சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

• ‘ஸ்ரேயாவுக்குக் கல்யாணம்’ என்ற தகவல் சில வாரங்களுக்கு முன் பரவியது. அதை ஸ்ரேயாவின் தாயாரே மறுத்தார். இந்த நிலையில், மீண்டும் ‘ஸ்ரேயாவுக்குக் கல்யாணம்’ என்ற தகவலை ட்ரெண்ட் ஆக்கியிருக்கிறார்கள். ஆனால், இம்முறை வந்த தகவல் உண்மை. ரஷ்யத் தொழிலதிபரும், விளையாட்டு வீரருமான ஆண்ட்ரே கோஷ்சீவைக் கரம் பிடிக்க இருக்கிறார். இந்தக் காதல் திருமணம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளது.

மிஸ்டர் மியாவ்

• ‘காதல் கண்கட்டுதே’, ‘ஏமாலி’ படங்களுக்குப் பிறகு, ‘என் பெயர் ஆனந்தன்’ என்ற த்ரில்லர் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்,  அதுல்யா ரவி.

வைரல்

டிகை ஸ்ரீதேவியின் மரணத்துக்கு வட இந்திய ‘நியூஸ்’ மீடியாக்கள் லைவ் செய்த அட்ராசிட்டிகளைக் கண்டித்திருக்கிறார்கள், சினிமா பிரபலங்கள். ‘ஊகங்கள், கற்பனை களுக்கெல்லாம் இடம் கொடுத்து ஸ்ரீதேவியின் மரணத்தை விதவிதமாக ஆராயாமல், அவரது ஆன்மாவை சாந்தியடைய விடுங்கள்’ என்று குரல் கொடுத்தவர்கள், #LetHerRestInPeace என்ற ஹேஷ்டாக்கில் கருத்துகளைப் பதிந்தனர். டாப்ஸி, காஜல் அகர்வால், மது ஷாலினி, நிவேதா தாமஸ், சித்தார்த், ராணா... எனப் பல சினிமா பிரபலங்கள் இதில் ஸ்ரீதேவியின் ப்ளாக் அண்டு ஒயிட் புகைப்படத்தை ஷேர் செய்திருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

டிவேலு நடிக்க, சிம்புதேவன் இயக்கும் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்துக்காக பிரமாண்ட செட் போட்டுப் படப்பிடிப்பு நடந்தது. வடிவேலுவின் சில தலையீடுகளால், படப்பிடிப்புப் பாதியில் நின்றது. ‘இப்படத்தில் நடிக்கமாட்டேன்’ என்றார் வடிவேலு. செட்டுக்குச் செய்த செலவு மற்றும் வடிவேலுவுக்குக் கொடுத்த அட்வான்ஸ் என படத்துக்காக கிட்டத்தட்ட ஒன்பது கோடி ரூபாய் அளவுக்குச் செலவு செய்த இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தினர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலுமீது புகார் கொடுத்திருந்தனர். வடிவேலு நடிக்கவேண்டும் அல்லது படத்துக்குச் செலவு செய்த தொகையைக் கொடுக்கவேண்டும் என்ற நிலை வரவே, ‘‘படத்தில் நடித்துக்கொடுக்கிறேன்’’ என இப்போது சம்மதித்திருக்கிறார் வடிவேலு.

மிஸ்டர் மியாவ்

• தான் இயக்கி நடித்து வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார், பார்த்திபன். முக்கியமான கேரக்டர் ஒன்றில் சமுத்திரக்கனி நடிக்கிறார். மம்தா மோகன்தாஸ், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், கிஷோர் மற்றும் பலர் நடிக்கவிருக்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• சிம்பு நடித்து வெளியான ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ தோல்வியைத் தழுவியது. இந்தக் கதையில் சில மாற்றங்களைச் செய்து, தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். ரவி தேஜா நடிக்கும் இப்படத்தில் ஹீரோயின், காஜல் அகர்வால்.