Published:Updated:

`` 70 வயசாகுது... பிக் பாஸ் போட்டிக்குக் கூப்பிட்டா நான் ரெடி'" - கமலா காமேஷ்

`` 70 வயசாகுது... பிக் பாஸ் போட்டிக்குக் கூப்பிட்டா நான் ரெடி'" - கமலா காமேஷ்

`` `பிக் பாஸ்' இரண்டாவது சீசன் ஆரம்பமாகும் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, `வீட்டுல சும்மா இருக்கிறதுக்கு நான் போட்டியாளரா போறேன். எப்படியாச்சும் என்னை அனுப்பிவைங்க'னு பொண்ணுகிட்ட சொன்னேன். `என்னம்மா விளையாடறியா? ஆரோக்கியமா இருக்கிறவங்களே சாப்பாடு, டாஸ்க் விஷயத்துல சிரமப்படுவாங்க. இந்த வயசுல, எப்படி உன்னால முடியும்? வீட்டுல உட்கார்ந்து டிவியில நிகழ்ச்சியைப் பாரு'னு உமா சொன்னாள்."

`` 70 வயசாகுது... பிக் பாஸ் போட்டிக்குக் கூப்பிட்டா நான் ரெடி'" - கமலா காமேஷ்

`` `பிக் பாஸ்' இரண்டாவது சீசன் ஆரம்பமாகும் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, `வீட்டுல சும்மா இருக்கிறதுக்கு நான் போட்டியாளரா போறேன். எப்படியாச்சும் என்னை அனுப்பிவைங்க'னு பொண்ணுகிட்ட சொன்னேன். `என்னம்மா விளையாடறியா? ஆரோக்கியமா இருக்கிறவங்களே சாப்பாடு, டாஸ்க் விஷயத்துல சிரமப்படுவாங்க. இந்த வயசுல, எப்படி உன்னால முடியும்? வீட்டுல உட்கார்ந்து டிவியில நிகழ்ச்சியைப் பாரு'னு உமா சொன்னாள்."

Published:Updated:
`` 70 வயசாகுது... பிக் பாஸ் போட்டிக்குக் கூப்பிட்டா நான் ரெடி'" - கமலா காமேஷ்

1980, 90-களில் குணச்சித்திர நடிகையாகப் புகழ்பெற்றவர், கமலா காமேஷ். நீண்ட காலமாக நடிக்காமல், எந்த சினிமா நிகழ்விலும் கலந்துகொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், `பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றார். `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பேரனான ஷாரிக் செயல்பாடு மற்றும் பேரக் குழந்தைகள் மீதான அன்பைப் பகிர்கிறார்.

``நீண்ட காலத்துக்குப் பிறகு, `பிக் பாஸ்' தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகிட்ட அனுபவம் எப்படி இருந்தது?"

``நான் நடிச்சு 15 வருஷத்துக்கும் மேலாகுது. வீடு, குடும்பம்னு மட்டுமே இருக்கேன். `பிக் பாஸ்' போட்டியாளரான ஷாரிக்கை வாழ்த்தி வழியனுப்ப குடும்பத்துடன் போயிருந்தோம். நான் வந்திருப்பதைக் கவனிச்ச கமல்ஹாசன், என்னை மேடைக்கு அழைச்சு மைக் கொடுத்தார். முதல்ல திருப்பிக் கொடுத்துட்டேன். இரண்டாவது முறை, மைக் பிடிச்சு என் மனசுல பட்டத்தை எதார்த்தமாப் பேசினேன். ரொம்ப நாள் கழிச்சு என்னைப் பார்த்த பலரும், ஆச்சர்யத்துடன் நலம் விசாரிச்சாங்க. டிவியில் என் பேச்சைப் பார்த்துட்டு போனிலும் பாராட்டினாங்க. அந்த நிகழ்வை டிவியில் பார்த்த என் பொண்ணு உமா, `ரொம்ப நாள் கழிச்சு பெரிய மேடையில் ஏறிய தயக்கம் இல்லாமல் ரொம்ப இயல்பாப் பேசினேம்மா'னு சொன்னாள்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`` `பிக் பாஸ்' போட்டியாளராக ஷாரிக் செயல்பாடுகள் பற்றி உங்க கருத்து...''

``நிகழ்ச்சியைத் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் பார்த்தேன். வீட்டுல ஷாரிக், என்னையும் உமாவையும் கைப்பிடிச்சு பேசுவான்; டான்ஸ் ஆடுவான். அப்படித்தான் மும்தாஜையும் தொட்டுப் பேசினான். அதுக்காக, மும்தாஜ் கோபப்பட்டாங்க. `நீங்க நீங்களா இருக்கணும்'னுதானே சொல்லப்பட்டுச்சு. ஷாரிக் எங்க வீட்டில் எப்படி இருப்பானோ அப்படித்தான் நிகழ்ச்சியிலும் இயல்பை மாத்திக்காமல் இருந்தான். அவன் தப்பு செய்யலை. அதனால், சீக்கிரமே எலிமினேட் ஆனபோது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை."

``ஷாரிக் எலிமினேட்டாகி வீட்டுக்கு வந்ததும் எப்படி ஃபீல் பண்ணீங்க?"

``என் பேரக் குழந்தையை 50 நாள்கள் பிரிஞ்சிருந்தப்போ மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. ஒருநாள் உமாவுக்கு சேனலிலிருந்து அழைப்பு. அங்கே போனதும், `ஷாரிக்தான் எலிமினேட். அவனை வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றேன்ம்மா'னு போனில் சொன்னாள். அவன் வந்ததும் ஆரத்தி எடுத்து, கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தேன். நல்லா ஓய்வு எடுத்தான். ராத்திரி 2 மணிக்கு மேலேதான் எல்லோரும் அவன்கிட்ட பேச ஆரம்பிச்சோம். நிகழ்ச்சியின் அனுபவங்களைச் சொன்னான். மற்றபடி அவன் மனசுல எந்தக் கவலையும் இல்லை. சந்தோஷமான அனுபவமா எடுத்துக்கிட்டான்."

``ரெண்டு பேரக் குழந்தைகளின் மீதான அன்பு பற்றி..."

``என் ஒரே பொண்ணு உமா, எப்பவும் ஷூட்டிங் பிஸியில் இருப்பாள். ரெண்டு பேரக் குழந்தைகளையும் நான்தான் வளர்த்து ஆளாக்கினேன். முதல் பேரன் ஷாரிக், 5 வயசுக் குழந்தையா இருந்தப்போ ராத்திரியில் சாதம் ஊட்ட ஆரம்பிக்கும்போது திடீர்னு, `அம்மா, எனக்குப் பருப்பு சாதமும் உருளைக்கிழங்கு ஃப்ரையும் வேணும்'னு கேட்பான். செய்ய ஆரம்பிப்பேன். பக்கத்துல வீட்டுல இருந்தவங்க, `இந்த நேரத்துக்குப் புதுசா சமைக்கிறியே'னு சொல்வாங்க. புள்ளை சரியாச் சாப்பிடறதுதான் எனக்கு முக்கியம். அதனால் கேட்டதைச் சமைச்சு ஊட்டுவேன். சின்னப் பேரன் சமர்த், பிறந்ததிலிருந்து இப்போ வரை என் அரவணைப்பில்தான் இருக்கான். இவங்ககிட்ட நான் பாட்டியா பழகினதில்லை; குளோஸ் ஃப்ரெண்டாகவே பழகினேன். `பாட்டினு கூப்பிடுங்கடா'னு கெஞ்சுவேன். ஆனால், அம்மானுதான் கூப்பிடுவாங்க. பெரியவங்களா வளர்ந்துட்டாலும், என் மேலான அன்பு மட்டும் கொஞ்சமும் மாறலை."

``பரபரப்பா நடிச்சுட்டு, இப்போ நடிக்காமல் இருக்கிறது எப்படி இருக்கு?"

``1980, 90-களில் குடும்பத் தேவைக்காக ஓடியாடி நடிச்சேன். பிறகு, மாப்பிள்ளையும் பொண்ணும் நடிக்க ஆரம்பிச்சு என்னை நல்லபடியா பார்த்துக்கிறாங்க. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு உடல்நிலை பிரச்னையால் ஓய்வில் இருந்தேன். நடிக்க வாய்ப்பு வரலை. வீட்டுல சும்மா இருக்கக் கஷ்டமா இருக்கு. நடிக்க ரொம்ப ஆசைப்படறேன். `பிக் பாஸ்' இரண்டாவது சீசன் ஆரம்பமாகும் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, `வீட்டுல சும்மா இருக்கிறதுக்கு நான் போட்டியாளராப் போறேன். எப்படியாச்சும் என்னை அனுப்பிவைங்க'னு பொண்ணுகிட்ட சொன்னேன். `என்னம்மா விளையாடறியா? ஆரோக்கியமா இருக்கிறவங்களே சாப்பாடு, டாஸ்க் விஷயத்துல சிரமப்படுவாங்க. இந்த வயசுல, எப்படி உன்னால முடியும்? வீட்டுல உட்கார்ந்து டிவியில நிகழ்ச்சியைப் பாரு'னு உமா சொன்னாள். எனக்கு 70 வயசு ஆகறது. அதனால என்ன? ஷாரிக் நிகழ்ச்சியிலிருந்து வந்ததும், `நல்லா சாப்டியாப்பா'னு கேட்டேன். `அங்கே சாப்பாடு போதலைம்மா'னு ஃபீல் பண்ணினான். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நான் போட்டியாளரா போயிருந்தா எல்லா டாஸ்கையும் போட்டிப்போட்டு பண்ணியிருக்க முடியாது. ஆனால், நான் நல்லா சமைப்பேன். இருக்கிறதை வெச்சு நான் ஒரு ஆளே எல்லோருக்கும் வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டிருப்பேன். ஒருவேளை அடுத்த சீசனில் என்னைக் கேட்டாங்கன்னா, நிச்சயம் போட்டியாளராப் போவேன். என் பொண்ணு என்ன சொன்னாலும் அவளைச் சமாளிச்சுட்டுப் போவேன்.''
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism