Published:Updated:

``ஐஸ்வர்யா ஒரு குழந்தை மாதிரி... அவ பெரிய தப்பு எதுவும் பண்ணலை..!’’ - யாஷிகா #VikatanExclusive

`இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்துல நடிச்சதுனால யாஷிகா மேல ஒரு தவறான பிம்பம் உருவாகியிருச்சு. இப்போ அந்தப் பிம்பம் உடைஞ்சு, மக்கள் மத்தியில, `யாஷிகா சுயமா "சிந்திக்கிற ஒரு நல்ல பொண்ணு'ங்கிற பிம்பம் உருவாகியிருக்கு. மக்கள் எல்லாரும் நான்தான் வெற்றி பெறுவேன்னு நெனச்சிருக்காங்க. நிறைய பேர் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்காங்க. இதுதான் என்னோட வெற்றி!"

``ஐஸ்வர்யா ஒரு குழந்தை மாதிரி... அவ பெரிய தப்பு எதுவும் பண்ணலை..!’’ - யாஷிகா #VikatanExclusive
``ஐஸ்வர்யா ஒரு குழந்தை மாதிரி... அவ பெரிய தப்பு எதுவும் பண்ணலை..!’’ - யாஷிகா #VikatanExclusive

``மொபைல் இல்லாம ஒரு நிமிஷம்கூட இருந்தது கிடையாது; வீட்டு வேலைகள் செய்தது கிடையாது; அழுதது கிடையாது; எதுக்காகவும் வருத்தப்பட்டது கிடையாது. ஆனா, இதையெல்லாம் செய்ய வெச்ச பிக் பாஸ்க்கு நன்றி. வாழ்க்கையோட மொத்த அனுபவத்தையும் வெறும் 99 நாள்கள்ல எனக்குக் கொடுத்துட்டீங்க!" என்று அழுத்தமாகப் பேசத் தொடங்குகிறார் யாஷிகா.  

`பிக் பாஸ்ல இருந்து வெளிய வந்தவுடனே மிஸ் பண்ற முதல் விஷயம் எது?"

``பிக் பாஸ் குரல்தான். நான் இதுவரை எதுக்குமே பயந்ததில்லை. பேய், இருட்டு, அமானுஷ்யம் ஆகிய விஷயங்களுக்குக்கூட பயந்ததில்லை. ஆனா, பிக் பாஸ் வீட்டுக்குள்ள இந்தக் குரலை கேட்டா மட்டும் அவ்வளவு பயமா இருக்கும். நிம்மதியா தூங்கக்கூட முடியாது. ஆனா, அந்த வீட்டை விட்டு வெளிய வந்தவுடனேயே இத்தனை நாளா கேட்டுகிட்டு இருந்த அந்தக் குரலை மிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்."

``டாஸ்க்ல அசாதாரணமான செயல்படுறதுக்கான காரணம் என்ன?" 

``போட்டினு வந்துட்டா இவ்வளவு இறங்கி விளையாடுவேன்னு பிக் பாஸ்குள்ள போகுற வரைக்கும் தெரியாது. சின்ன வயசுல இருந்தே நீச்சல், கராத்தே ரெண்டையும் கத்துக்கிட்டேன். `எந்தவொரு கஷ்டமான சூழ்நிலையிலயும் மனசைத் தளரவிடக் கூடாது'னு உறுதியா இருப்பேன். இந்த ஒரு மைண்ட்-செட்தான் என்னை இந்த லெவலுக்குக் கொண்டு வந்துருக்குனு நினைக்குறேன். மேலும், மத்த பொண்ணுங்களைவிட எனக்கு அதிக  பலம் இருந்துச்சு. அதை திறம்பட பயன்படுத்திக்கணும்னு நெனச்சேன். அதாவது, நாம ஆபத்தான ஒரு இடத்துல இருந்தோம்னா, அங்க நம்மளை தக்க வெச்சுக்க பல வழிகளைத் தேடுவோம். அந்த மாதிரிதான் பிக் பாஸ் வீடும், டாஸ்க் செஞ்சாதான் அங்க பிழைக்க முடியும்!"

``குடும்பத்துல உள்ளவங்க பிக் பாஸ் பத்தி என்ன சொன்னாங்க?"

``நான் என்ன செய்தாலும், `அது சரியாதான் இருக்கும்'னு என்னோட அப்பாவும், அம்மாவும் நம்பிக்கையா சொல்லுவாங்க. சின்ன வயசுல இருந்து எனக்கான சுதந்திரத்தை அவங்க ஒருபோதும் தடுத்ததில்லை. ஒரு பொண்ணுக்கு தைரியம்ங்கிறது ரொம்ப அவசியம். நான் தன்னிச்சு செயல்படுறதுனாலதான் என்னால எந்தவொரு முடிவையும் தெளிவா எடுக்க முடியுது. `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்துல நடிச்சதுனால யாஷிகா மேல ஒரு தவறான பிம்பம் உருவாகியிருச்சு. இப்போ அந்தப் பிம்பம் உடைஞ்சு, மக்கள் மத்தியில, `யாஷிகா சுயமா சிந்திக்கிற ஒரு நல்ல பொண்ணு'ங்கிற பிம்பம் உருவாகியிருக்கு. மக்கள் எல்லாரும் நான்தான் வெற்றி பெறுவேன்னு நெனச்சிருக்காங்க. நிறைய பேர் எனக்கு சப்போர்ட் பண்ணியிருக்காங்க. இதுதான் என்னோட வெற்றி!"

``சமயத்துல `ஐஸ்வர்யா பண்ண தவறுகளை யாஷிகா கண்டுக்கவே இல்லை'னு சுட்டிக்காட்டுனாங்க. உங்க நண்பர்களுக்கு இப்படியான சில சலுகைகள் கொடுப்பீங்களா?" 

``ஐஸ்வர்யா பெரிய தப்பு எதுவும் பண்ணலை. அவளோட இடத்துல யார் இருந்தாலும் அப்படிதான் பண்ணியிருப்பாங்க. நம்மளோட ஃப்ரெண்ட் யாராவது தப்பு பண்ணா அவங்களை திட்ட மாட்டோம். மன்னிச்சு விட்டுருவோம். அந்த மாதிரித்தான் எனக்கு ஐஸ்வர்யா. பிக் பாஸ் வீட்ல அவளுக்குச் சரியான வழிகாட்டுதல் இல்லை. முழுக்க முழுக்க என்னையே நம்பி இருந்தாள். அவளுக்கு சப்போர்ட் பண்ணி, அவகூட இருக்குறது மட்டும்தான் நான் ஐஸ்வர்யாவுக்குச் செய்ற சின்ன உதவி. அதே சமயத்துல, அவ பண்ற தவறுகளையும் சில சமயம் எடுத்துச் சொல்லியிருக்கேன். மொத்தத்துல ஐஸ்வர்யா ஒரு குழந்தை மாதிரி!"

``டாப்-5 மனதுக்கு நெருக்கமான போட்டியாளர்கள் யார்யார்?"

ஐஸ்வர்யா:

``ஐஸ்வர்யாவுக்கு நடிக்கத் தெரியாது, என்ன நடந்தாலும் அவளோட சுயத்தை மறைத்து நடிச்சதில்லை." 

மும்தாஜ்

``மும்தாஜ்னா அன்பு! எங்க எல்லாரையும் அவங்களை மாதிரி அக்கறையா பார்த்துக்கவே முடியாது." 

சென்றாயன்: 

``சென்றாயன் அண்ணா கிராமத்துல இருந்து சிட்டிக்கு வந்து சினிமாவுல ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்க வாழ்க்கையில இனி எல்லாம் நல்லதா நடக்கணும்னு வேண்டிக்கிறேன்." 

மஹத்:

``மஹத்க்கு அதிகமா கோபம் வரும். ஆனா, அன்பானவங்களை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்தது கிடையாது." 

ஷாரிக்: 

``ஷாரிக் எலிமினேட்டானதுக்குக் காரணம் ஒரு தப்பான நாமினேஷன்தான். பிக் பாஸ் டைட்டில் வின் பண்றதுக்கான அத்தனை தகுதியும் அவனுக்கு இருக்கு. அமைதியாகவும், அன்பாகவும் இருக்கக்கூடிய ஒரு பையன் ஷாரிக்!"

``ரித்விகா டைட்டில் வின் பண்ணது குறித்து என்ன நினைக்குறீங்க?"

``வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரித்விகாவை ரொம்பப் பிடிக்கும். எந்த இடத்துல எப்படி நடந்துக்கணும்னு அவங்களுக்கு நல்லா தெரியும். எல்லாருக்கும் பாகுபாடு பார்க்காம சமஅளவு மரியாதை கொடுக்கக்கூடிய ஒருத்தர். நானும் ரித்விகாவும் சேர்ந்து `ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது'ங்கிற படத்துல நடிச்சிருக்கோம். ஸோ, பிக் பாஸுக்கு போறதுக்கு முன்னாடியிருந்தே அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்ட். ரித்விகா ரொம்ப ஓப்பன் டைப் கிடையாது. சில சமயங்கள்ல உணர்ச்சிகளை வெளிப்படுத்தவே மாட்டாங்க. அது சில பேருக்குத் தவறாத் தெரியலாம். ஆனா, உண்மையிலேயே அவங்க பொறுப்பான ஒரு பொண்ணு" என்று முடித்தார் யாஷிகா.