Published:Updated:

சிம்புவுடன் படம் பார்த்து ரசித்த 'பிக் பாஸ்' ஃபேமிலி!

நடிகர் சிம்புவுடன் இணைந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் திரைப்படம் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

கமல் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' சீசன் 2, 106 எபிசோடுடன் நிறைவடைந்திருக்கிறது. இதில், 'பிக் பாஸ்' டைட்டில் வின்னராக நடிகை ரித்விகா அறிவிக்கப்பட்டார். தனக்குக் கிடைத்த முழுமையான முதல் வெற்றி இதுதான், என்று ரித்விகா ஆனந்தக் கண்ணீருடன் தெரிவித்தார். இவரது வெற்றி நிகழ்ச்சியைப் பார்த்த பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் நிலையில்,  'பிக் பாஸ்' வீட்டுக்குள் இருந்த 11 போட்டியாளர்களில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி அய்யர் மற்றும் மஹத் ஆகியோர் நடிகர் சிம்புவுடன் சேர்ந்து 'செக்கச் சிவந்த வானம்' படத்தைத் திரையில் பார்த்து ரசித்துள்ளனர். 

இவர்களுடன் 'பிக் பாஸ்' சீசன் ஒன் போட்டியாளர் ஹரீஸ் கல்யாணும் இணைந்துள்ளார். இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. தொலைத்தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத வீட்டுக்குள் எலியும், பூனையுமாக அடித்துக் கொண்டிருந்த இவர்கள், வெளியே வந்தவுடனே நண்பர்களாக வெளி இடத்துக்குச் செல்வது ஆரோக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதைப் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism