Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

ஹாட் டாபிக்

யு
.எஃப்.ஓ, க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிக கட்டணத்துக்கு எதிராக, தயாரிப்பாளர்கள் தொடங்கிய ஸ்டிரைக், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் முடக்கியது. ‘‘புதுப்படங்கள் வெளியீடு இல்லை’’ என அறிவித்தவர்கள், மார்ச் 16-ம் தேதி முதல் படப்பிடிப்பு, ஆடியோ வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறாது என அறிவித்துள்ளனர். தவிர, வரி உள்பட தமிழக அரசுக்கு தியேட்டர் அதிபர்கள் விடுத்த சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திரையரங்குகளும் மார்ச் 16-ம் தேதியிலிருந்து மூடப்பட உள்ளன. இந்திய சினிமாவில் இதுவரை இதுபோன்ற ஒரு போராட்டம் நடந்ததில்லை. புதுப்படங்கள் வெளியாகாததைப் பயன்படுத்தி, ஏற்கெனவே ரிலீஸான படங்களை ரீ-ரிலீஸ் செய்துகொண்டிருக்கும் சூழலில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

கிடைக்கும் இடைவெளியில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ள நடிகைகளில் ஒருவர், ஓவியா. ‘பிக்பாஸ்’ போட்டி முடிந்ததும் கேரளாவின் வர்கலாவுக்கு ட்ரிப் அடித்த ஓவியா, இப்போது ‘காஞ்சனா-3’ பட வேலைகளுக்கிடையே கிடைத்த இடைவெளியில் கோவா பறந்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

ஹைலைட்

யன்தாரா, த்ரிஷா மட்டுமல்ல... அமலாபாலும் ஹீரோயினை மையப்படுத்துகிற கதைகளில் நடிப்பதில் தீவிரமாகிவிட்டார். புதுமுக இயக்குநர் வினோத் இயக்கும் ‘அதோ அந்தப் பறவைபோல’ படத்தில், அடர்ந்த காட்டில் தனியாக மாட்டிக்கொண்டு, அதிலிருந்து தப்பித்து வரும் கேரக்டரில் நடித்திருக்கிறார் அமலாபால். ஹீரோ இல்லாத இந்தப் படத்தில், பெரும்பாலான காட்சிகளில் ‘ஒன் வுமன் ஆர்மி’ அமலாபால்தான். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டு, ‘பேரழகி’ என அமலாபாலை வர்ணித்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

வைரல்

யன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி அமெரிக்காவுக்கு ட்ரிப் அடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் பாடகி ப்ரகதி இவர்களுடன் சேர்ந்து தியேட்டரில் படம் பார்த்து ரசித்திருக்கிறார். இந்தப் புகைப்படங்களை விக்னேஷ் சிவனும் ப்ரகதியும் ட்விட்டரில் பதிவிட, லைக்ஸ், ஷேர், கமென்ட் கொடுத்து ‘வாவ்’ ரியாக்‌ஷன்ஸ் காட்டியிருக்கிறார்கள், நயன்தாரா ரசிகர்கள்.

மிஸ்டர் மியாவ்

ஜெய், ராய் லட்சுமி, கேத்ரின் தெரசா, வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்கும் ‘நீயா-2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, கேரளாவின் அதிரப்பள்ளி அருவியில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, சரத்குமார் நடிப்பில் வெங்கடேஷ் இயக்கும் ‘பாம்பன்’ வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், மற்றொரு பாம்புப் படமாக இது உருவாகிக்கொண்டிருக்கிறது. பேய் சீஸனுக்குப் பிறகு, தமிழ் சினிமாவில் இப்போது பாம்பு சீஸன்.

மிஸ்டர் மியாவ்

தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கிவிட்ட உதயநிதி ஸ்டாலின், படங்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். சீனுராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், அட்லியின் உதவியாளர் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். இதில் இந்துஜா, ‘மேயாத மான்’ ப்ரியா பவானி சங்கர் இருவரும் உதயநிதிக்கு ஜோடி.