Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ன்னடத்தில் ஒரே ஒரு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்த நடிகை தமன்னா, இதுவரை ஹீரோயினாக நடிக்கவில்லை. சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருடன் நடித்த தமன்னா, ‘‘இவர்தான் ஹீரோ என்றால், கன்னடப் படத்தில் நடிப்பேன்’’ என்றார். எனவே, தமன்னாவைக் கன்னடத்துக்கு அறிமுகம் செய்யும் வேலையில் தீவிரமாகியிருக்கிறார், புனித் ராஜ்குமார்.

மிஸ்டர் மியாவ்

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ மூலம் தமிழில் அறிமுகமான மெஹ்ரின், ஆனந்த் சங்கர் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாக இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

ம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட த்ரிஷாவுக்கு, ரஜினியுடன் நடிக்கமுடியாத வருத்தம் இன்றும் இருக்கிறது. ‘காலா’, ‘2.0’ படங்கள் கிட்டத்தட்ட ரெடி. அரசியல் என்ட்ரியில் தீவிரமாக இருக்கும் ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இதில் எப்படியாவது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை நெருங்கிய சினிமா நண்பர்களிடம் சொல்லியிருக்கிறாராம், த்ரிஷா.

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

மீபத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவைத் தனக்கான அரசியல் மேடையாக மாற்றிக்கொண்ட ரஜினியின் பேச்சுக்கு, சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பு. டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களின் தேவையைப் புரிந்துகொண்ட ரஜினி, இப்போது அதிகாரபூர்வமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியிருக் கிறார். ஏற்கெனவே ட்விட்டரில் அவ்வப்போது பதிவுகள் போடும் ரஜினி, இனி சமூக வலைதளங்களில் ஆக்டிவ் மோடில் இருக்க முடிவு செய்திருக்கிறாராம்.

வைரல்

மா
ர்ச் 6-ஆம் தேதி ஜான்வி கபூருக்குப் பிறந்தநாள். அம்மா ஸ்ரீதேவியின் மறைவால், பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்தவருக்கு, உறவினர்கள் சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்ட வைத்திருக்கிறார்கள். தவிர, தனது பிறந்தநாளில் அம்மாவுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி, அதை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் ஜான்வி.

ஹைலைட்

லக்கியம், சினிமா இரண்டையும் இணைக்கும் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன், ‘லாக்கப்’ நாவலை அடிப்படையாக வைத்து, ‘விசாரணை’யை இயக்கினார். இப்போது ‘தறி’ நாவலை அடிப்படையாக வைத்து ‘சங்கத் தலைவன்’ படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதுதவிர, பூமணியின் ‘வெக்கை’ மற்றும் கோடா நீலிமா எழுதிய ‘Shoes of the Dead’ நாவல்களையும் படமாக்க உள்ளார். ‘வடசென்னை’ படத்தின் பணிகள் முடிந்ததும், இப்படத்தின் வேலைகள் தொடங்கும்.

மிஸ்டர் மியாவ்

ன்னி லியோன் - டேனியல் வெபர் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஏற்கெனவே ‘நிஷா’ என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துவரும் இவர்கள், இந்த இரட்டைக் குழந்தைகளை வாடகைத் தாய் மூலமாகப் பெற்றிருக்கிறார்கள். ‘‘இது கடவுளின் திட்டம். ஏற்கெனவே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்திருந்தோம். மூன்று குழந்தைகளோடு எங்களைப் பெரிய குடும்பமாக மாற்றிய கடவுளுக்கு நன்றி’’ என்கிறார் சன்னி லியோன்.