Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

ரா
தாமோகன் - ஜோதிகா கூட்டணியில் உருவாகவிருக்கும் ‘துமாரி சுலு’ தமிழ் ரீமேக் படத்துக்கு ‘உங்கள் ஜோ’, ‘உங்கள் விஜி’, ‘எஸ்.மது’, ‘நேயர் விருப்பம்’ ஆகிய தலைப்புகளைப் பரிசீலனையில் வைத்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் மற்றொரு முக்கியக் கேரக்டருக்காக தெலுங்கு நடிகை லக்ஷ்மி மஞ்சுவும் இணைந்திருக்கிறார்.

• விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘கரு’. இந்தப் படத்தில் சாய்பல்லவிக்கு ஜோடியாக நடித்த நாகசவுரிய என்பவர், ‘‘சாய் பல்லவி படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவார்; அவருக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து சாய் பல்லவியிடம் கேட்டால், ‘‘நாகசவுரியாவுக்கு என்மீது ஏன் கோபம் என்று தெரியவில்லை; இந்தக் குற்றச்சாட்டுகளைப் படப்பிடிப்பிலேயே கூறியிருந்தால், பதில் சொல்லியிருப்பேன்!’’ என்று தெரிவித்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

வைரல்

ன் மகள் ஷாஷா, பேட்மின்டன் விளையாடுவதைக் கூட்டத்தில் ஒருவராக பின்வரிசையில் சாதாரணமாக அமர்ந்தபடி நடிகர் விஜய் ரசிக்கும் புகைப்படமும், விஜய்யின் மகன் சஞ்சய், பள்ளியில் தன் சாதனைக்காக விருதாக மரக்கன்று பெறும் புகைப்படமும் வைரலில் இடம்பெற்றிருக்கின்றன.

மிஸ்டர் மியாவ்

• ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கிறார், கார்த்தி. புதுமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தில், கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஆக்‌ஷன் ப்ளஸ் ரொமான்ஸ் கதையாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகளை உக்ரைன், நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் படம்பிடிக்கிறார்கள்.

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து, ‘செக்க சிவந்த வானம்’ படத்திலும் நடிக்கிறார் அதிதி ராவ் ஹைதாரி. ‘‘வாய்ப்பு கிடைத்தால் இனி அவர் இயக்கும் எல்லாப் படங்களிலும் நடிப்பதற்குக் காத்திருக்கிறேன்’’ எனப் பரவசமாகிறார் அதிதி.

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

‘ம
தயானைக் கூட்டம்’ கதிருக்குத் திருமணம் முடிந்திருக்கிறது. அதற்குமுன் ஒரு மாதகாலம் வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ‘பேச்சுலர் ட்ரிப்’ அடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார். எந்த அறிமுகமும் இல்லாத புதிய நபர்களுடன் பழகும் அனுபவத்துக்காகக் கிளம்பிய கதிருக்கு, இது புது உணர்வைத் தந்ததாம். ட்ரிப்பில் தான் சந்தித்த மனிதர்களிடம் கல்யாணச் செய்தியைச் சொல்லி, ‘நம்மூர் திருமண நடைமுறை’யை விவரித்தாராம், கதிர்.

கேள்வி

‘அ
ரசியலில் தொண்டர்களோடு தொண்டர்களாக இருப்பேன்!’ என்று சொல்லிவந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், சமீபகாலமாக தி.மு.க மேடைகளில் பிரதானமாக இருக்கிறார், கட்சிக் கொடியை ஏற்றுகிறார். கேட்கவந்த கேள்வி புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!

மிஸ்டர் மியாவ்

நியூஸ்

ஸ்ரீ
தேவியின் மறைவுக்குப் பிறகு தொடர்ந்து பல ஸ்டேடஸ்களைத் தட்டிக்கொண்டிருக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, ‘மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப்போகிறார்’ என்ற செய்தி பரவ, அதை மறுத்து ட்வீட் தட்டியிருக்கிறார் வர்மா. ‘ஸ்ரீதேவியின் வாழ்க்கையைப் படமாக எடுத்தால், அதில் நடிக்கக்கூடிய அளவுக்கு இங்கே நடிகைகள் யாரும் இல்லை’ என்பது, ராம் கோபால் வர்மாவின் கருத்து.

போயப்பட்டி சீனு இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய தெலுங்குப் படத்தில் முக்கியக் கேரக்டர்களில் நடிக்கவிருக்கிறார்கள், பிரசாந்த் மற்றும் சினேகா. வில்லனாக விவேக் ஓபராய் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.