நடிகர்கள் பலரின் கவனம் வெப் சீரிஸ் பக்கமும் திரும்பியுள்ளது.